விளங்காத சத்தம் Jeffersonville, Indiana, USA 60-1218 1காலை வணக்கம், நண்பர்களே. மறுபடியுமாக இக்காலையில் சபைக்கு வந்துள்ளதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒருவார காலமாக, சில நிமிடங்களுக்கு ஒரு முறை என் ஜலதோஷத்தை பிசாசுக்குத் திரும்ப அளித்துக் கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெரியுமா, ஒவ்வொரு முறை அவன் அதை எனக்குத் தந்த போது, அதை அவனுக்கே திரும்ப அளித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம். அவன் தான் அதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று நான் தீர்மானித்து விட்டேன். பாருங்கள், ஒவ்வொரு முறையும் அவன் அதை எனக்குத் தரும் போது, அதை அவனிடமே தள்ளிவிடுகிறேன். அவன் அதை மறுபடியும் கொடுப்பதில் மிகவும் சமர்த்தன் என்று உங்களுக்குத் தெரியும். அதை எப்படி செய்வதென்று அவன் நன்கு அறிந்திருக்கிறான். அன்றிரவு நான் கூறினது போல், முடிவில் நாம் அவனுடைய பொறுமையை போக்கிவிடுவோம். 2ஒரு முறை ஒருவனுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்ட போது, அவன், ''நான் சுகமடையவில்லை என்று பிசாசு என்னிடம் கூறினான். நான் பார்த்த போது, வியாதியின் அறிகுறிகள் அத்தனையும் துவக்கத்தில் இருந்தது போலவே இருந்தன. நான், “சாத்தானே, நான் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை என்பது உண்மை தான். ஆனால் என்ன தெரியுமா? அவை என்னை விட்டுச் செல்லும் வரைக்கும், நான் தேவனுடைய மகிமைக்கென்று மும்முரமாக சாட்சி கூறப் போகிறேன். எனவே, நீ இருந்து கொண்டு நான் கூறுவதைக் கேட்க விரும்பினால், அப்படியே செய்'' என்றானாம். அதுவே, உண்மையான விசுவாசம். தேவனுடைய மகிமைக்கென்று சாட்சி கூறுங்கள். ஏனெனில் விசுவாசமானது நம்பப்படுகிற வைகளின் உறுதியும், காணப்படாத வைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.'' பாருங்கள்? நீங்கள் விசுவாசத்தை கண்களால் காண முடியாது. அதை நம்புகிறீர்கள், விசுவாசத்தை. 3இந்த வாரம் எனக்கு வீட்டில் அதிக அலுவல்கள் இருந்தன. முதல் நாளிலே ஏறக்குறைய முப்பது பேர் வந்திருந்தனர் என்று நினைக்கிறேன். அதன் பிறகு பேட்டிகள் போன்றவை இருந்தன. இது அதிகமாக அலுவல்களில் ஈடுபட்டிருந்த வாரம். இந்த வாரம் நான் சிலவற்றைக் கற்றுக் கொண்டேன். நான் சென்று... நகரில் எனக்கு அருமையான நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு மருத்துவர். நாங்கள் ஒன்றாக பள்ளியில் படித்தோம். அவர் பெயர் டாக்டர். சாம் அடேய்ர். அவர் மிகவும் நல்லவர். அவரை நான்கு ஆண்டுகளாக நான் காணவில்லை. இந்த வாரம் அவருடன் மூன்று நான்கு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் அவருடைய அலுவலகத்துக்கு சென்று கதவை மூடி பேசிக் கொண்டிருந்தோம். 4நான் அவரிடம் ஆவிக்குரிய விஷயத்தில் நான் கண்டவைகள், பொல்லாத ஆவிகளின் வல்லமையையும், அவை எப்படி நுழைந்து கொள்கின்றன என்பதைக் குறித்தும் எடுத்துரைத்தேன். அவர் மருத்துவ ரீதியாக அதை எப்படி நிர்ணயிப்பது என்பதை கூறினார். ஆச்சரிய விதமாக இவையிரண்டும் ஒன்றாக இணைகின்றன. அவர் என்னிடம், ஒரு குறிப்பிட்ட சளி மானிடரில் நுழைந்து விடுவதாகவும், இல்லையென்றால் அவனுக்கு ஜலதோஷம் பிடிக்க வேண்டிய அவசியமில்லையென்றும் கூறினார். அவர் சொன்னார். அது ஏதோ ஒரு சளி அங்கு வந்து, அதனுள் கிருமிகள் புகுந்து விடுகின்றன, அல்லது இந்த சளி அந்த கிருமிகளை உற்பத்தி செய்கின்றன என்று கூறினார். நான் அவரிடம், “சளி கிருமிகளை உற்பத்தி செய்யுமானால், அந்த கிருமிகளின் ஜீவன் எங்கிருந்து வந்ததென்று நான் அறிய விரும்புகிறேன்'' என்றேன். அவர், ''அது கூற முடியாதது தான். அது எங்களுக்குத் தெரியாது. எங்களால் கூற இயலாது'' என்றார். உங்களுக்கு குளிர் போன்ற ஏதோ ஒன்று உண்டாகிறது. அந்த கிருமி வெவ்வேறு உருவங்களில் உற்பத்தியாகின்றது. அது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தது, அது இந்த சளியிலிருந்து கிருமிகளை தோன்றச் செய்கிறது. இங்குள்ள ஒரு மருத்துவர் அல்லது ஒரு நர்ஸ்க்கு இதைக் குறித்து அதிகமாக தெரிந்திருக்கும். 5ஆனால் எனக்குள்ள சிரத்தை, அல்லது என் கருத்து, அந்த கிருமிக்குள் இருக்கும் ஜீவனைக் குறித்தே. கண்களால் காண முடியாத மிகச் சிறிய உறை போன்ற ஒன்றுக்குள் அந்த உறையை மிக சக்தி வாய்ந்த பூதக் கண்ணாடியைப் கொண்டே காண முடியும் - ஜீவன் உள்ளது. அந்த ஜீவன் எப்படி அவ்வளவு சளியை எடுத்துக் கொண்டு தன்னைச் சுற்றிலும் உறையை உண்டாக்கிக் கொண்டு ஒரு கிருமியாகின்றது? அது பிசாசு. அது பொல்லாத ஆவியின் சக்தி. அதை அவர்கள் ஒரு போதும் கண்டு பிடிக்க முடியாது. அவர்கள் மூலக் கூறை (molecule) காட்டிலும் சிறிய ஒன்றை காணும் நிலையை அடைந்துள்ளனர். சக்தி வாய்ந்த பூதக் கண்ணாடியைக் கொண்டே காணக் கூடிய இந்த மிகச் சிறு சளி கிருமி அணுவை அவர்களால் பிரித்தெடுக்க முடிகிறது. ஆனால், அதற்கு மேல் அவர்களால் காண முடியவில்லை. ஏனெனில், அதைப் பற்றி கொண்டிருக்கும் வேறு இயற்கை பொருள் எதுவுமில்லை. முன்னதாக நான்... 6ஜனங்கள் இப்பொழுது நின்று கொண்டிருக்கின்றனர். சார்லி, நீங்கள் நின்று கொண்டிருப்பதைக் காண எனக்கு விருப்பமில்லை... டேவிட்டும், ராட்னியும், அங்குள்ள மற்றோரும், உங்கள் வீட்டிற்கு நான் வரும் போது, என்னை மிகவும் நன்றாக நடத்துகிறீர்கள். ஆனால், தேவனுடைய வீட்டில் உங்களுக்கு உட்கார எனக்கு இருக்கை தர முடியவில்லை. நான் செய்யப் போவது என்னவென்று கூறுகிறேன். நீங்கள் இங்கு வருவீர்களானால், இதோ என் இருக்கை உள்ளது. இங்கு வரும்படி உங்களை வர வேற்கிறேன். இங்கு வந்து இந்த இருக்கையில் அமர விரும்பும் எவரும், இங்கு நடந்து வாருங்கள், பாருங்கள். உங்களை நான் வரவேற்கிறேன். அது மிகவும் நல்ல ஒரு இருக்கை. அது எனக்குச் சொந்தமானதல்ல. அது பள்ளியின் தலைவரான திரு. வில்ஸனுக்கு சொந்தம். இதை நான் 1937 முதற் கொண்டே வைத்திருக்கிறேன். எனவே, அது மிகவும் பழமையானது. சில நாட்களுக்கு முன்பு அவர் இங்கு வந்திருந்த போது, “ஏய், இன்னுமா என் நாற்காலியை வைத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். “ஒவ்வொரு இரவும் நான் பிரசங்கிப்பதற்கு முன்பு அதில் தான் உட்கார்ந்திருக்கிறேன்,'' என்றேன். அவர், ''அப்படியானால் அது நல்ல கரங்களில் உள்ளது. அது அப்படியே இருக்கட்டும்'' என்றார். 7உங்களை வரவேற்கிறோம். இங்கு ஒரு இருக்கை உள்ளது. சிறுவர்கள் உட்காரும் இடத்தில் உட்கார உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நீங்கள் சிறுவர்கள் என்று நினைத்துக் கொள்வார்களே என்று எண்ணாமலிருந்தால் - நீங்கள் சிறுவர் அல்ல. ஆனால், நீங்கள் மறுபடியும் சிறுவராக மாற விரும்பக்கூடும். ஆனால்... இங்கு இன்னும் ஒரு இருக்கை உள்ளது, அங்கு ஒன்றுள்ளது. ஒருக்கால் நீங்கள், முக்கியமாக நின்று கொண்டிருக்கும் பெண்களில் சிலர் இங்கு வந்து அமரலாம். நன்றி. இங்கு நீங்கள் வந்து, இந்த இருக்கையில் அமர்வீர்களானால் நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம். அதனால் பரவாயில்லை. நாம் பேசும் போது, ஒருவர் மேல் ஒருவர் கைபோட்டு தாங்கிக் கொள்ளுங்கள். 8சார்லீ , நீங்கள் இங்கு வருவீர்கள் என்று எண்ணினேன். நான் எப்பொழுதுமே அவரைக் கலாட்டா செய்வது வழக்கம். நான் அவரிடம், ''சபைக்கு வாருங்கள்'' என்றேன். அவர் இங்கு வந்து என்னைக் காணச் செய்ய முயன்றேன். அதன் பிறகு நான் அவரிடம், ''நீங்கள் சபைக்கு வருவீர்களானால் நான், ''இன்று காலை டாக்டர் சார்லீ காக்ஸ் செய்தி அளிப்பார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவி விடுவேன்'' என்றேன். அவர், ''நான் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்'' என்றார் (சகோ. பிரன்ஹாம் சிரிக்கிறார் - ஆசி). ஆகவே, நான் அவரைக் கூப்பிட்ட மாத்திரத்தில் அவர் பின்னால் நழுவி விட்டார், பாருங்கள். 9எனவே நாம் பாடத்தை துவங்கும் முன்பே சென்ற வாரம் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்தார்! உங்களுக்கு பிடித்ததா?... (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). என்னே, அது எல்லா விடங்களிலும் பரவி விட்டது அந்த செய்தி கலிபோர்னியாவிலும் கூட பரவி விட்டது. அவர்கள் கலிபோர்னியாவிலிருந்து தொலைப்பேசியில் என்னைக் கூப்பிட்டுக் கேட்டார்கள். இப்பொழுது அவர்கள் வரப்போகும் ஜனவரி மாதத்தில் அதே போன்ற ஒன்றை அங்கு நிறுவ விரும்புகின்றனர். பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் திடீரென்று ஷ்ரீவ்போர்ட்டிலும் கிரியை செய்கின்றார் என்று தோன்றுகிறது. அது ஒவ்வொரு இடத்துக்கும் செல்கிறது. இது வெளிப்பாட்டின் மணி நேரம். எனவே, நமது மத்தியில் தேவன் தம்மை வெளிப்படுத்துவதை, கூடாரத்திலுள்ள நமது சொந்த குழு கண்டு செழிப்படைவதைக் கண்டு மகிழ்வடைந்து, நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். அதைக் குறித்து நாம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, சபை அழைக்கப்பட வேண்டிய நேரத்தில் நாம் வாழ்ந்து வருகிறோமென்றும், அது, இப்பொழுது ஒழுங்கு படுத்தப்படுகிறதென்றும் நாம் விசுவாசிக்கிறோம். எனவே அவர்கள்... 10நான் டாக்டர் அடேய்ரிடம் அவருடைய அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஒன்றை அறிந்து கொண்டேன். அவர், எக்ஸ்ரேக்கள், பயங்கரமான ஜலதோஷம், அதை விளைவிக்கும் கிருமிகள், இப்படிப்பட்ட அநேக காரியங்களைக் குறித்து என்னிடம் பேசி தமது புத்தகங்களைக் கொண்டு வந்து எனக்கு விளக்கிக் காண்பித்தார். அவர், ''பில்லி, உம்மிடம் ஒன்றைக் கூறுகிறேன். பயங்கரமான ஜலதோஷத்தை போக்கும் ஒன்று கூட எங்களிடம் இல்லை'' என்றார். நான், ''தொண்டை புண் இருந்தால் ஏதாவதொன்றை வாயில் கொப்பளித்தால் சரியாகிவிடும் என்று எண்ணியிருந்தேன். பிரசங்கம் செய்த பின்பு இரவில் வீட்டுக்குத் திரும்பி ''லவோரிஸ்'' என்னும் தொண்டை மருந்தைக் கொண்டு, தொண்டை கரகரப்பை போக்குவதற்க்கென, நான் கொப்பளிப்பது வழக்கம். வாயை கழுவும் அந்த மருந்து அநேக ஆண்டுகளாக எங்கள் வீட்டில் இருந்து வருகிறது'' என்றேன். அவர், ''அதற்கு குளிர்ந்த தண்ணீர் போதுமானது. நீங்கள் எதைக் கொண்டு வாயைக் கொப்பளித்தாலும், அதனால் உபயோக முண்டு என்று எண்ண வேண்டாம். ஒருக்கால் உங்கள் தொண்டையிலுள்ள கிருமிகளை அது கழுவி வெளியே கொண்டு வரக்கூடும். அது ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் இரத்தத்தை அடைய முடியாது. அப்படி அடையுமானால், அது உங்கள் தொண்டையை வெடிக்கச் செய்து அதிலிருந்து இரத்தம் வரும். ஆகவே, அப்படி செய்ய முடியாது'' என்றார். எனவே மருந்து விற்பதற்காகவே, உட்கொள்ள அல்ல'' என்னும் பழமொழி உண்மையே. (சகோ. பிரன்ஹாம் சிரிக்கிறார் - ஆசி). 11என் வீட்டிலுள்ள மருத்துவ புத்தகங்களை நான் படிக்கும் போது, எனக்கு மருத்துவத்தில் சிரத்தையுண்டு, நிச்சயமாக - தேவனுடைய பிள்ளைகளுக்கு, மானிடருக்கு உதவியாயுள்ள எதிலுமே எனக்கு சிரத்தையுண்டு. அது சமாதானம் என்றால், சமாதானத்தைக் குறித்த பேச்சு வார்த்தைகளில் எனக்கு சிரத்தையுண்டு. வாழ்வதற்கு ஒரு மேலான சமுதாயம் இருக்க வேண்டுமென்பது எனது ஆவல். அவ்வாறே நம் பிள்ளைகள் படிப்பதற்கென சிறந்த பள்ளிகள் இருக்க வேண்டுமென்பது எனது ஆவல். நன்மையான, சரியான எதிலுமே எனக்கு சிரத்தையுண்டு. மருத்துவம் சில பெரிய காரியங்களை சாதித்துள்ளது. தேவன் அதை அநேக காரியங்களில் உபயோகித்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். நாம் மாத்திரம் தேவனுக்கு இன்னும் அதிகமாக உத்தமமாயும் பிரதிஷ்டையுள்ளவர்களாகவும் வாழ்வோமானால்; அவர்கள் ஏற்கனவே புற்று நோய்க்கும் இன்னும் மற்ற நோய்களுக்கும் மருந்தைப் பெற்றுள்ளனர். நாம் மாத்திரம்... தேவன் பரிகாரத்தை வைத்துள்ளார். நாம் மாத்திரம் அவரைக் கேட்போமானால், பாருங்கள், கேட்போமானால். சாக் தடுப்பு ஊசியை (salk vaccine) தேவன் நமக்குக் கொடுத்த காரணமே, சிறு பிள்ளைகள் இளம் பிள்ளை வாதத்தினால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதனால் தான். பொல்லாங்கான சாத்தான் சிறு பிள்ளைகளின் கால்களை முடக்கி வருகிறான். எனவே, தேவன் இந்த தடுப்பு ஊசியை அவர்கள் கண்டு பிடிக்கும் படி செய்தார். அது பெரிய காரியங்களை செய்து வருகிறது. அதற்காக நாம் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். தேவன் நம்மை எப்பொழுதுமே ஆசீர்வதித்து வருவதற்காக, நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 12சகோதரனே, எங்கே... சகோதரி. நாஷ், அவர் வீட்டுக்கு போகிறாரா என்ன? அவர்... (''இல்லை, ஐயா. அவர் நாற் காலிகளைக் கொண்டு வரப் போகிறார்“ என்று சகோதரி. நாஷ் விடையளிக்கிறார் - ஆசி.) ஓ, நல்லது. அது நல்லது. ஊ, ஊ, சரி. 13நான் வீடு திரும்பினவுடனே, ''இதெல்லாம் என்ன?'' என்று அறிய, அறையில் உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் படித்துக் கொண்டிருந்தேன். நீங்களும் என்னுடன் சேர்ந்து படிக்க வேண்டுமெனக் கருதி, நான் படித்துக் கொண்டிருக்கும் சிலவற்றை உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். கர்த்தர் நாங்கள் அறையில் தனித்திருக்கும் போது, என்னுடன் பேசுவது அவரே என்று உறுதி கொள்கிறேன். ஏனெனில், அவருடன் நான் அநேக அனுபவங்களை அங்கு பெற்றுள்ளேன். டாக்டர். அடேய்ர் என்னிடம் ஜலதோஷத்தைக் குறித்துக் கூறி அண்மையில் வெளியான மருத்துவ புத்தகங்களை என்னிடம் காண்பித்த போது; அது அண்மையில் நடந்த கண்டு பிடிப்பு என்று எனக்குத் தெரியும். இங்கு ஒரு மருத்துவர் உட்கார்ந்து கொண்டு நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பயங்கரமான ஜலதோஷத்துக்கு சிறந்தது என்னவென்று அவர்கள் அண்மையில் கண்டு பிடித்தது என்னவெனில்; அதை குணமாக்க மருந்து எதுவுமில்லை. ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுவதை அவர்கள் கண்டனம் செய்கின்றனர். அது வலிக்கு தற்காலிகமாக நிவாரணம் அளிக்கிறதேயன்றி, ஜலதோஷத்தைப் போக்க ஒன்றும் செய்வதில்லை. அது உங்களுக்கு சிறிது நிவாரணம் அளிக்கிறது. பயங்கர ஜலதோஷத்துக்கு சிறந்தது படுக்கையில் படுத்துக் கொண்டு உறங்குவதே. அதை எளிதாக எடுத்துக் கொள்வதே. படுக்கையில் படுத்து இளைப்பாறுவதே சிறந்தது. 14நான் இதைக் குறித்து ஆராய்ந்து விட்டு, ''டாக்டர். சாம், பயங்கர ஜலதோஷத்துக்கு இளைப்பாறுவதே சாலச் சிறந்தது, அப்படித் தான்!'' என்றேன். அவர், ''அது எல்லாவற்றிற்குமே சிறந்தது'' என்றார். நான், ''நல்லது, டாக்டர், அது மிகவும் நல்லது'' என்று கூறினேன். நாங்கள் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்து, பிறகு வீடு திரும்பினேன். நான் அவரிடம் கூறினேன். அவருக்கு முயல்கள், அணில்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், வெளியே செல்ல அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. நாங்கள் இளைஞராயிருந்த போது ஒன்றாக வேட்டையாடுவதும், மீன் பிடிப்பதும் வழக்கம், முக்கியமாக மீன் பிடித்தல். எனவே நான் வீடு திரும்பின போது, இது என்னவென்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். மிருகங்களைக் கவனியுங்கள். நாயை எடுத்துக் கொள்ளுங்கள். அது வியாதிப்படும் போது, சென்று தண்ணீர் குடித்து விட்டு ஒரு மூலையில் போய் படுத்துக் கொள்கிறது. அடுத்த நாள் காலையில், நான் படுக்கையில் படுத்துக் கொண்டு, வீட்டிலுள்ள மற்றவர்கள் எழுந்திருப்பதற்காக காத்திருந்த போது, இந்த எண்ணம் எனக்கு உதித்தது. அவர்கள், 6.30 மணிக்கு எழுந்திருப்பார்கள். நான், 4.30 அல்லது, 5.00 மணிக்கு எழுந்துவிடுவேன். அநேக முறை நான் படுத்துக் கொண்டு ஆலோசனை செய்யும் போது, தேவன் எனக்கு வெளிப்படுத்தித்திருக்கிறார். 15இதை நான் போதிப்பதில்லை. ஆனால் உங்களுக்கு தெரியுமா, ஆதியில் மனிதனை தேவன் உண்டாக்கின போது, அவன் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டுமெனும் நோக்கத்துடன் அவனை உண்டாக்கவில்லை. சிகிச்சைக்கு வேண்டிய அனைத்தும் அவன் தனக்குள்ளே பெற்றிருந்தான். அவன் தன்னில் தானே ஒரு அமைப்பாக இருந்தான். பாருங்கள்? அப்படியானால் சுகம் பெறுதல் வெளிப்புறத்திலிருந்து வராமல், உட்புறத்திலேயே அமைந்திருந்தது. நாம் நமக்குள் இருக்கும் கிருமிகளைக் கொல்வதற்கென, வெளிப்புற சிகிச்சையை பெற்றுக் கொள்கிறோம், அல்லது அறுவை சிகிச்சை செய்து நமது உறுப்புக்களில் ஏதாவதொன்றை அறுத் தெரிகிறோம், அல்லது சொத்தை பல்லைப் பிடுங்கி களைகிறோம். ஆனால், சுகம் பெறுதல் நாம் ஏதாவது தொன்றை தடவுவதனால் வருவதில்லை. உங்களுக்குள் இருக்கும் சத்தியின் மூலமாகவே நீங்கள் சுகமடைகிறீர்கள். அது பழுதடைந்த அல்லது, வெட்டி எடுக்கப்பட்ட திசுக்களை (tissues) மீண்டும் வளரச் செய்கிறது. எனவே, சுகம் பெறுதல் உங்களுக்குள்ளே உள்ளது. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், இதைக் குறித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். 16ஆதியில் மனிதன் உண்டாக்கப் பட்ட போது, அவன் தேவனாயிருந்தான். அவன் முற்றிலும் தேவனே, ஏனெனில் அவன் தேவனுடைய குமாரனாக இருந்ததால், தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டான். அவன் தேவனுடைய எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளியாயிருந்தான். மனிதனுக்கு பூமியின் மேல் ஆதிக்கம் அளிக்கப்பட்டது. அவனுக்கு மீன்களின் மேலும், ஆகாயத்துப் பறவைகள் மேலும், மற்றெல்லாவற்றின் மேலும், ஆதிக்கம் இருந்தது. அவன் பேசின போது, எல்லாமே அவனுக்குக் கீழ்ப் படிந்தது. ஏனெனில், அவன் தனக்குள் தேவனாயிருந்தான். அவன் வானத்துக்கும், பூமிக்கும் தேவன் என்னும் அந்த ஸ்திலிருந்தான். அவன் ஒரு ராஜா, அரசாளும் ராஜா. மனிதன் அப்படித் தான் இருந்தான். அவனுடைய தற் போதைய விழுந்து போன நிலையிலும் அவன் அந்த தோற்றத்தை உடையவனாயிருக்கிறான். 17அண்மையில் அவர்கள் ஒரு வர்க்கத்தை மற்றொரு வர்க்கத்துடன் சேர்க்க முயன்று, “மனிதன் தனக்குக் கீழான மிருகங்களிலிருந்து படிப்படியாக உருவானவன்,'' என்றனர். பாருங்கள், விஞ்ஞானத்தை வைத்துக் கொண்டு அவர்கள் விளையாடி, முடிவில் தங்கள் சொந்த தத்துவத்தையே தவறென்று நிரூபித்தனர். நீங்கள் இரண்டு வர்க்கங்களை ஒன்றோடொன்று சேர்த்து, மேலான வர்க்கம் ஒன்றை உருவாக்க முடியாது. அது கீழே தான் செல்லும். கலப்பு தானியம் அல்லது கலப்புள்ள எதுவுமே தன்னைத் தான் மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ள முடியாது. அன்றொரு நாள் நான் கூறினது போல, கழுதையும் பெண் குதிரையும் இனம் சேர்ந்து ஒரு கோவேறுக் கழுதையை தோற்றுவிக்கும். ஆனால், அந்த கோவேறுக் கழுதை வேறொரு கோவேறுக் கழுதையை தோன்றச் செய்ய முடியாது. அது தொடக்கத்துக்குச் சென்று, மறுபடியும் கழுதையும் குதிரையும் சேர்வதனால் உண்டாக வேண்டும். ஏனெனில் தேவன், ''ஒவ்வொரு விதையும் தன் தன் ஜாதியை முளைப்பிக்கக்கடவது'' என்றார். 18நாம் உண்டாக்கப்பட்ட போது; அண்மையில் அவர்கள், நமது சரீரம் ஒளியால் நிறைந்துள்ளது என்பதை அவர்கள் இப்பொழுது கண்டு பிடித்துள்ளனர். எக்ஸ்ரே கதிர்கள் அதை நிரூபிக்கின்றன. எக்ஸ்ரேக்கு தனக்கு சொந்தமான ஒளி எதுவுமில்லை. அது உபயோகிப்பது உங்கள் ஒளியையே. நீங்கள் நான்கு ஒளிக் கதிர்களுடன் பிறக்கிறீர்கள். சிறிது கழிந்து உங்களுக்கு இருபது, இருபத்தைந்து வயதாகும் போது - ஒரு ஒளிக் கதிர் போய்விடுகிறது. முப்பத்தைந்து வயதாகும் போது மற்றொன்று போய் விடுகின்றது; அல்லது நாற்பது ஆகும் போது மற்றொன்று போய்விடுகின்றது முடிவில், உங்களுக்கு அறுபத்தைந்து வயது கடக்கும் போது, நீங்கள் கடைசி ஒளிக் கதிர் கொண்டு வாழ்கிறீர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் எக்ஸ்ரே படம் எடுக்கும் போதும், நீங்கள் ஒளிக் கதிர்களை போக்குகின்றீர்கள். ஆகையால் தான் உங்களுக்கு... நீங்கள் பிள்ளைகளின் கால்களை எக்ஸ்ரே இயந்திரத்தின் அடியில் வைக்கும் போது, அவர்களுடைய சிறு உடல்களிலுள்ள ஒளிக் கதிர்களை அது போக்குகின்றது. அது உங்களுக்குள் இருக்கும் விண்வெளி வெளிச்சம் (Cosmic light). நீங்கள் ஒளி அணுக்களினால் நிறைந்திருக்கிறீர்கள். அது விண்வெளி வெளிச்சம். 19தேவன் வித்தியாசமான ஒளியாயிருக்கிறார். ஆயினும் அவர் ஒளி. தேவன் ஒளியாயிருக்கிறார் என்பதை நான் கூறவிழையும் போது அதற்கான மகத்தான அங்கே இருக்கின்ற புகைப்படத்தைக் குறித்து இப்பொழுது நான் நினைவு கூருகிறேன். நாம் தேவனுடைய குமாரர்களாக தேவனுடைய ஒளியில் நடந்தபோது; தேவன் விண்வெளி வெளிச்சம் அல்ல. ஆனால், தேவனுடைய ஒளி நமது சரீரங்களின் அணுக்களிலுள்ள விண்வெளி வெளிச்சத்தின் மூலம் இயங்கினது. அப்பொழுது நாம்... ஒருகாலத்தில் நாம் முற்றிலுமாக தேவனுடைய அசலான குமாரர்களாயிருந்தோம். ஆனால், வீழ்ச்சி வந்த போது... இன்றைக்கு ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், விசுவாசம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம் என்பவை; எல்லாமே இயற்கைக்கு மேம்பட்டவை. சரீரம் முழுவதுமே ஒரு குறிப்பிட்ட நிலையை படிப்படியாக அடைந்து விட்டது. நீங்கள் கடலின் ஆழத்தில் செல்லும்போது அங்குள்ள கடற்பூண்டைப் போல். அநேகமுறை கடலின் ஆழத்தில் செல்பவர்கள் இந்த கடற்பூண்டின் அடியில் சென்று தங்களை அறியாமலே அதில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது. அப்படித்தான், பாவமும் மானிட வர்க்கத்தை சிக்கவைத்துள்ளது. அப்படித்தான் குளிர்ந்த நிலை சபைக்கு செய்துள்ளது. அப்படித்தான் கம்யூனிஸ்டுகள் நாட்டுக்கு செய்துள்ளனர். அது மிகவும் துரோகமான செயல் அது நமது சரீரங்களைச் சுற்றிக் கொண்டு, இந்த தேவனுடைய ஒளியை வெளியே தள்ளுகிறது. ஸ்தாபனங்கள் விசுவாசத்தை மறுதலித்து, நமக்குள் இருந்த தேவனுடைய மகத்தான வல்லமையாகிய விசுவாசத்தின் கதிர்கள் அனைத்தையும் வெளியே தள்ளிவிட்டதன் விளைவாக, நாம் இப்பொழுது ஒரு விடுதியை அடைந்துள்ளோம். சபையானது விடுதியை விட கீழ்த்தரமான நிலையில் உள்ளது. ஏனெனில், அது அந்தகாரத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தேவனுடைய அற்புதங்கள் நடக்கும் என்பதை மறுதலித்து, அது நடக்காது என்று கூறுகின்றனர். 20இருப்பினும், மனிதனுக்குள் எங்கோ ஓரிடத்தில்; அவன் மாத்திரம் அந்த சிறு... நான் உங்களுக்கு விவரித்துக் காண்பித்த படி, அது ஒரு பொத்தான். ஒரு மனிதன் இரட்சிக்கப்படும் போது, அவனுடைய அவ்வளவு பாகம் தேவனாகின்றது. அந்த சிறு ஒளி உள்ளே வந்து, அவன் தவறு செய்வதை விட்டுவிடும்படி செய்கிறது. நீங்கள் குரோதம், பெருமை, சச்சரவு, அவிசுவாசம் இவையனைத்தையும் நீக்கிவிட முடியுமானால், அந்த சிறு பொத்தானைப் போன்ற தேவனுடைய வல்லமையின் ஒளி வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து கொண்டே வந்து, அவிசுவாசத்தை படிப்படியாக அகற்றும். நீங்கள் உங்கள் சரீர முயற்சியினால் இதை செய்ய முடியாது. நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்ட, பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவியத்தின் மூலம் இதை செய்கின்றீர்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உங்கள் மூலம் அசைவாடுகின்றார். நான் அதை ஓரிடத்தில் அண்மையில் கிரகித்துக் கொண்டேன்... 21அன்று காலை எலைஜ் பெர்ரி உயிரோடெழுப்பப்பட்டது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? உங்களில் சிலர் அங்கிருந்தீர்கள் அல்லவா? அநேகமுறை அதை செய்தித்தாளில் பார்த்திருக்கிறீர்கள். சகோதரி. வில்ஸனும் மற்றவர்களும் கைகளை உயர்தினதைக் கண்டேன். அவர் மரித்தபோது நான் அங்கிருந்தேன். அவர் இங்குதான் வசிக்கிறார். எப்பொழுதாவது ஒருமுறை சபைக்கு வந்து அதைக் குறித்து சாட்சி கொடுக்கிறார். அவர் மரித்து பல மணி நேரமாகிவிட்டது. அவர் நுரையீரலில் உள்ள இரத்த குழாய்கள் வெடித்ததால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு இறந்து போனார். அவர் உடலெல்லாம் இரத்தமயமாக இருந்தது. நான் அங்கிருந்து நடந்து சென்றுவிட்டேன். அந்நாட்களில் நான் ஒரு வாலிப பிரசங்கி. சகோதரி. ஜாக்சன் அப்பொழுது சபையின் அங்கத்தினராக இருந்தார்கள். மற்றும் ஒரு மெதோடிஸ்டு பிரசங்கியின் மனைவி, அவருடைய பெயர் இப்பொழுது எனக்கு மறந்துவிட்டது. ஷாஃபினர், சகோதரன், சகோதரி ஷஃபினர். அவர்கள் வைஸ்ஹார்ட் குடும்பத்தினருக்கு ஏதோ ஒரு விதத்தில் உறவினர். அவர்கள்... சகோதரி. ஷாஃபினர். அவர்கள் வைஸ் ஹார்ட் குடும்பத்தினருக்கு, ஏதோ ஒரு விதத்தில் உறவினர். அவர்கள்... சகோதரி. ஷாஃபினர் படுக்கையினருகில் நின்று கொண்டிருந்தார்கள். நான் அங்கிருந்து நடந்து செல்லத் தொடங்கினேன். அவர் மரித்த இடத்தில் இரத்த மயமாக இருந்தது. அவருடைய கண்கள் பின்னால் சொருகியிருந்தன, அவருடைய தொண்டைவீங்கியிருந்தது. அவர்கள் போர்வையினால் தலையை மூடியிருந்தனர். அவருடைய மனைவி அங்கிருந்தாள். அவர்கள் அழுது கொண்டிருந்தனர், தங்கள் அன்பார்ந்தவர்களுக்கு அறிவிக்க முகவரிகளைத் தேடிக் கொண்டிருந்தனர். 22நான் படுக்கையை விட்டு நடந்து செல்லத் தொடங்கினேன். அப்பொழுது ஒருவர் தம் கரத்தை என் மேல் போடுவதை உணர்ந்தேன். அது சகோதரி. ஷாஃபினர் என்று நினைத்தேன். நான் திரும்பிப் பார்த்தபோது அங்குயாருமில்லை. அதன் பிறகு நான் புறப்பட்டேன். நான் திரும்பிப் பார்த்த போது, அது என்னை விட்டுச் சென்றது. அங்கு சகோ. எலைஜ் மரித்துக்கிடந்திருந்தார். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் ஒன்றாக ஆற்றில் மீன் பிடிப்பது வழக்கம். நாங்கள் எப்படி ஒன்றாக இதைச் செய்தோமென்று உங்களுக்குத் தெரியும். அவர் ரயில் பாதையில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி, அது அவருடைய நுரையீரலை சிதைத்து விட்டது. இரத்தம் பெருக்கெடுத்து ஓடினது. அவர் காசநோய் கண்டு மரித்துப் போனார். நான் இந்தப் பக்கம் போகத் தொடங்கின போது, அந்த கரத்தை மறுபடியும் என்மேல் உணர்ந்தேன். நான் திரும்பிப் பார்த்த போது, அது என்னை விட்டு நீங்கினது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று அறிவதற்கு முன்பே, நான் அவர் மேல் கிடந்து, என் உதடுகளை அவர் உதடுகளின் மேல் வைத்தேன். அவர் மேல் படுத்துக் கொண்டதனால் என் மேலும் இரத்தம் ஓட்டிக்கொண்டது. நான் தேவனிடத்தில் முறையிட்டேன். அப்பொழுது ஏதோ ஒன்று என் காதின் பக்கமாக வருவதை உணர்ந்தேன். அது அவருடைய கரம். அவர் இங்கு நின்று கொண்டு அதைக் குறித்து சாட்சி கொடுப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், பாருங்கள். எப்படி அவர்... அவர் உயிர் திரும்ப வந்தது. அது இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவர் இன்றும் உயிரோடிருக்கிறார். அவர் அந்த வளைவு பாகத்தில் வசிக்கிறார். அண்மையில் அவர் இங்கு வந்து, சபையில் அதைக் குறித்து சாட்சி கொடுத்தார். 23ஒரு முறை கனடா அதைக் குறித்து அறிய என்னை தொலை பேசியில் அழைத்தது. நான் முதலில் கனடாவில் கூட்டங்களைத் தொடங்கின போது, அதைக் குறித்து சாட்சி கொடுத்தேன். அவர்கள் சவ அடக்கக்காரர் திரு. கூட்ஸ் என்பவரை அழைத்து, ''மரித்த எவராகிலும் சவ அடக்க அறையிலிருந்து (funeral parlor) உயிரோடெழுந்தார்களா?'' என்று கேட்டார்கள். செய்தித்தாளிலிருந்து வெட்டி எடுத்த பாகத்தை நான் இன்னும் வைத்திருக்கிறேன், அவர்கள், ''அநேக அற்புதங்கள் நடந்ததாக நாங்கள் கேள்விப்படுகிறோம்'' என்றனர். திரு. கூட்ஸ், சகோ. பிரன்ஹாம் எனக்கு நண்பர். அநேக அற்புதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், யாரும் உயிரோடு எழுந்ததாக முக்கியமாக சவ அடக்க அறையிலிருந்து யாரும் உயிருடன் எழுந்ததாக எங்களிடம் சான்று இல்லை'' என்றார். கனடா நாட்டு மக்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டனர். அடுத்த நாள்... என்னே, இச்செய்தி, செய்தித்தாளில் வெளியானது. நூற்றுக்கணக்கான மக்கள் எல்லாவிடங்களிலுமிருந்தும் தொலை பேசியில் விசாரித்தாக அவர் கூறினார். சகோ. பெர்ரியே அங்கு வந்து, தனக்கு சரீர உயிர்த்தெழுதல் உண்டானதென்று கூறி, செய்தித்தாளில் வெளியானதை எதிர்த்தார். அதன் பிறகு அது வீட்டில் நடந்ததென்றும், வெளியில் நடக்கவில்லையென்றும் அவர்கள் அறிந்து கொண்டனர். அவரை இன்னும் அவர்கள் சவ அடக்க அறைக்குக் கொண்டு செல்லவில்லை. 24ஐரேனியஸ், அல்லது பரி. மார்டின் என்று நினைக்கிறேன். அவர் தூக்கிலிடப்பட்டு மரித்த தன் நண்பனின் மேல் கிடந்ததாக அன்றொரு இரவு நான் புத்தகத்தில் வாசித்தேன். அது சரித்திரம். அவர் ஒருமணி நேரமாக கிடந்தபோது, அந்த மனிதனின் உயிர் திரும்ப வந்தது. எலியா மரித்த குழந்தையின் மேல் கிடந்து அது உயிர் பெற்றதாக நான் வேதத்தில் காண்கிறேன். பின்லாந்தில், சாலையின் ஓரத்தில் மரித்துக் கிடந்த சிறுவனை நான் நினைவு கூருகிறேன். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். ஜீன், நியூஸ்வீக் பத்திரிகையில் பார்த்தேன். அவர்கள், “தெய்வீக சுகமளிப்பவர்கள்'' என்று அழைப்பவர்களை லண்டனில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்படி அனுமதித்தார்களாம். மருந்துகளால் சுகப்பட்டோரைக் காட்டிலும் எண்பது சதவிகிதம் கூடுதலாக ஜெபத்தினால் சுகம் பெற்றார்களாம். வியாதியஸ்தருக்காக ஏறெடுக்கப்பட்ட ஜெபம். 25ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியானது. அது அமெரிக்காவில் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை. அவர்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஒருவரையும், வியாதியாயிருந்த ஒருவரையும் கொண்டு வந்து, அந்த சகோதரன் வியாதிப்பட்ட அவருக்காக ஜெபிக்கும் படி செய்தார்கள். அவர்கள் ஈயத்தகடு ஒன்றை ஜெபிக்கும் மனிதனுடைய கைக்கும் ஜெபிக்கப்படும் மனிதனுக்கும் இடையே இப்படி வைத்து, (ஈயத்தகடு கதிர்களை பிரதிபலிக்கும் என்று எவரும் அறிவர்) எக்ஸ்ரே படம் எடுத்தனர். அந்த மனிதனின் கையிலிருந்து ஒளிக்கதிர் புறப்பட்டு மற்ற மனிதனுக்குள் செல்வதை அவர்கள் கண்டு பிடித்தனர். பாருங்கள், அது உண்மை. ''வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று தேவன் கூறினபோது, அதன் அர்த்தம் என்னவென்பதை அவர் அறிந்திருந்தார்? இந்த மனிதன் வியாதியாயிருந்த மனிதனின் மேல் கைகளை வைக்கும்போது, அந்த மனிதனின் கையிலிருந்து ஒளி புறப்பட்டுச் செல்வதை (ஓ, தேவனே) அந்த எக்ஸ்ரே இயந்திரம் காண்பிக்கிறது. அப்படியிருக்க, தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்று கிடையாது என்று கூற ஜனங்கள் எப்படி அவ்வளவு முட்டாள்களாக இருக்க முடியும்? பாருங்கள், விஞ்ஞானம் கண்டுபிடித்த இந்த இயந்திரங்களும் கூட தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமை என்பவையெல்லாம் கிடையாது'' என்னும் இந்த சபைகளின் கருத்துக்களைக் கடிந்து கொள்கின்றன, பாருங்கள். 26சிக்காகோவிலுள்ள அந்த மனிதன் (இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் என்னை ஒரு அளக்கும் கருவிக்கு முன்னால் நிறுத்தினார். அந்த கருவியிலிருந்த கை, பொய் கண்டு பிடிக்கும் கருவியிலுள்ள கைபோல வேகமாக அசைந்தது. பாருங்கள். மரணத்தருவாயிலிருந்த அந்த ஸ்திரீயை கருவியைக் கொண்டு பரிசோதித்து பார்த்தபோது, அந்த கருவியின் கை வேகமாக சுழன்றது. ஒரு செய்தியை வானொலி மூலம் உலகம் பூராவும் நாற்பது முறை அனுப்புவதற்கு போதிய சக்தி அதில் உண்டாயிருந்து, அது கருவியை உடைத்துப் போட்டது. அது மரணத்தருவாயிலிருந்த அந்த பரிசுத்தவாட்டி, பாவ அறிக்கை செய்து கொண்டிருந்த போது. அதே கருவியை பொல்லாங்கன் ஒருவனின் கையில் இணைத்த போது, அது கருவியின் கையை மறுதிசையில் சுழலச் செய்து கருவியை உடைத்தது. அந்த நாத்திகன், ''தேவன் ஒருவர் தம்மை நல்ல இருதயத்துடன் துதிப்பவர்களுக்கு அந்த கருவியை உடைக்கும் அளவுக்கு வல்லமையை அளிக்கிறார் என்று இப்பொழுது அறிகிறேன். ஏனெனில், அந்த ஸ்திரீக்கு வல்லமையை அளிக்கும் ஏதோ ஒன்றுள்ளது. அதே சமயத்தில் பொல்லாங்கனிலுள்ள சக்தி அதை மறுதிசையில் தள்ளுகிறது. தேவனே, பாவியாகிய என் மேல் கிருபையையாயிரும்'' என்று சொல்லி, தன் இருதயத்தை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தான். அது உண்மை. விஞ்ஞானம் அறிந்துள்ளது! என்றாவது ஒரு நாள் தேவன் உங்களுக்குள் இருக்கிறார் என்பதைக் கண்டு கொள்வீர்கள், பாருங்கள். தேவனே மானிடருக்குள் வாசம் செய்தல். தேவன் நமக்குள் இருத்தல். ஓ, இவைகளுக்காக நான் தேவனை எவ்வளவாகத் துதிக்கிறேன், மிகவும் அற்புதமானது! 27இப்பொழுது வார்த்தையை அணுகும் முன்பு; இன்று நமது நேரத்தை எடுத்துக் கொள்வோம். ஏனெனில், இன்று காலை நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகின்றோம். நாங்கள் அடுத்த ஞாயிறு இங்கிருப்போமா என்று யாரோ ஒருவர் என்னைக் கேட்டார். எனக்கு இதுவரையிலும் தெரியாது. அவர்கள். கர்த்தர் அதை வெளிப்படுத்தினாலொழிய, எனக்குத் தெரிய வழியில்லை. கர்த்தர் அனுமதிப்பாரானால், அடுத்த ஞாயிறு இரவு ஒருக்கால் இருப்பேன். இந்த விலையேறப் பெற்ற சகோதரனிடமிருந்து, காலை நேரப் பிரசங்கங்களைப் பிடுங்கிக் கொள்கிறேன். (சகோ. நெவில், ஆமென், அதனால் பரவாயில்லை, சகோதரனே'' என்கிறார் - ஆசி). ஒருக்கால் அடுத்த ஞாயிறு இரவு, நான் இங்கு இருந்தால், கர்த்தருக்கு சித்தமானால், வெளியேயிருந்து எனக்கு அழைப்பு வந்தாலொழிய, நான் இங்கு தான் இருப்பேன். அப்பொழுது நான் அவருடைய நட்சத்திரத்தைக் கிழக்கிலே கண்டு, அவரைப் பணிந்துக் கொள்ள வந்திருக்கிறோம்,'' என்னும் பொருளின் பேரில் பிரசங்கிக்க எண்ணுகிறேன். பாருங்கள், ஒரு கிறிஸ்துமஸ் செய்தி. 28இப்பொழுது அவருடைய வார்த்தையை நாம் அணுகும் முன்பு, ஜெபத்தின் மூலம் அவரை அணுகுவோம். நிற்க முடிகிறவர் யாவரும் சிறிது நேரம் நில்லுங்கள். எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் மிகவும் சந்தோஷமுள்ள ஜனங்கள். எங்கள் மானிட ஆத்துமாக்கள் கொள்ளக் கூடாத அளவுக்கு நாங்கள் மிகுந்த சந்தோஷம் கொள்கிறோம். சில நேரங்களில் எங்கள் இருதயத்திலுள்ள சந்தோஷத்தை கிறிஸ்துவின் மூலம் வெளியே காண்பிப்பதற்கு நாங்கள் கூச்சலிட வேண்டியதாயுள்ளது. நாங்கள் வாழும் இக்காலத்தில் எல்லாமே குழப்பமுற்றிருக்கும் போது, உறுதியான அஸ்திபாரம் ஒன்றுண்டு. கடந்த நாட்களில் அறிவாளிகள் எழும்பி, தேவன் இருக்கிறார் என்பதை, தாங்கள் கண்டுபிடித்த இயந்திரங்களினால் பொய்யென நிரூபிக்கத் தலைப்பட்டனர் என்னும் போது, இப்பொழுது அதே இயந்திரங்கள் அவர் இருக்கிறார் என்பதை தேவனுடைய மகிமைக்கென்று சாட்சியாக அறிவிக்கின்றன. உண்மையாக யூதாஸ் குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன்,'' என்று கூற வேண்டியதாயிருந்தது. ரோம் நூற்றுக்கு அதிபதியும், ''இவர் உண்மையாகவே தேவனுடைய குமாரன்'' என்று கூறினான். அவருடைய சத்துருக்களே அதை சாட்சியாக அறிவித்தனர். விஞ்ஞான காலம் முடிவுக்கு வருகிறதை நாங்கள் காண்கிறோம். இதற்கு மேல் அவர்களால் போக முடியாது. எந்த நேரத்திலும் அவர்கள் ஒருவரையொருவர் சின்னாபின்னமாக்குவார்கள். அவர்கள் கண்டுபிடித்த எந்த இயந்திரங்களின் மூலம் நீர் இருப்பது பொய்யென நிரூபிக்கத் தலைப்பட்டனரோ, அதே இயந்திரங்கள் உமது மகிமையை சாட்சியாக அறிவிப்பதை நாங்கள் காண்கிறோம். கர்த்தாவே, அதற்காக உம்மை நாங்கள் எவ்வளவாக துதிக்கிறோம்! தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது என்பதை இன்று நாங்கள் நினைவு கூருவோமாக. 29கர்த்தாவே, எங்களுக்கு விசுவாசத்தைத் தாரும். தேவனுடைய வல்லமை எங்களுக்குள் இருக்கிறதென்றும், எங்கள் தசை நார்கள் அனைத்தும் தேவனுடைய ஒளியாயுள்ளது என்றும், அந்தகாரமும், பாரமும் எங்கள் ஆத்துமாவிலுள்ள நுண்ணிய துவாரங்களை அடைத்து விட்டன என்றும் சற்று முன்பு கரடுமுரடான விதத்தில் விவரித்துக் காண்பித்தேன். பரிசுத்த ஆவியானவர் தாமே இன்று காலை எங்கள் சரீரத்துக்குள் பரந்து, எங்கள் உள்ளான மனுஷனில் விசுவாசத்தை ஊற்றி, எங்கள் முழு சரீரங்களும் வாழ்க்கையும் தேவனுடைய வல்லமையினால் நிரம்பி வழிந்து, அதன் விளைவாக இயேசுகிறிஸ்து தமது சபையில் வாழ்வதை ஜனங்கள் காணும்படி செய்வீராக. பிதாவே, இதை அருளும். நாங்கள் எல்லாவற்றையும் இப்பொழுது உம்மிடம் சமர்ப்பித்து, நாங்கள் பேசப்போகும் சில வார்த்தைகளை - உமது அப்போஸ்தலர்களில் ஒருவரான அந்த மகத்தான பரி. பவுல் ஏற்கனவே எழுதி வைத்துள்ளதன் பேரில் நான் அளிக்கப்போகும் விரிவுரைகளை - நீர் ஆசீர்வதித்துத் தருமாறு கேட்கிறோம். பிதாவே, பரிசுத்த ஆவியானவர் தாமே இதை எடுத்து, ஜனங்களின் இருதயங்களில் வளரச் செய்து, இதைத் தொடர்ந்து நடக்கவிருக்கும் சுகமளிக்கும் ஆராதனைக்கென வேண்டிய விசுவாசத்தை அருளுமாறு ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறாம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 30[ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒலிநாடாவில் காலியிடம். ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார், மற்றொருவர் அதற்கு வியாக்கியானம் அளிக்கிறார். “இன்றைய தினம் என் ஜனமாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது, என்னை ஆராதிக்கும்படியாக ஜீவனுள்ள தேவனுடைய வீட்டில் ஒன்று கூடி வந்திருக்கிறபடியால், இன்றைய தினம் என்னுடைய ஆவியால் நான் இந்த வார்ததைகளை உங்களுக்கு உரைக்கிறேன்” என்று சர்வவல்லமையுள்ள தேவன் கூறுகிறார்; “இந்தக் வேளையில் மகத்தான விதானத்தில் நான் உங்களை சந்திப்பேன், இதோ, உங்கள் மத்தியில் என்னுடைய வல்லமையும் என்னுடைய ஆவியையும் வெளிப்படுவதை நீங்கள் காண்பீர்கள்.” “இன்றைய தினம் என்னுடைய தீர்க்கதரிசிக்கு நான் உரைக்கிறதாவது: இந்த விசுவாச வார்த்தைகளை நீ உயர்த்தினபடியால் ஆம், சர்வ வல்லமையுள்ள தேவனில் தங்களது நம்பிக்கையை வைக்க வேண்டுமென்று என் ஜனங்களுக்கு நீ புத்தி சொன்னபடியால், இன்றைய தினம் வல்லமையாக நான் உன்னோடு இருப்பேன் என்று நான் உரைக்கிறேன், மற்றும் உன்னுடை தொல்லைகளிலிருந்து நீ விடுவிக்கப்படுவாய்,” என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் உரைக்கிறார். ''தொல்லைபடுத்தப்பட்டுள்ள என் ஐனங்களாகிய உங்களுக்கு நான் உரைக்கிறதாவது, உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள நாட்களில் தேவனுடைய கரமானது வல்லமையாகவும், மகத்துவமாகவும் நீட்டப்பட்டுள்ளதைக் காண்பீர்கள். உங்கள் மத்தியிலே வல்லமையானதும், மகத்துவமானதுமான காரியங்களை செய்வேன். நீங்கள் இதற்கு முன்பாக நடந்திராத பல விநோதமான வழிகளில் உங்களை வழி நடத்துவேன் மற்றும் இதுவரை கண்டிராத அளவிற்கு சர்வ வல்லமையுள்ள தேவனின் செயல்பாட்டினை காண்பீர்கள்.'' ''என்னுடைய பராக்கிரமும், என்னுடைய வல்லமையும் பூமியின் மீதுள்ள எல்லா தேசங்கள் ஊடாகவும் இருக்கிற என் ஜனத்தின் மத்தியிலே மகத்தான அளவில் வெளிப்படும். இந்த காரியங்களை செய்து காட்டும் படிக்காகவும், நானே சர்வவல்லமையுள்ள தேவன் என்பதை உலகமானது அறிந்து கொள்ளும்படிக்காகவும், மற்றும் நான் என்னுடைய மகத்தானதும், பராக்கிரமமான வல்லமையிலே எழுந்தருளுகிறேன் என்பதற்கான நேரமானது, என் ஜனத்தின் மீது வந்திருக்கிறதென்று நான் கூறுகிறேன். அல்லாமல் நான் என்னுடைய சத்தியத்தையும் நிரூபித்து காண்பிப்பேன், என்று சர்வவல்லமையுள்ள தேவன் கூறுகிறார்.''] அன்புள்ள தேவனே, உமது நன்மைக்காகவும், இரக்கத்துக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது அன்பையும், வல்லமையையும் எங்களுக்கு வெளிப்படுத்தித் தந்ததற்காகவும், நீர் எங்களுக்கு செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களுக்கு தந்துள்ள ஆசீர்வாதங்களுக்கு நாங்கள் தகுதியற்றவர்கள். நான் உண்மையிலே... செய்தியின் தொனியிலிருந்து, அது முன்பு சென்ற அதே செய்தியென்றும், அழிவின் காலம் நெருங்குவதால் பாவிகள் உம்மைத் தேட வேண்டுமென்று அது அவர்களை அழைத்தது போல் காணப்படுகின்றது. பிதாவாகிய தேவனே, அப்படிப்பட்ட யாராகிலும் இன்று காலை இங்கிருக்கநேர்ந்தால், இதைக் குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரியாதென்றும், பரிசுத்த ஆவியானவர் மானிட உதடுகளின் மூலம் பேசி அதற்கு அர்த்தம் உரைத்து, உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக இருக்க அழைக்கப்பட்டு, அதை நீண்ட காலமாக புறக்கணித்துக் கொண்டு வருபவர்களை அழைக்கிறார் என்றும் அவர்கள் புரிந்து கொள்வார்களாக, கர்த்தாவே, அவர்கள் இன்று வந்து, உம்மை அறிந்து கொண்டு, மறைந்து கொள்ளும் இடத்தைக் கண்டு கொள்வார்களாக. ஏனெனில், அந்த நேரம் சமீபமாயிருக்கிறது. பிதாவே, செய்திக்காக நாங்கள் உம்மிடம் தொடர்ந்து காத்திருக்கும் இவ்வேளையில், இதை அருளுவீராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 31அந்த செய்திகள் எவ்விதம் புறப்பட்டுச் சென்றன என்று அறியாத யாராகிலும் இங்கிருப்பார்களானால்; இருவர் பேசினர். ஒருக்கால் ஒருவர் ஒன்றைக் கூறாமல் விட்டுவிட்டு, மற்றவர் அதை கூறியிருக்க வகையுண்டு. இரண்டாவதாக பேசினவர் எவ்வளவு சுருக்கமாக பேசினார் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். மற்றவர் கூறாமல் விட்டுவிட்டதை இவர் கூறியிருப்பார். அதற்கான அர்த்தம் உரைக்கப்பட்ட போது, எல்லாமே ஒரே வரிசையில் அமைந்திருந்து, பாவிகளை வரும்படி அழைத்தது. நான் என்னப் பேசப் போகிறேன் என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்நேரம் வரைக்கும் யாருமே, உலகத்திலுள்ள எவருமே அதை அறிந்திருக்க முடியாது. ஆனால், இந்த விஷயத்தை குறித்தே இப்பொழுது நான் பேசப்போகிறேன். நீங்கள் என்னுடன் முதலாம் கொரிந்தியர்; 14ம் அதிகாரத்துக்கு வேதாகமத்தைத் திருப்புங்கள். உங்களில் காணப்படும் எல்லா அவிசுவாசமும் எடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் வந்து தமது சொந்த வழியில் உங்கள் தசை நார்களில் நகர்ந்து, உங்கள் ஜீவியத்தை ஆட்கொள்வது நல்லது. 32வேத வாக்கியங்களைக் குறித்துக் கொள்பவர்களே இப்படிப்பட்ட விதத்தில் போதிப்பது உதவியாயுள்ளது என்று அன்றொரு நாள் நான் கவனித்தேன். எனவே, இன்று காலை நான் எழுதி வைத்துள்ளேன். நீங்கள் வேதவாக்கியங்களையும், முக்கியமான இடங்களையும், குறித்துக் கொள்ளவும் அது ஏதுவாயிருக்கும். நான் மறந்து போகக்கூடாது என்பதற்காக அவைகளைக் குறித்து வைத்துள்ளேன். இப்பொழுது, 1. கொரிந்தியர்; 14ம் அதிகாரம், 1 முதல் 8 வசனங்கள். கூர்ந்து கவனியுங்கள். அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள். ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசிங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிற படியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப் பக்தி விருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்தி விருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ, சபைக்கும் பக்தி விருத்தி உண்டாகப் பேசுகிறான். நீங்களெல்லாரும், அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும் அந்நிய பாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்தி விருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால், நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். மேலும் சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய பாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால் குழலாலே ஊதப்படுகிறதும்; சுரமண்டலத்தாலே, வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்? அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்? கொரி; 14: 1-8 33நீங்கள் வீட்டிற்கு சென்று முழு அதிகாரத்தையும் வாசியுங்கள். அதில் அநேக வசனங்கள் உண்டு, இந்த அதிகாரத்தில் மொத்தம் நாற்பது வசனங்கள். நீங்கள் வீடு சென்று இதை வாசிக்க விரும்புகிறேன். அது வரங்களை விவரிக்கிறது. இன்று காலை நான் கூற விரும்புவதற்கு, ''விளங்காத சத்தம்'' என்னும் தலைப்பை அளிக்க விரும்புகிறேன். 34பவுல் இங்கு அந்நிய பாஷைகள் பேசப்படுவதைக் குறித்து கூறுகிறான். அதற்கு அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாமல் போனால், சற்று முன்பு அந்நிய பாஷையில் பேசினவர்கள் என்ன பேசினார்களென்று யாருக்குத் தெரியும்? அவர்களுக்குத் தெரிய வழியில்லை. நிச்சயமாக அந்நியபாஷை பேசுகிறவன் தேவனிடத்தில் பேசுகிறான். அவனுடைய ஆவி நிச்சயமாக வார்த்தையை உரைக்கிறது. அவன் மகிமையுள்ள நிலையை அடைகிறான். அது அவனை ஆசீர்வதிக்கிறது. அவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான் என்று பவுல் கூறுகிறான். ஏனெனில், தேவன் அவனிடம் பேசுகிறார் என்னும் ஆறுதல் அவனுக்குள்ளது. ஆனால், அதன் அர்த்தத்தை சொல்ல ஒருவன் இருப்பான் என்றால், அது அவனுக்கு மாத்திரம் பக்திவிருத்தி உண்டாக்காமல், முழு சபைக்கும் பக்தி விருத்தி உண்டாக்குகிறது. ஏனெனில், அது எல்லோருக்குமே அதன்மூலம் தேவனுடைய வார்த்தையை அளிக்கிறது. 35அவர்கள், ''ஒரு தீர்க்கதரிசி இருந்தால், தீர்க்கதரிசி பேசும் போது சபை முழுவதும்'' என்றனர். தீர்க்கதரிசி என்பவன் யார்? தெய்வீக வார்த்தையினுடைய தெய்வீக வெளிப்படுத்துபவன் ஆவான், மக்களுக்கு அளிக்கத்தக்கதாக வார்த்தையின் வெளிப்பாட்டைக் கொண்டிருக்கும் ஒருவன் ஆவான். அப்பொழுது அது எல்லோருக்கும் பக்திவிருத்தி உண்டாக்குகிறது, பாருங்கள். அந்நிய பாஷைகளில் பேசக்கூடிய ஒரு மனிதன்: பாஷைக்கு அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாமல் போனால், சபையில் யாருமே அந்நிய பாஷைகளில் பேசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. நாம் இங்கு அந்நிய பாஷைகளில் பேச அனுமதிக்கப்படுவதன் காரணம் யாதெனில், அதற்கு அர்த்தம் உரைக்கக்கூடிய மூவர் அல்லது நால்வர். இப்பொழுது நம் சபையில் இருக்கின்றனர் - இப்பொழுது நம் சபையில், அந்நிய பாஷைகளுக்கு அர்த்தம் உரைக்கக் கூடியவர்கள், அர்த்தம் சொல்பவர் யாரும் இல்லாமல் போனால், அவர்கள் சபையில் அந்நிய பாஷைகளில் பேச நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வீட்டில் அவர்கள் ஜெபம் செய்யும் போது அந்நிய பாஷைகளில் பேசலாம், ஏனெனில் ஆவி அவர்கள் மேல் தங்கியுள்ளது, அவர்கள் தங்களுக்கே பக்திவிருத்தி உண்டாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் பேசும் அந்நிய பாஷைகளை அவர்கள் புரிந்து கொள்கின்றனர் என்று ஜனங்கள் எண்ணுகின்றனர். ஆனால், அவர்கள் பேசுவது என்னவென்று அவர்களுக்கே தெரியாது. அவர்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைக் கூற முற்படுகின்றனர். அதன் பிறகு அவர்களால் அதை நிறுத்த முடிவதில்லை, அது தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கிறது. அவர்கள் பேசுவதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பதாக மற்றவர்கள் எண்ணுகின்றனர். அது அவர்கள் உணராமலே ஏற்படும் ஒரு நிலை. 36மேடையின் மேல் இன்று நடந்தது போல், பகுத்தறிதலின் வரம் கிரியை செய்யும் போது; இங்குள்ள அநேகரை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. ஆனால், பரிசுத்த ஆவியானவர் இறங்கி வரும்போது கவனியுங்கள். அவர் கூட்டத்தினரின் நடுவில் சென்று, அவர்கள் யாரென்றும், அவர்கள் எங்கிருந்து வந்துள்ளனர் என்றும், என்ன நடந்ததென்றும், அவர்களுக்குள்ள வியாதி என்னவென்றும், இவையனைத்தும் எடுத்துரைக்கிறார். பாருங்கள், அது என்ன? அது, “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், கணுக்களையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவாக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? அது தேவனுடைய வார்த்தை. பவுல், “நீங்கள் எல்லாரும் அந்நிய பாஷைகளிலே பேசிக்கொள்ளும் போது, கல்லாதவர்கள் உள்ளே பிரவேசித்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?'' என்றான் (1. கொரி;14:23). ”ஆனால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் ஒருவன் இருந்து இருதயங்களின் அந்தரங்கங்களை வெளியரங்கமாக்கினால், அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து,'' ''தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறார், என்று அறிக்கையிடுவான்'' என்றான். 37இப்பொழுது, ''அர்த்தஞ் சொல்லுகிறவன் இருந்தால்.'' அந்நிய பாஷைக்கு அர்த்தம் சொல்லுவது தீர்க்கதரிசனமே. பாருங்கள், அது தீர்க்கதரிசனம். ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் தாமே பேசி அர்த்தம் உரைக்கிறார். அது குறிப்பிட்ட மக்கள் குறிப்பிட்ட காரியங்களைச் செய்ய வேண்டுமென்று கூறுகிறது. அது கூறப்படும் போது, அது யாருக்காக கூறப்படுகிறது என்பதை நீங்கள் தனிப்பட்ட விதத்தில் அறிந்து கொள்வீர்கள். எனவே அது மானிடரல்ல, அது தேவன் மானிடருக்குள் இருந்து கொண்டு கிரியை செய்கிறார் என்பதைக் காண்பது நலம். நாம் நிச்சயம் அதற்காக தேவனுக்கு நன்றி கூற வேண்டியவர்களாயிருக்கிறோம்! 38அது மற்ற சபைகளிலும் உள்ளதை நான் காண்கிறேன், சார்லஸ் ஃபுல்லர். எத்தனை பேர் ''பழமை நாகரீகமுள்ள எழுப்புதல் நேரம்'' என்னும் நிகழ்ச்சியைக் கேட்டிருக்கிறீர்கள்? பெரிய மனிதர். அண்மையில் அவர் என்னிடம், ''அந்நிய பாஷைகள் பேசுவதும், அர்த்தம் சொல்லுவதும் எங்கள் சபையில் உண்டு'' என்றார். அங்கு லாங் பீச்சில். அது உண்மை. அங்கு நான் அவருடன் அநேகமுறை பிரசங்கித்திருக்கிறேன். எனவே அவர்கள் அர்த்தம் சொல்லுதலைப் பெற்று, எல்லோரையும் அமைதியாக உட்காரும்படி செய்கின்றனர். பாருங்கள், காரியம் என்னவெனில், அந்த வரங்களை பயபக்தியாக அணுகுவதில்லை. சில சமயங்களில் ஒரு வரம் ஒழுங்கை மீறும்போது, அதை நீங்கள் அடக்க வேண்டியதாயுள்ளது. அது சாத்தான் உங்களை கப்பலினின்று கடலில் தள்ளுவதாகும். அவனால், ஒரு சத்தியத்தை உங்களுக்கு மறைத்து வைக்க முடியாமல் போனால், அதே சத்தியத்தை அவன் எடுத்து அதனுடன் உங்களையும் கடலில் தள்ளிவிடுவான். பாருங்கள்? அது உண்மை. அதைக் கொண்டு அவன் ஒரு மூட மதாபிமானத்தை உண்டு பண்ணி விடுவான், பாருங்கள். 39இங்கு நாங்கள் அதை நேர் வழியில் வைக்க முயல்கிறோம். அது மறுபடியுமாக அநேக ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக நமது சபையில் அசையத் தொடங்கிவிட்டது. ஆகவே, மற்றவர்கள் அதை அறிந்துகொள்ள அதை நேர்வழியில் வைத்திருக்கிறோம். இப்பொழுது போல், அநேக முறை, யாராவது ஒருவருக்கு அந்நியபாஷையில் பேச வேண்டுமென்ற எண்ணம் உண்டாகக்கூடும். ஆனால், அவர்கள் சும்மா இருக்க வேண்டும். பாருங்கள், நான்... நான் இப்பொழுது வார்த்தையைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். பாருங்கள்? பாருங்கள்? இதெல்லாம் முடிந்த பிறகு, பீட அழைப்பு அல்லது வேறெதாவது கொடுத்து முடிந்த பிறகு, ஒரு செய்தி புறப்பட்டு செல்லலாம், பாருங்கள். பிரசங்கத்தை அவர் முடித்த பிறகு, அல்லது அதற்கு முன்பு, அது அளிக்கப்படலாம். இந்த வரங்கள் தொடர்ந்து இயங்குமானால், அதற்கென்று நாம் ஒரு விசேஷித்த நேரத்தை ஒதுக்கி அவர்கள் கூடலாம். சபை ஆராதனை தொடங்குவதற்கு அநேக மணி நேரத்துக்கு முன்பு அவர்கள் ஒன்று கூடி, தீர்க்கதரிசிசனம் உரைத்து, அந்நியபாஷைகள் பேசி, அந்த செய்திகளை எழுதி இங்கே இந்த மேடையின் மேல் வைக்கலாம். போதகர் வரும் போது, அவர் எழுதப்பட்ட தாளை எடுத்துப் படித்து, ''கர்த்தர் உரைக்கிறதாவது. நாளை மறுநாள், ரயில் பாதையின் அருகில் வசிக்கும் சகோ. ஜோன்ஸ் அங்கிருந்து மாற வேண்டும். ஏனெனில், ரயில் பாதையில் ஓடிக் கொண்டிருக்கும் வண்டி ஒன்று தடம் புரண்டு அவர் வீட்டின் மேல் விழுந்து அதை நொறுக்கும்.'' ''கர்த்தர் உரைக்கிறதாவது. இன்று காலை இன்னின்ன பெயர் கொண்ட ஒரு ஸ்திரீ இங்கிருப்பாள். அவள் இன்னின்ன இடத்திலிருந்து வருகிறாள். அவள் சிறுமியாயிருந்த போது, ஏதோ ஒன்றை திருடிவிட்டாள். சகோ. பிரன்ஹாம் அல்லது சகோ. நெவில் அல்லது வேறு யாராகிலும், அவள் தன் தவறை அறிக்கை செய்த பிறகு, அவள் மேல்கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவள் சுகமடைவாள். அவளுடைய பெயர் இன்னின்னது'' என்கிறார். பாருங்கள்? ஆராதனை துவங்குவதற்கு முன்பு போதகர் இவைகளைப் படிக்கிறார். பாருங்கள்? 40இப்பொழுது அது நம்மிடையே குழந்தை வடிவில் உள்ளது, பாருங்கள். அது குழந்தை வடிவில் உள்ளது. பாருங்கள், வேறொன்றும் அதற்குள் நுழைந்து விடக்கூடாது. பாருங்கள், பிசாசு அதற்குள் நுழைந்து மாம்சத்தில் அதை தொடங்கப் பார்ப்பான். அவன் அப்படி செய்தால், முழு சபையையும் சுக்கு நூறாக கிழித்தெறிந்து விடுவான். பாருங்கள், அது மூட பக்தி வைராக்கியமாகி எந்நேரத்திலும் நடக்கக்கூடும். ஆனால், சபையோ ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு வரமிருந்து, அவன் தேவனுடைய வார்த்தையை எதிர்ப்பானானால், அது தேவனுடைய வரம் அல்ல என்று தெளிவாகிறது. ஏனெனில், தேவனுடைய எந்த வரமும் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, சாந்தமாயிருக்கும், பாருங்கள். ஆகையால் தான் தெய்வீக சுகமளித்தல் அது உள்ளவாறே உள்ளது, பாருங்கள். பரிசுத்த ஆவி வார்த்தைக்கு மரியாதை கொடுக்கிறார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் போன்றவைகளுக்கு. உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் இந்த வார்த்தைக்கு மரியாதை கொடுப்பார், ஏனெனில் அவரே அதை எழுதினவர், பாருங்கள்; அவர் உங்களுக்குள் இருக்கிறார். அது உங்களுக்குள் இருக்கும் தேவனுடைய ஒளி. வார்த்தை எங்கிருப்பினும், அது அதை கெளரவிக்கும். அது... தீர்க்கதரிசிகளின் ஆவி (அதாவது தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தைப் பெற்றிருப்பவர்கள் தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது, பாருங்கள், அதாவது வார்த்தையை வெளிப்படுத்துகின்ற தெய்வீக வெளிப்படுத்து பவனுக்கு. நமது நாளில் இவைகளைக் காண நாம் மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம் அல்லவா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). 41இது நிச்சயமில்லாத நாளாகும் (Day of Uncertainty). இங்கு, ''எக்காளம் விளங்காத சத்தமிட்டால் (ஆங்கில வேதாகமத்தில், Uncertain Sound) - அதாவது நிச்சயமில்லாத சத்தமிட்டால் என்று எழுதப்பட்டுள்ளது எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?'' என்று கூறப்பட்டுள்ளது. பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதும் போது, இதை எழுதுகிறான். அந்நாட்களில் அவர்களில் அநேகர் அவர்களுடைய இராணுவத்தில் வீரராயிருந்தனர். “எக்காளம் விளங்காத சத்தமிட்டால், எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?'' உங்களுக்கு எதைக் குறித்தும் நிச்சயம் இருக்க வேண்டும். அது சரியா இல்லையா என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் நிச்சயமில்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது நம்மெல்லாருக்கும் தெரியும் - நிச்சயமில்லாத நாள். இதைப் போன்ற வேறொரு காலம் இருக்கவேயில்லை என்பது என் கருத்து... ஏதேன் தோட்டத்தில் பாவம் பிரவேசித்து நித்தியத்தை காலவரையுள்ள காலமாக மாற்றிப்போட்ட அன்று முதற்கொண்டு, இன்றுள்ளது போல் இப்படிப்பட்ட நிச்சயமில்லாத காலம் இருக்கவேயில்லை. ஏனெனில், இந்த உலகத்தில் இன்று எந்த நம்பிக்கையும் இல்லை. 42நீங்கள், ''நான் காலங்களைக் கண்டிருக்கிறேன், உலகில் யுத்தங்கள் நடந்த சரித்திரத்தைப் படித்திருக்கிறேன்'' எனலாம். அது உண்மை. ஆனால், ஒரு நொடிப்பொழுதில் முழு உலகமும் வெடித்து நிர்மூலமாக்க கூடிய இத்தகைய காலம் இருந்ததில்லை. முன்பெல்லாம் அதற்கு அநேக வாரங்கள், அநேக மணிநேரம் பிடித்திருக்கும். ஆனால் இப்பொழுது அதற்கு ஒரு நிமிடம் போதும், அவ்வளவு கூட தேவையில்லை. ஒரு பொத்தானை அழுத்தினால், அது அழிந்து விடும். அவ்வளவுதான். அவர்களிடம்... க்யூபா அதை செய்ய முடியும், அது ஒரு சிறிய நாடு... ஹய்டி அதை செய்ய முடியும். எந்த ஒரு சிறு நாடும் உலகத்தை அக்கினிக்கிரையாக்கி, அதை தன் சுழற் பாதையிலிருந்து எப்பொழுதும் வேண்டுமானாலும் வெடிக்கச் செய்ய முடியும். பாருங்கள்? அதற்கு ஒரு வெறியன் போதும், உலகில் கோடிக் கணக்கான அத்தகைய மட்டு மீறிய வெறியர்கள் உள்ளனர். 43இங்கு நம்மை வந்தடையும் சில தற்கொலை தகவல்களைப் பாருங்கள். பிசாசு அவனை அதிகமாகப் பீடித்துள்ளது, அங்கு பெரிய கயிறுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு பொத்தானை அழுத்தினால் அவர்கள் கீழே சென்று விடுகின்றனர். அது மற்றவர்களின் ராடார் (Radar) திரைகளில் காணப்படுகின்றது. அவர்கள் தங்கள் பொத்தானை அழுத்துகின்றனர். அவ்வளவுதான். நாம் அந்நிலையை அடைந்துள்ளோம். ஒவ்வொருவனுக்கும் ஒரு திரையுண்டு. அவன் இந்த பெரிய திரையை கடலின் ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து, தீவுகளிலிருந்து, வட துருவத்திலிருந்து, தென் துருவத்திலிருந்து, எல்லாவிடங்களிலுமிருந்தும் கவனித்துக் கொண்டேயிருக்ககிறான். யாராகிலும் ஒருவர் பொத்தானை அழுத்தினால் அவர்களுக்குப் போதும். இங்கு பொத்தான் அழுத்தப்படுகின்றது, மற்றவர்கள் வரிசையாக அவரவர் பொத்தான்களை அழுத்துகின்றனர், அழுத்துகின்றனர், அழுத்துகின்றனர். என்ன நடக்கப் போகின்றது. ஓ, யோசித்துப் பாருங்கள். இன்று காலை நாம் ஆராதனையை முடித்து செல்வதற்கு முன்பு அது நேரிடக்கூடும். 44ஆனால் ஞாகபம் கொள்ளுங்கள், அது நடப்பதற்கு முன்பு தேவன் தமது சபைக்காக வருவதாக வாக்களித்துள்ளார். அவர் வருவதாக வாக்களித்துள்ளார். எந்த நேரத்தில் அவர் வருவாரென்று நமக்குத் தெரியாது. என்ன ஒரு மகிமையான காரியம்! அவருடைய பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அவர் பிரசன்னமாவார். இன்று காலை அவரைக் காண உங்களுக்கு பிரியம் அல்லவா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). “அவரைக் காண விரும்புகிறேன், அவருடைய முகத்தை நோக்கிக் கொண்டேயிருக்க, அங்கே அவருடைய இரட்சிப்பின் கிருபையைக் குறித்து, சதா காலங்களிலும் பாடிக் கொண்டிருக்க” என்னும் அந்த சிறு பாடலை நாம் பாடுகிறோம். இந்த வாழ்க்கை முடிவு பெற்று, துன்பங்களும் துயரங்களும் கடைசி முறையாக நம்மை விட்டுப் பறந்து செல்லும் போது, அவரை நாம் காண்போம். அங்கு நாம் இளைஞராய், மரிக்கக் கூடாதவர்களாய், சதாகாலங்களிலும் அவருடைய சமுகத்தில் இருப்போம். அங்கு பாவம், வியாதி, இருதய வேதனை, துயரம் ஒருபோதும் இராது. அப்பொழுது காலம் என்பது நித்தியத்துடன் இணைந்து விடும். என்ன ஒரு மகிமையான காரியம்! 45அது உங்களை என்னச் செய்ய தூண்டுகிறது? எல்லோரையும் உங்களால் கூடுமானவரை எடுத்துக் கொள்ளப்படுதல் என்னும் ஸ்தானத்துக்கு கொண்டுவர நீங்கள் பணிபுரியும்படி செய்கிறது. என்னை நான் மறுபடியும் பிரதிஷ்டை செய்து கொண்டு விட்டேன். நான் இரட்டிப்பாக பணிபுரிவேன் என்று தேவனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் செய்துவிட்டேன். நான் மீண்டும் பதினெட்டு இருபது வயது இளைஞனாக, இப்பொழுது தெரிந்துள்ள அனைத்தையும் தெரிந்திருக்க ஆசைப்படுகிறேன். அப்பொழுது, இன்னும் சிறிது காலம் நான் நிலை நிற்கவோ, அல்லது இன்னும் சிலரைச் சந்திக்கவோ, அப்படிப்பட்ட ஏதாவதொன்றை தேவனுடைய இராஜ்யத்தின் நிமித்தம் என்னால் செய்ய முடியும். இன்று காலை இங்குள்ள இளைஞர்களே, உங்களில் இன்னும் அதிக இளமை உள்ளது. குடும்ப பாரம் எதுவும் இப்பொழுது உங்களுக்கில்லை. தேவன் தாமே நாம் வாழும் நேரத்தைக் குறித்த தரிசனத்தை இன்று நீங்கள் காணச் செய்வாராக. 46நிச்சயமற்ற நிலை. இந்த நிச்சயமற்ற நேரத்தில் சில நிச்சயமற்ற காரியங்களைக் குறித்துப் பார்ப்போம்... நாம் போர்களைக் குறித்துப் பேசினோம். போர் தளபதிகளின் குரலில் நிச்சய மற்ற தன்மை காணப்படுகிறது. ''எங்களால் புரிந்துகொள்ள இயலவில்லை'' என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் பெரிய கூட்டங்கள், சந்திப்புகள் போன்வற்றை செய்கின்றனர். ஆனாலும், அவர்களால் சமரச நிலைக்கு வர முடியவில்லை. அது நிச்சயமற்ற நிலை. அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. போர்களைக் குறித்து ஆராயும் போர் தந்திர வல்லுநர்களிடம் இன்றைய பிரச்சினைகளுக்கு பதில் எதுவுமில்லை, யாருக்குமே பதில் இல்லை. அவர்களால் ஒன்றுமே கூற முடியவில்லை. 47விஞ்ஞானமானது எல்லாவிதமான உபாயங்களையும் கைக் கொண்டு, எத்தனையோ விதமான இயந்திரங்களைக் கண்டு பிடித்து, நுண்ணறிவு படைத்தவர்களைக் கொண்டு, யோசிக்கக் கூடிய இயந்திரங்களை உபயோகித்து, இவையனைத்தும் செய்த பிறகு, ''நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் உள்ளன'' என்கின்றது. அதுவே அவர்களுடைய பதில். இதிலிருந்து தப்பி நாம் வாழ முடியுமா? வெடிகுண்டுகள் நம்மை அணுகாதிருக்க நாம் பூமியில் போதிய அளவு ஆழமாகத் தோண்டி அங்கு ஒளிந்து கொண்டு, ஒரு நாடாக தப்பிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அது பூமிக்குள் ஒரு மைல் ஆழப்பள்ளத்தை வெடித்து உருவாக்கும். நீங்கள் பத்து மைல்கள் ஆழத்திற்கு செல்ல முயன்றால் என்னவாகும்? அப்படிச் செல்வீர்களானால் பாறைக் குழம்பை அடைவீர்கள். நீங்கள் அந்த ஆழத்துக்கு செல்வீர்களானால், அங்குள்ள அழுத்தம் உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு எலும்பையும் உடைத்து விடும். கீழே வழியேயில்லை. செல்ல வேண்டிய வழி மேலே! ஓ, அந்த பதிலைப் பெற்றிருப்பதனால் நான் மகிழ்கிறேன். நீங்களும் அல்லவா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி ). நிச்சயமான ஒரு சத்தம், அந்த எக்காளம். 48அவர்கள் ஆழத்தில் தோண்டி குகைகளுக்கு செல்லுதல் என்பது. அவர்கள் அரசாங்கத்தையும், மற்றவைகளையும் நாக்ஸ்கோட்டையைச் சுற்றிலும், மாம்ம குகையினுள்ளிலும் கொண்டு செல்லப் போவதாக நான் கேள்விப்படுகிறேன். அங்கு அவர்கள் ஒரு இடத்தை ஆயத்தம் செய்து வருகின்றனர்... சண்டை ஏதாகிலும் நடந்தால், அவர்கள் அரசாங்கத்தை அந்த குகைக்குள் கொண்டு செல்ல எத்தனித்துள்ளனர். அவர்கள் குகைளிலும் மற்ற இடங்களிலும் ஒளிந்து கொள்வார்கள் என்று வேதம் வெளிப்படையாய் கூறவில்லையா? நிச்சயமாக. அவர்களுக்கு இந்த பிரச்சினைக்கு பதில் எதுவுமில்லை. நமது இராணுவ பலம் அதற்கு பதிலைக் கொண்டிருக்கவில்லை. 49முன்பெல்லாம் விஞ்ஞானம், “நாம் பெரிய இயந்திரத்தை உண்டாக்குவோம். நமக்கு ஜெர்மனியைக் காட்டிலும் சிறந்த துப்பாக்கிகள் உள்ளன. நமக்கு அதிக தைரியமும் சக்தி வாய்ந்த - அந்த பழமையான யாங்கீ சக்தி வாய்ந்த - ஜனங்கள் உள்ளனர். நாம் முரசு கொட்டி, எக்காளம் ஊதி, கொடியைப் பறக்கவிட்டு சிறிது கரகோஷம் செய்வோம். நாம் அங்கு செல்வோம். அதைச் செய்ய நமக்குப் பழைய சக்தி உண்டு'' என்றெல்லாம் கூறினது. நீங்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதை இம்முறை நாம் இங்கேயே பெற்றுக் கொள்ளப் போகின்றோம். ஆம். யாராவது ஒருவர் பொத்தானை அழுத்த வேண்டும். அதுதான் நடக்க வேண்டியது. ஒரே ஒரு மனிதன் அதற்கு பயிற்சி பெற்ற ஆயிரம் இராணுவ வீரர்கள் அவசியமில்லை. அந்த பொத்தானை அழுத்த, புத்தியில்லாத ஒரே மனிதன், பிசாசினால் பீடிக்கப்பட்ட ஒரே மனிதன் போதும், பாருங்கள். அவர்களுக்கு இந்த பிரச்சினைக்கு எந்த பதிலும் இல்லை. எனவே, முடிவில் அவர்கள் என்ன கூறினர்? ''நல்லது, நள்ளிரவுக்கு இன்னும் மூன்று நிமிடங்கள் உள்ளன'' என்றனர். 50அதைக் குறித்த ஒரு திரைப்படம் என்னிடம் உண்டு. தற்போது அதை என் மருத்துவர் நண்பரிடம் கொடுத்திருக்கிறேன். அது, ''நள்ளிரவுக்கு இன்னும் மூன்று நிமிடங்கள்'' என்னும் தலைப்பு கொண்டது. யூதர்கள் முதலாவதாக பாலஸ்தீனாவுக்கு திரும்பிச் சென்ற அந்த நேரத்தில், இந்தப்படம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அவர்கள் ஊனமுற்ற வர்களை முதுகில் சுமந்து நடந்து செல்வதை அந்த படம் காண்பிக்கிறது. அவர்கள் அவர்களை பேட்டிக்கண்டு, “மரிக்கவா நீங்கள் சொந்த தேசத்துக்கு திரும்பிச் செல்கிறீர்கள்?'' என்று கேட்டனர். அவர்கள், ''மேசியாவைக் காண நாங்கள் செல்கிறோம்'' என்றனர். 51தீர்க்கதரிசி வாக்களித்தது என்ன? உங்களில் அநேகர் லூக், லைஃப் இன்னும் மற்ற பத்திரிக்கைகளை படிக்கிறீர்கள். அவர்கள் தங்கியிருந்த ஈரான் இன்னும் பல்வேறு இடங்களிலிருந்து ஆகாய விமானங்கள் அவர்களைக் கொண்டு வரும் படங்களை அவர்கள் வெளியிட்டிருந்தனர். அவர்கள் ஆகாய விமானத்தில் ஏற மறுத்தனர். பாருங்கள், அவர்கள் அப்பொழுதும், இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், ரோம சாம்ராஜ்யம் அவர்களைச் சிதறடிப்பதற்கு முன் அவர்கள் செய்து வந்தது போல், அவர்கள் பழைய மரக்கலப் பையைக் கொண்டு உழுது வந்தனர். அவர்கள் விமானங்களில் ஏற மறுத்தனர். ஆனால், ஒரு வயோதிப... அவர்களுடைய வயோதிப ஆசாரியன் - ஒரு வயோதிப ரபீ - அங்கு நடந்து சென்று, “என்றாகிலும் ஒரு நாள் நாம் கழுகின் சிறகுகளின் மேல் சொந்த நாடு திரும்புவோம் என்று தேவன் நமக்கு கூறவில்லையா?'' என்றார். அதைக் கேட்டு அவர்கள் தங்கள் கலப்பைகளை கீழே வைத்துவிட்டு, விமானத்தில் ஏறி, சிறகுகளின் மேல் பறந்து சென்றனர். ஏசாயா அதைக் கண்டான். ஆனால், அது என்னவென்று அவன் அறிந்து கொள்ளவில்லை. அது பறக்கும் பறவையைப் போல் அவனுக்குத் தென்பட்டது. அவன் இஸ்ரவேல் ஜனங்கள் மேலும் கீழும் ஆடிக்கொண்டு வீடு திரும்புவதைக் கண்டான். விமானங்களில் பயணம் செய்துள்ள உங்களுக்கு அது என்னவென்று தெரியும். அது அலையைப் போல் மேலும் கீழும் ஆடிக்கொண்டு, ஒரு பறவை பறந்து செல்வதைப் போல் செல்கின்றது. அவர்கள் விமானத்திலிருந்து இறங்கியவுடன், “மேசியா எங்கே?'' என்று கேட்டனர். அவர்கள் அவரைக் காண விரும்பினர். யூதர்கள் அவ்வாறு வீடு திரும்புவதைக் காணும் உங்களுக்கு, அது தேவனுடைய கடிகாரமாக விளங்குகிறது. நாம் முடிவில் இருக்கிறோம். அண்மையில் இஸ்ரவேல் ஒரு நாடாக ஆனது. அவர்கள் எல்லாவற்றையும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு சொந்த நாணயம், சொந்த இராணுவம், சொந்தமாக எல்லாமே உள்ளன. அவர்கள் மறுபடியும் ஒரு நாடாகி விட்டனர். பாருங்கள்? ஓ, என்ன ஒரு அழகான கருத்து அதைக் குறித்து சில வேத வாக்கியங்களை சற்றுகீழே எழுதி வைத்துள்ளேன். ஆம், அதைக் குறித்தவைகளை. 52இப்பொழுது போர் எப்பொழுது நடக்கும் என்பதைக் குறித்து நாம் நிச்சயமற்றவர்களாக இருக்கிறோம். வானொலியில் கேளுங்கள். அவர்கள், ''இவ்வளவு பொருட்களை உங்கள் அடிவாரத்துக்கு கொண்டு செல்லுங்கள். குண்டு விழா நேரிட்டால், அங்கு போதிய தண்ணீரை சேர்த்துவையுங்கள். உங்கள் வானொலி பெட்டியை அங்கு கொண்டு சென்று, இறுக்க மற்ற நிலையில் இளைப்பாறுங்கள்,'' என்று அவர்கள் வானொலியில் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். குண்டு விழா நேரிட்டால் அதிலிருந்து தப்பி வாழ நீங்கள் கவலைப்படாமல் அடிவாரத்துக்கு செல்வதற்கென அடிவாரம் கொண்ட சிறு வீடுகளை அவர்கள் விளம்பரம் செய்கின்றனர். அவர்கள் நியூ ஆர்லியன்ஸில் ஒரு குண்டு போட்டால், அதிலிருந்து விழுகின்ற கதிரியக்க சக்தி உங்களை இங்கு பாதிக்கும். நீங்கள் எப்படியும் மரிப்பீர்கள். எனவே, உள்ளே தங்கி, இன்னும் சிறிது காலம் வாழுங்கள். அப்படிப்பட்ட ஏதோ ஒரு விளம்பரம். ஓ, என்னே! அதை நான் நம்புவதில்லை. அதை முயற்சி செய்வதே மூடத்தனம் என்று நான் நம்புகிறேன். அது உண்மை. ஆனால், சபையானது கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அப்பொழுது இங்கு நீங்கள் இருக்கப் போவதில்லை. அது உறுதி. ஏனெனில் தேவனுடைய வார்த்தையின் நிச்சயம் அவ்வாறு நமக்கு வாக்களித்துள்ளது. 53நிச்சயமாக வேறொன்றை நாம் எடுத்துக் கொள்வோம், அப்படி அநேக காரியங்கள் உள்ளன. வேலைகள் நிச்சயமானவை அல்ல. எந்த நேரம் என்பதும் உனக்குத் தெரியாது. இன்றைக்கு நீ வேலை செய்கின்றாய் நாளை எப்படியென்று உனக்குத் தெரியாது. அது அவ்வளவு நிச்சயமற்றது. ஒரு நல்ல வேலையில் உள்ளதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், அடுத்த நாள் உங்கள் முதலாளி வந்து உங்களை துரத்தி விட்டு வேறொருவரை அமர்த்துகிறார். ஆகவே, வேலையும் நிச்சயமற்றதாயுள்ளது. 54வீட்டு வாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்வோம். அதுவும் நிச்சயமற்றதே. நமது ஸ்திரீகளின் நல்லொழுக்கத்துக்கு என்ன நேர்ந்ததென்று எனக்குத் தெரியவில்லை. விவாகரத்து பெருகி வருகின்றது. அது மிகவும் பயங்கரமானது. விவாகரத்து நீதிமன்றங்களில் ஜன நெருக்கம் அதிகமுள்ளது. பையன்களும், பெண்களும் மணம் புரிந்து ஒன்றாக வாழ்ந்து இரண்டு, மூன்று குழந்தைகளைப் பெறுகின்றனர். அதன் பிறகு அவர்கள் பிரிந்து போய் வேறொருவனை அல்லது வேறொருத்தியை மணம் புரிகின்றனர், மணம் புரிகின்றனர், மணம் புரிகின்றனர். அவர்களுடைய குடும்ப நிலை? அன்றொரு நாள் நான் மிகவும் எளிய ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அந்த மனிதன், ''நான் வருமானத்துக்கு மிஞ்சின செலவு ஏற்படாமல் எப்படி சமாளிக்கப் போகிறோனோ'' என்றார். நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர் பாடுபட்டு வேலை செய்தார். அவருக்கு மிகவும் உத்தமமான ஒரு மனைவி இருந்தாள். தரையில் அழுக்கு படிந்த முகத்துடன் நான்கு அல்லது ஐந்து பிள்ளைகள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நான், ''நீர் ஒரு கோடீஸ்வரன்'' என்றேன். அவர், ''ஹ, நல்லது, சகோ. பிரன்ஹாம். உமது சொற்களை நான் மறுத்துக் கூறமாட்டேன். சகோதரனே, என்னிடம் ஒரு பைசா கூட இல்லை'' என்றார். நான் அவரிடம், “ஆனால், பணம் வாங்க முடியாத ஒன்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்குள்ள உங்கள் மனைவிக்கு உடுக்க ஒருக்கால் இரண்டு உடைகள் கூட இல்லாமல் இருக்கலாம். அதுவும் வேறு யாரோ அவளுக்கு கொடுத்தது. ஏனெனில், உமக்கு எப்பொழுதாவது ஒரு நாளைக்கு மாத்திரம் வேலை கிடைக்கிறது. ஆனால், அவளைப் பாருங்கள், அவள் எவ்வளவாக உமக்கு உத்தமமுள்ளவளாய் இருக்கிறாள் என்று. இன்றைக்கு வீட்டிற்கு அப்படிப்பட்ட ஒரு மனைவியிடம் வருவதற்கு தங்கள் கடைசி காசையும் செலவழிக்க எத்தனையோ கோடீஸ்வரர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். அவனுடைய மனைவி ஒரு கூட்டம் மனிதருடன் மது அருந்தும் ஸ்தலத்தில் மது அருந்தி, கொஞ்சி விளையாடி, ஆடிப்பாடி, புகைபிடித்து, இரவில் அவர்களுடன் காரில் சென்று கொண்டிருக்கிறாள். இருப்பினும் அவன் அவளை நேசிக்கிறான். அவன் என்ன பெற்றிருக்கிறான் என்பதைப் பாருங்கள். அவனுடைய வாழ்க்கை முழுவதுமே அவளுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதைப் பாருங்கள்'' என்றேன். 55அவ்வாறே மனிதரும் ஸ்திரீகளும் செய்கின்றனர். பாருங்கள், அவர்கள் இருவருக்குள்ளே இவ்விஷயத்தில் எவ்விதவித்தியாசமும் இல்லை. எல்லாமே பாவத்தின் தொகுப்பு என்னும் நிலைக்கு இப்பொழுது வந்துவிட்டது. வீட்டில் ஒரு பெண் தன் பிள்ளைகளைப் பேணி வளர்த்து, அதே சமயத்தில் அவளுடைய கணவன் குடித்து வெறித்து, மற்ற பெண்களுடன் சல்லாபம் செய்தால், அவளிடம் கோடிக்கணக்கான டாலர்கள் இருக்குமானால், அவளுடைய கணவனை சீர்படுத்த அவள் என்ன செய்வாள்? அதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமேயுண்டு. இயேசு கிறிஸ்துவே அதற்கு பதில். வேறெதுவும் நன்மை செய்யாது. அது முடிவு காலத்தில் உள்ளது. அது கிறிஸ்து, கிறிஸ்து மாத்திரமே. 56நான் தொடர்ந்து அவரிடம், ''மூளை கோளாறுள்ள தங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளைப் போல் ஆரோக்கியமுள்ளவர்களாய் ஆவதற்கு இன்றைக்கு எத்தனை கோடீஸ்வரர்கள் தங்கள் கடைசி காசையும் செலவழிக்க ஆயத்தமாயிருக்கிறார்கள்?'' என்றேன். பாருங்கள்? அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான், ''பாருங்கள், உங்களுக்கு கொஞ்சம் பீன்ஸ்யும், ஒரு ரொட்டியும் மாத்திரம் இருப்பதாக கூறினீர்கள். இன்று பிற்பகல் நீங்கள் சம்பளம் வாங்கி, உங்கள் பிள்ளைகள் இன்றிரவு உண்பதற்காக, ஒரு ரொட்டியும் கொஞ்சம் பீன்ஸ் வாங்கினதாக கூறினீர்கள். உங்களில் யாருக்குமே வயிற்றுக் கோளாறு இல்லை. உங்களால் அதை உண்ண முடிகிறது. ஆனால், எத்தனை கோடிஸ்வரர்கள்...'' 57ஜான் டி. ராக்ஃபெல்லர் என்ன கூறினார்? அவருக்கு மாத்திரம் ஒரு பாத்திரம் முட்டைகோஸ் தின்ன முடிந்தால், அவர் பத்து லட்சம் டாலர்கள் கொடுப்பதாகக் கூறினார். இன்று காலை நீங்கள் ஜன்னலின் அருகே உட்கார்ந்திருந்ததாகவும் அப்பொழுது குளிர்ந்த காற்று உள்ளே வருவதை நீங்கள் உணர்ந்ததாகவும் என்னிடம் கூறினீர்கள். அவர் மாளிகையில் வசிக்கிறார். பாருங்கள். அவருக்கு மாத்திரம், இப்படி குளிர்ந்த காற்று உள்ளே அடித்து, ஒரு பாத்திரம் முட்டைகோஸ் உண்ண முடியுமானால், அவர் பத்து லட்சம் டாலர்கள் கொடுத்திருப்பார்'' என்று நான் கூறினேன். ''தடியைப் பிடித்துக் கொண்டு தெருவில் நடந்து செல்லும் குருடர்கள் தங்கள் பார்வையைப் பெற கடைசி காசையும் செலவழிக்க ஆயத்தமாயிருப்பார்கள். பாருங்கள், உண்மையில் ஐசுவரியமான காரியங்களை நாம் ஐசுவரியம் என்று அழைப்பவைகளுடன் மதிப்பிட முடியாது'' என்றேன். 58சபை அங்கத்தினர்களே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஆகையால் தான், கூர்ந்த கோபுரமுள்ள உங்கள் பெரிய சபை கட்டிடங்களை, பரிசுத்த ஆவியினால் உங்கள் இருதயங்களில் ஊற்றப்பட்டுள்ள தேவனுடைய அன்புடன் மதிப்பிடவே முடியாது என்று இன்று காலை உங்களிடம் கூற முற்படுகிறேன். இவையிரண்டையும் ஒப்பிடமுடியாது. இவை இயற்கைக்கு மேம்பட்டவை. இவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி, அர்த்தம் உரைத்து, அழுது, சத்தமிட்டு, கூச்சலிடுவதனால். இவர்கள் விசித்திரமானவர்கள் என்று நீங்கள் எண்ணக்கூடும். மற்றெல்லாவற்றையும் விட இதைப் பெறவே நான் ஆசிக்கிறேன். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் வெதுவெதுப்பான குளிர்ந்த நிலையிலுள்ள மக்களை கொண்ட உலகத்திலேயே மிகப்பெரிய ஆலயத்தில் போதகராயிருந்து ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து கவனமாய் பேசுவதைக் காட்டிலும், தேவனுடைய வல்லமை சந்திக்கும் ஜனங்களைக் கொண்ட ஒரு பாழடைந்த கட்டிடத்தில் போதகராயிருப்பதையே நான் விரும்புவேன். அப்படிப்பட்ட பெரிய ஆலயங்களில் நீங்கள் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பிரசங்கம் செய்ய முடியாது. நீங்கள் அங்கு வந்துள்ள நீதிபதிகளை, மருத்துவர்களை, இன்னும் மற்றவர்களை புண்படுத்தாதபடிக்கு உங்கள் வார்த்தையை அளந்து கவனமாய் பேச வேண்டும். ஏனெனில், இவர்கள் சபைக்கு அதிக சந்தா செலுத்துபவர்கள். நிந்தைப்படும் கர்த்தருடைய சிலருடன் என் வழியைத் தெரிந்து கொள்வேன். பாருங்கள்? அதை நீங்கள் மதிப்பிட முடியாது. அப்படி செய்ய ஒரு வழியும் இல்லை. 59எனவே, கிறிஸ்துவுக்குள் இருக்கும் மனிதனே ஐசுவரியவான். உங்களுக்கு நல்ல பார்வை, நல்ல ஆரோக்கியம், நிறைய பணம் இவையெல்லாம் இருந்தும், கிறிஸ்துவற்றவராக இருப்பீர்களானால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். நீங்கள் நிர்பாக்கியமுள்ளவர்களும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும், தரித்திரரும், குருடரும், நிர்வாணிகளுமாயிருப்பதை அறியாமலிருக்கிறீர்கள், பாருங்கள். லவோதிக்கேயா சபையின் காலம் அப்படித்தான் உள்ளது. நீங்கள் தேசத்திலேயே மிகப் பெரிய ஆலயத்தில் அங்கத்தினராயிருக்கலாம், நீங்கள் மிகப்பெரிய ஸ்தாபனத்தை சேர்ந்திருக்கலாம், இருப்பினும் இழந்து போன நிலையில் இருக்கலாம். பாருங்கள்? எனவே கிறிஸ்துவுக்குள் இருக்கும் மனிதனே ஜசுவரியவான். அது உண்மை. 60குடும்ப வாழ்க்கையின் நிச்சயமின்மை, வேலையில் நிச்சயமின்மை, போரில் நிச்சயமின்மை, சபைகளில் நிச்சயமின்மை. அதை இப்பொழுது நாம் குறிப்பிட்டதனால் சபை வாழ்க்கையின் நிச்சயமின்மையைக் குறித்து சில நிமிடங்கள் பேசுவோம். நீங்கள், நீங்கள்... அதை நீங்கள் மதிப்பிடவே முடியாது. ஏனெனில், பரிசுத்த ஆவியில் கொண்டுள்ள அனுபவத்தை சபை அங்கத்தினராக இருப்பதுடன் மதிப்பிட ஒரு வழியுமில்லை. பாருங்கள்? அதற்கு ஒரு வழியுமில்லை.... நீங்கள் பரிசுத்த ஆவியை விலைக்கு வாங்க முடியாது. அது தேவனிடத்திலிருந்து வரும் இலவசமான வரம். அதைப் பெற விரும்பும் எவரிடத்தும் அது வருகிறது. நீங்கள், ''அது பெந்தெகொஸ்தேயாகிவிடும் என்கிறீர்களா?'' எனலாம். 61பெந்தெகொஸ்தே ஒரு ஸ்தாபனமல்ல, அவர்கள் அதை ஸ்தாபனமாக்க முயன்றனர். நீங்கள் தேவனை ஸ்தாபனமாக்க முடியாது. பெந்தெகொஸ்தே என்பது எந்த விசுவாசியும் பெறக் கூடிய ஒரு அனுபவம். பாருங்கள்? அது பாப்டிஸ்டுகளுக்கு கத்தோலிக்கருக்கு, யூதர்களுக்கு; கறுப்பர்களுக்கு, வெள்ளையர்களுக்கு, பழுப்பு, மஞ்சள், சிகப்பு நிறத்தோர்க்கு; நீங்கள் பணக்காரராயிருந்தாலும், ஏழையாயிருந்தாலும்; உங்களுக்கு ஒன்றுமே இல்லாமல் இருந்தாலும், ஏராளமாக இருந்தாலும், அல்லது அதற்கிடையே இருந்தாலும்; நீங்கள் யாராயிருந்தாலும், அது உங்களுக்கு! அது உங்களுக்கு அளந்து கொடுக்கப்படும் தேவனுடைய அன்பும், இரக்கமும். அதை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, உங்கள் ஜீவியத்தை அவருக்கு அர்ப்பணித்து, அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதே. அது அவ்வளவு எளிது. நீங்கள் அறிந்துள்ள எல்லாவற்றையும் மறந்துவிட்டு, உங்களை அவரிடம் அர்ப்பணியுங்கள். அவ்வகையில் தான் அது உங்களிடம் வரும். அந்த வழியில் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். 62அது ஸ்தாபனமாக இருக்க முடியாது. ஸ்தாபனம் விளங்காத சத்தமிடுகிறது. அது விளங்காத சத்தம் என்பதை உங்களுக்கு நான் காண்பிக்க விரும்புகிறேன். நீங்கள் இந்த ஸ்தாபனத்துக்கு செல்வீர்களானால் அவர்கள், ''நாங்கள் பெற்றுக் கொண்டுவிட்டோம். மற்றவர்கள் அதைப் பெறவில்லை'' என்பார்கள். நீங்கள் அடுத்த ஸ்தாபனத்துக்கு செல்வீர்களானால். அவர்களும், ''நாங்கள் பெற்றுக் கொண்டு விட்டோம், அவர்கள் பெறவில்லை'' என்பார்கள். நீங்கள் அடுத்த ஸ்தாபனத்துக்கு செல்வீர்களானால் அவர்களும், ''நாங்கள் பெற்றுக்கொண்டு விட்டோம். அவர்கள் பெறவில்லை'' என்பார்கள். பாருங்கள், ஒவ்வொரு ஸ்தாபனமும், இவ்வாறே கூறி வருகின்றது. ஏறக்குறைய தொளாயிரம் ஸ்தாபனங்கள் உள்ளன. புள்ளி விவரத்தின் படி மொத்தம் தொளாயிரத்து அறுபத்தொன்பது ஸ்தாபனங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அவை ஒவ்வொன்றும் மற்ற ஸ்தாபனங்கள் தவறென்றும், அது மாத்திரமே அதைபெற்றுக் கொண்டதாகவும் உரிமை கோருகின்றன. அது நிச்சயமாக விளங்காத சத்தமே. பாருங்கள் தொளாயிரத்து... 63ஆனால், ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்னும் சத்தம் எப்படி ஒலிக்கிறது. (சபையோர் ஆர்ப்பரிக்கின்றனர் - ஆசி). அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை அல்லவா? (இல்லை). அப்படித்தான் அதை மதிப்பிட வேண்டும். சத்தியம் எங்குள்ளதென்று அப்படித் தான் அறிந்து கொள்ள வேண்டும், பாருங்கள். நீங்கள், “மெதோடிஸ்டுகளாகிய நாங்கள் அதை பெற்றிருக்கிறோம். பாப்டிஸ்டுகளாகிய நாங்கள் அதை பெற்றிருக்கிறோம், கத்தோலிக்கராகிய நாங்கள் அதை பெற்றிருக்கிறோம், பிரஸ்பிடேரியன்களாகிய நாங்கள் அதை பெற்றிருக்கிறோம்,'' என்கிறீர்கள். நல்லது, இயேசு ஒருவர் மாத்திரமே அதை வைத்திருக்கிறார். ஏனெனில் அவர், “நானே ஒளி, சத்தியம், வழி'' என்று கூறியிருக்கிறார். எனவே அது கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதாகும். 64எனவே, இந்த வெவ்வேறு பெரியஸ்தாபனங்கள் ஒன்றுகொன்று வித்தியாசமாயுள்ளன. அவை மிகவும் நம்பத்தகாத சத்தமிடுகின்றன. நிச்சயமற்ற எதுவுமே நம்பத்தகாதது. நீங்கள் ஒரு சபையில் சேர்வதை மாத்திரம் சார்ந்திருந்து, அவ்வளவுதான் என்று கூறிவிட முடியாது. ஏனெனில் ஒவ்வொன்றும் வித்தியாசமான சத்தமிடுகிறது. அப்படியானால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அது உங்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றது. ஒரு இடம் இருக்குமானால்... இதை நான் அடிக்கடி கூறியிருக்கிறேன், மறுபடியும் இந்த காலை வேளையில் கூறுகிறேன். மிஷனரிமார்கள். மிகவும் அதிகமாகத் தேவையுள்ள இடம், எனக்குத் தெரிந்த வரைக்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளே. அஞ்ஞானி என்பவன் யார்? அஞ்ஞானி என்பவன் அவிசுவாசி. 65ஆப்பிரிக்காவிலும், தாய்லாந்திலும், உலகின் பல்வேறு பாகங்களிலும் சுதேசிகள் விக்கிரங்களை வழிபடுகின்றனர். அவர்கள் விக்கிரங்களை வழிபடும் காரணத்தால் அவர்களை நாம் அஞ்ஞானிகள் என்றழைக்கிறோம். அவன் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாதவன். அவனுக்கு மொழியின் முதலெழுத்துக்களும் கூட தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், தேவன் அங்கே இருக்கிறார், அதற்குள் இருக்கிறார் என்று மந்திரவாதி கூறினது மாத்திரமே. அவனுக்குத் தெரிந்த வேறொன்று, தின்பதற்கு ஏதாகிலும் தேடி கண்டுபிடிப்பதே, அவனைத் தாம் நாம் அஞ்ஞானி என்கிறோம். அவனிடம் சத்தியத்தை எடுத்துரைக்கும் போது, அவனிடம் ஈடுபடுவது கடினமல்ல. ஆனால், ஈடுபடுவதற்கு மிகவும் கடினமானவன் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள இந்த கல்வி கற்ற அஞ்ஞானியே. அவன் கல்லூரியில் மூன்று அல்லது நான்கு பட்டங்களைப் பெற்று, பிரசங்க பீடத்தில் நிற்கிறான், ஒரு அவிசுவாசி!நீங்கள், ''அன்று காலை நடந்த ஆராதனையின் போது, கர்த்தர் ஒரு ஸ்திரீயை சுகமாக்கினார்'' என்று அவனிடம் கூறினால், அவன், ''ஹு - ஹ!'' என்று சந்தேகத்துடன் கூறுவான். அவன் ஒரு அஞ்ஞானி. அவன் கல்வி கற்ற அஞ்ஞானி. அஞ்ஞானி என்பவன் அவிசுவாசி. 66நேற்றைக்கு முந்தின நாள் நான் ஓரிடத்தில் ஒரு கூட்டம் ஜனங்களுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அவர்களில் சிலர் இப்பொழுது இங்குள்ளனர். ஒரு ஸ்திரீ காரோட்டி முன்னால் வந்தாள். அவளுடன் ஐந்தாறு பேர் இருந்தனர். ஒரு மனிதன் கதவினருகில் வந்து, ''சகோ. பிரன்ஹாமே, இந்த இடத்துக்கு வர எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், நாங்கள் இந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். எனவே நாங்கள்...'' என்றார். நான், ''உள்ளே வாருங்கள்'' என்றேன். அவர், “வேண்டாம், என் மனைவி ஏதோ ஒன்று நடந்ததை உங்களிடம் கூறி, சாட்சியாக உரைக்க விரும்புகிறாள்'' என்றார். அவன் இங்கு ஒலிநாடா பதிவு செய்யும் நமது சபையிலுள்ள, சகோ. லியோவின் தாயான சகோதரி. மெர்சியருக்கு நெருங்கிய சிநேகிதி. 67எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் தென் பாகத்தில் எங்கோ இருந்தபோது, ஜெபித்துக் கொள்வதற்காக ஒரு ஸ்திரீ மேடைக்கு வந்தாள். பரிசுத்த ஆவியானவர், “நீ திருமதி இன்னார், இன்னார். நீ இன்னின்ன இடத்திலிருந்து வருகிறாய். உனக்கு இன்னின்ன கோளாறு உள்ளது'' என்றார். “ஆம்.” அதெல்லாம் உண்மை தான். அதன் பிறகு அவர், ''உனக்கு கலிபோர்னியாவில் ஒரு நெருங்கிய சிநேகிதி இருக்கிறாள். அவள் சிறுநீரகப் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறாள்'' என்றார். அவள், “அது நிச்சயமாக சரி, சகோதரர். பிரன்ஹாம்” என்றாள். அது பரிசுத்த ஆவியானவர் இருதயத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்துவதாகும், பாருங்கள். அது அமெரிக்க மக்களை முகங்குப்புற விழும்படி செய்து, “தேவனே'' என்று கதறும்படி செய்ய வேண்டும்.பாருங்கள், அது அப்படி செய்ய வேண்டும். ஆனால், ஓ, அவர்கள் கல்வி கற்ற அஞ்ஞானிகள். அப்படிப்பட்டவர்களிடம் ஈடுபடுவது மிகவும் கடினமாகும். பாருங்கள், அவன் புத்திசாலி, தேவனைக் காட்டிலும் அவனுக்கு அதிகம் தெரியும். ஆகையால் தான், அவன் தன் தானியத்தை கலப்பு செய்கிறான், தன் மிருகங்களைக் கலப்பு செய்கிறான், எல்லாவற்றையும் செய்கிறான். பாருங்கள், அவன் தனக்கென எதைப் பெற்றுக் கொண்டிருக்கிறான் என்று? அப்படி செய்வதன் மூலம் அவன் தன் வர்க்கத்தையும் பாழாக்கிக் கொள்கிறான். அவனுடைய சிந்தையிலும், ஆவியிலும். 68இந்த ஸ்திரீ, “ஆம், அது உண்மை என்று சொன்னதை நாம் கவனிக்கிறோம் (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). முடிவில் அது பதினேழு அல்லது இருபது அங்குலம் அகலத்திற்கு வளர்ந்து விட்டது. அவளுடைய உருவம் பெரிதாகிக் கொண்டே வந்து, இந்த கட்டியின் (tumor) பளுவினால் அவளால் நிற்கக்கூட முடியவில்லை. அவள் நிற்க முயன்றபோது, அவளால் தன்னை சமப்படுத்திக் கொண்டு நிற்க முடியவில்லை. அவர்கள் அவளை சபைக்குக் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள். அன்று காலை நாங்கள் சுகமளிக்கும் ஆராதனை நடத்தினோம். அவர்கள் அவளை அன்றிரவு கொண்டு வந்தார்கள். இங்குள்ள சகோதரர் அவளிடம், அன்று காலை தான் நான் வியாதியஸ்தருக்கு ஜெபித்ததாகவும், மறுபடியும் இரவில் ஜெபிக்கப் போவதில்லை என்றும் கூறினார்கள். அவர்கள் என்மேல் ஒரே நேரத்தில் அதிக பாரத்தைச் சுமத்த விருப்பங் கொள்ளவில்லை. எனவே ஆராதனை முடிந்த பிறகு, நான் நின்று கொண்டு சிலருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது சில மனிதர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து பின் படிக்கட்டில் உட்கார வைத்து விட்டு போய்விட்டார்கள். அவள் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். 69நமது விலையேறப் பெற்ற சகோதரரில் ஒருவரான சகோ. டெய்லர் இது நிகழ்ந்த போது அங்கிருந்தார் என்று நினைக்கிறேன். அவரும் அந்த ஸ்திரீயை கொண்டு வர உதவி செய்தார். சகோ. டெய்லர், இங்கிருக்கிறீர்களா? எங்கே இருக்கிறீர்கள்? பின்னால். ஆம் பின்னால், அவர் அப்பொழுது அங்கு நின்று கொண்டு அவளைப் பின்னால் கொண்டு வர உதவி செய்தார். அந்த கட்டி இப்படி வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. நான் பின் கதவின் வழியாய் வெளியே வந்தபோது, அந்த ஸ்திரீயை நோக்கி, “ஸ்திரீயே, அநேக ஆண்டுகளுக்கு முன்பு உன் சிறுநீரகப் புற்றுநோயை சுகமாக்கின கர்த்தராகிய இயேசு, உன் கட்டியையும் சுகமாக்குவார். இது கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று கூறினேன். நான் அவளைத் தொடவும் கூட இல்லை. நான் வெளியே நடந்து காரில் ஏறி சென்று விட்டேன். அவளுடைய கணவர், ''நீங்கள் வெளியே வந்து அவளைப் பார்ப்பீர்களா?'' என்று கேட்டார். நான், “ஆம், நிச்சயமாக அவளை உள்ளே வரச் சொல்லுங்கள்'' என்றேன். அவர், ''எங்களுக்கு நேரமில்லை. நாங்கள் போக வேண்டும்'' என்றார். நான் வெளியே சென்ற போது, இந்த ஸ்திரீ காரை விட்டு வெளியே குதித்தாள். அவளுடைய கட்டி மறைந்து போய், என்னைப் போலவே தட்டையாக (flat) இருந்தாள். அவள் சாலையிலே மகிழ்ச்சியான தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவள் சாலையில் மேலும் கீழும் ஓடி, அந்நிய பாஷைகள் பேசி, பிரஸ்பிடேரியன் போதகர் தங்கும் இல்லத்துக்கு எதிரே உரக்க சத்தமிட்டு கொண்டு, இவ்வாறு மகத்தான தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தாள். 70அக்கம் பக்கத்திலுள்ளவர்களில் சிலர் வெளியே எட்டிப் பார்த்து, “சகோதரன். பிரன்ஹாமிடம் ஜெபித்துக் கொள்வதற்காக அவள் பைத்தியக்கார விடுதியிலிருந்து வந்திருப்பவளாக இருக்கும்'' என்று நினைத்திருப்பார்கள். அவள் பைத்தியக்கார விடுதியிலிருந்து வந்தவள் அல்ல. அவளுடைய ஆத்துமா மகிமையினால் நிறைந்திருந்தது, பாருங்கள். அவள் அற்புதமான தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவள், ''சகோ. பிரன்ஹாமே, இங்கு பாருங்கள்'' என்று சொல்லி, தன் கோட்டை திறந்து காண்பித்தாள். அது மிகவும் தட்டையாக இருந்தது. அவள், “நீங்கள் என்னிடம் கூறின முதல் இரண்டு, மூன்று மாதங்களில் என் நிலைமை மிகவும் மோசமாக ஆனது. அந்த கட்டியை அறுத்து எடுக்க நான் அனுமதிக்காவிட்டால் வேறொன்றையும் செய்யப் போவதில்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்.'' அதன் எடை... 71சகோ. டெய்லர், அதன் எடை என்னவென்று அவள் கூறினாள், முப்பது பவுண்டா ? (சகோ. டெய்லர், ''ஆம்'' என்கிறார் -ஆசி.. அந்த கட்டியின் எடை ஏறக்குறைய முப்பது பவுண்டு என்று கணக்கிடப்பட்டது. அவள் தொடர்ந்து, “திடீரென்று அது, ''ஷ,ஷ,ஷ,ஷ'' என்று சுருங்க ஆரம்பித்தது'' என்றாள். ஓ, அவர் தமது வார்த்தையைக் காக்கிறார். அது உண்மை! அந்த ஸ்திரீக்கு நீங்கள் கடிதம் எழுத விரும்பினால், அவளுடைய முகவரி எங்களிடம் உள்ளது. அவள் லியோவிடம் அதை கொடுக்கக் கூறி, அவருடைய தாயை அவள் சார்பில் வாழ்த்தும் படி கூறினாள். அவளுடைய சகோதரன், ஊடிகாவிலுள்ள என் சிநேகிதி ஒருவளை மணம் புரிந்திருந்தாள். இந்தப் பெண் அங்கிருந்தாள். அவளுடைய பெயர் க்ளைட் ரேய்ன்ஸ். அவன்... எனக்கு அநேகரைத் தெரியும், அநேக... அவனை சிசல் என்று நாங்கள் அழைப்பது வழக்கம். நான் சிறுவனாயிருந்த போது அவனுடன் விளையாடியிருக்கிறேன். அவன் ஊடிகாபைக்கில் வசிக்கிறான். அவன் ஏதோ ஒரு மாகாண அதிகாரியாக பணிபுரிகிறான். அவனுடைய சகோதரி அப்பொழுது காரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் காம்ப்பெல்லைட் சபைக்குச் செல்கின்றனர் என்று நினைக்கிறேன். அது எப்படிப்பட்ட அபிப்பிராயத்தை அவளில் உண்டாக்கினது என்று நான் வியக்கிறேன். அவள், “பில்லி, அது அற்புதமானது'' என்றான். அந்தப் பெண்ணை எனக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் இளைஞராயிருந்த போது, இந்த சாலையில் வசித்திருந்தோம். அப்பொழுது அவளை நான் சிலமுறை வெளியே கூட்டிச் சென்றிருக்கிறேன். அவள் மிகவும் நல்லவள், மிகவும் அருமையான பெண். அவளுக்கு இப்பொழுது என் வயது இருக்கும். அவள் அங்கு உட்கார்ந்து கொண்டு அந்த சாட்சியைக் கேட்டுக் கொண்டிருந்தாள். குணமானது அவளுடைய கணவரின் சகோதரி. ஓ, நான் சொல்லுகிறேன், சகோதரனே, இதில் எவ்வித நிச்சயமின்மையும் இல்லை. இது சத்தியம். இது தேவனுடைய வார்த்தை. அது தான் அதை உண்மையாக்குகிறது. 72நிச்சயமில்லாத எதுவுமே நம்பத்தகாதது. இந்த நாட்களில் அவர்கள் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் குறித்து நிச்சயமற்றவர்களாக இருந்து, அதை அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஆனால், நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருக்கலாம். அது நிச்சயமுள்ளதென்றும் அவர் செய்வாரென்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் உங்களில் அந்த அற்புதத்தை இதுவரை செய்யாமலிருந்தாலும், அவர் செய்துள்ள மிகப் பெரிய அற்புதம் உங்கள் பாவத்தை மன்னித்ததே. மானிடரின் பாவத்தை மன்னித்ததே அவர் செய்துள்ள மிகப் பெரிய அற்புதம். இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். அது அவனுடைய உள்ளான மனிதனை முற்றிலுமாக மாற்றிப்போட்டு விட்டது. அவன் ஒரு காலத்தில் குடித்து, சூதாடி, பொல்லாங்கானவைகளை செய்து கொண்டிருந்தான். ஆனால், திடீரென்று அது அவனை அன்புக்குத் திருப்புகிறது. அவன் தன் மனைவியிடம் சென்று, “தேனே, உன்னை இப்படி நடத்தினதற்தாக வருந்துகிறேன்” என்று சொல்லி, தன் குழந்தைகளைக் கையிலெடுத்து, அப்பா இவ்வளவு நாட்களாக பணத்தை குடியில் செலவழித்தேன். அப்பா இதையெல்லாம் செய்தேன். அம்மா உங்களை இரவு முழுதும் தனியே விட்டு வெளியே சென்று வேலை செய்தாள். நான் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். தேவன் என்னை மன்னித்து விட்டார்'' என்கிறான். அந்த சாட்சி உலகிலேயே மிகப்பெரிய ஒன்று, ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (Alcoholics Anonymous) சங்கத்தாரும் கூட எந்தக் குடிகாரனையும் இப்படி மாற்ற முடியாது. (இந்த சங்கத்தார் மருந்துகளின் மூலமாக ஜனங்கள் குடிப்பழக்கத்தை விட வேண்டுமென்று அப்படிப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். (அதன் கிளை சென்னையிலும் கூட உள்ளது - தமிழாக்கியோன்). ஒரு நபருக்கு அது இத்தகைய மாறுதலை உண்டு பண்ணவே முடியாது. 73இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் ரோசல்லா கிரிஃப் பித்தைப் பாருங்கள். சிக்காகோவிலுள்ள ''எஸ் - அனானிமஸ்'' அனைவரும், நான்கு பெரிய மருத்துவமனைகளிலுள்ள மருத்துவர்களும் அவளைக் கைவிட்டனர். ஆனால் மேடையில் ஒரே நொடியில், அந்த வெளவால் கண் பாதகி மாற்றப்பட்டாள். இப்படி வெட்டப்பட்ட ஒரு ''கோட்டை அவள் அணிந்திருந்தாள். அது அவள் தாய் அவளுக்கு வாங்கிக் கொடுத்தது. அவள் சாமர்த்தியசாலி. அவள் விஸ்கி குப்பியை, கோட்டில் வைத்துக் கொண்டு எங்கும் சென்றாள். அவள் குடித்து வெறித்து தரையில் விழுந்து, யாரும் அவளைக் காணும் முன்பே அவள் குளிரில் உறைந்து மரித்து விடுவாளோ என்று அஞ்சினர், இதோ அவள் நின்றுக் கொண்டிருக்கிறாள். ''எஸ் - அனானிமஸ்'' சங்கத்தினரும் மற்றவரும் அவளைக் கைவிட்டனர். இப்பொழுது அவள் இதைக் குறித்து ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறாள். அவள் மேடையின் மேல் வந்தபோது, பரிசுத்த ஆவியானவர், “உன் பெயர் ரோசல்லா கிரிஃப்பித்'' என்றார். அதில் எவ்வித நிச்சயமின்மையும் இல்லை, பாருங்கள். ''நீ குடிபழக்க முள்ளவள். நீ எஸ் - அனானிமஸ் சங்கத்துக்கும் மற்ற இடங்களுக்கும் சென்றும் பயனில்லை. ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது, இப்பொழுது அது முடிந்துவிட்டது.'' ''அங்கு தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த பெண் பிரட் ஆஸ்டருடன் சேர்ந்து நடனமாடுபவள்.'' அவள் குதித்தெழுந்தாள். அது உண்மை. அவள் குடி பழக்கமுள்ளவள், போதை வஸ்துக்களை உபயோகிப்பவள், நாட்டின் சட்டம் அவளை தேடிக் கொண்டிருக்கிறது.'' அவளுடைய தகப்பன் எழுந்து நின்று, ''அதை நான் ஆட்சேபிக்கிறேன்'' என்றார். அதற்கு அவள், ''அப்பா, சற்று அமைதியாயிருங்கள். அந்த மனிதன் கூறுவது சரியே,'' என்றாள். அதில் எந்த நிச்சயமின்மையும் இல்லை, “கர்த்தர் உரைக்கிறதாவது, நீ சுகமடைந்தாய்.'' உன்னை ஒப்புவி. ''இப்பொழுது அவள் தன் கணவனுடன் மிஷனரி வேலையில் ஈடுபட்டு சுவிசேஷத்தை பிரசங்கித்து வருகிறாள். ஓ, என்னே! அது என்ன? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஸ்தாபனங்கள் அதைக் குறித்து நிச்சயமில்லாமல் இருக்கும் இந்நாட்களில், கிறிஸ்து மாறாதவராக இருக்கும் போது, நாம் ஏன் சபை ஸ்தாபனங்களுக்கு செவி கொடுக்க வேண்டும்? அதைக் குறித்து எவ்வித நிச்சயமின்மையும் கிடையாது. அது எப்பொழுதுமே நிச்சயமுள்ளது. 74வேதம் இங்கு என்ன கூறுகிறதென்றால், மரித்த எதுவும் சத்தமிடுகின்றது. மரித்த ஒன்று, மரித்த சபைகள் சத்தமிடக்கூடும். ஆனால் சத்தத்தில் வித்தியாசம் காணாமல், அது என்ன சத்தமென்று நாம் நிச்சயமாக அறியக் கூடிய வழி எதுவுமில்லையென்றால்... நாம் இங்கு அறிகிறோம். நான் இராணுவ வீரர்களைக் குறித்து சில வேத வாக்கியங்களை குறித்து வைத்திருக்கிறேன். இராணுவ வீரர் பயிற்சியின் போது எக்காள (bugies) சத்தத்துக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். எக்காளம் எவ்விதம் சத்தமிட்டால், அவர்கள் அணிவகுப்பை முடித்துக் கொள்ள வேண்டுமென்றும், ஒவ்வொரு சத்தத்துக்கும் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றும் பயிற்சி பெற்றுள்ளனர். அந்த சத்தத்தை அவர்கள் அறியாமல் போனால் அவர்கள் எப்படிதங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள முடியும்? அது உண்மை. அவர்கள் அந்த சத்தத்துக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். எக்காளம் ஒரு குறிப்பிட்ட சத்தமிடும் போது, அது ஒன்றைக் குறிப்பிடுகிறது. 75தீத்துராயன் எருசலேமின் மதில் சுவர்களை தன் சேனையைக் கொண்டு முற்றுகையிட்ட போது, நன்கு பயிற்சி பெற்ற அந்த இராணுவ வீரர் அனைவரும் - சரித்திரக்காரர் அவர்களுடைய திறனைப் பாராட்டி எழுதியுள்ளனர். இயேசு அந்த நாளில் மலையின்மேல் உட்கார்ந்து கொண்டிருந்த போது, ''எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது, வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். வீட்டின் மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். நீங்கள் மலைகளுக்கு ஓடிப்போங்கள். ஏனெனில், மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்,'' என்றார். தீத்துராயன் அணிவகுத்து வருவதைக் கண்டபோது பெரிய ஸ்தாபன சபைகள் அனைத்தும் கூறினது என்னவென்று பாருங்கள்; ''நாம் ஜெபத்தை ஏறெடுக்க கர்த்தருடைய வீட்டுக்குச் செல்வோம் வாருங்கள்'' என்று. அப்பொழுது அவர்களுடைய செயலானது மிகவும் காலங்கடந்த ஒன்றாக இருந்தது. அது ஆசாரியனுக்கு விளங்காத சத்தமாயிருந்தது, அது சபைக்கு விளங்காத சத்தமாயிருந்தது. ஆனால், இயேசுவின் சத்தத்தைக் கேட்பதற்கு பயிற்சி பெற்றவர்கள் வேகமாக மலைகளுக்கு ஓடிப்போயினர். அவர்கள் மாத்திரமே உயிர்தப்பினர். விளங்காத சத்தம்... ''நகரத்தை விட்டு ஓடிப்போங்கள்.'' இயேசு அதை அவர்களிடம் கூறி அவர்களை அந்த சத்தத்துக்கு பழக்குவிக்காமலிருந்தால், அவர்கள் ஓடிப்போக வேண்டுமென்று எப்படி அறிந்திருப்பார்கள்? 76அந்த பெரிய சரித்திரக்காரனாகிய ஜோசிபஸ், “உயிர் தப்பினவர் நரமாமிசம் தின்னும் கிறிஸ்துவின் சீஷர்கள் மாத்திரமே'' என்று கூறினார். சரித்திரக்காரரில் ஒருவர், அவர்கள் நரமாமிசம் தின்பவர்கள் என்றும், பிலாத்து சிலுவையிலறைந்த நசரேயனாகிய இயேசு என்னும் பெயர் கொண்ட மனிதனின் உடலை அவர்கள் கல்லறையிலிருந்து திருடிச் சென்று, துண்டு துண்டாக வெட்டி அதை தின்றனர் என்றும் கூறினார். அவர்கள் உண்மையில் செய்தது, நாம் இங்கு செய்வது போல், ''கர்த்தருடைய சரீரமாகிய இராப்போஜனத்தை ஆசரித்தனர், பாருங்கள். சரித்திரக்காரர், ''அவர்கள் மாத்திரமே உயிர்தப்பினர். ஏனெனில் அவர்கள் நகரத்தை விட்டு வெளியே ஓடிவிட்டனர்,'' என்று எழுதியிருந்தார். அவர்கள் சத்தத்தை அறிந்திருந்தனர். ஓ, சகோதரனே, பரிசுத்த ஆவியானவர் இன்று காலை நமது இருதயத்தில் இறங்கி, பரிசுத்த ஆவியானவரின் இருதயத் துடிப்பையும், வல்லமையையும் நமக்குத் தந்தருளுவாராக. தேவனுடைய எக்காள சத்தத்தை அறிந்து, நாம் என்ன செய்ய வேண்டுமென்று அறிய நமது இருதயங்களை இந்த நேரத்தில் ஆயத்தம் செய்தால் மாத்திரமே உயிர் தப்ப முடியும். 77“கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. ஏனெனில் எக்காளம் தொனிக்கும்.'' காலங்கள் தோறும் நித்திரையடைந்த சேனை வீரர்யாவரும், எக்காளம் தொனிக்கும் போது... அவர்கள் மரித்து நித்திரையடைந்திருந்தாலும், அது அவர்களைத் தடை செய்வதில்லை. ஏனெனில் எக்காளம் தொனித்து அவர்களை நித்திரையிலிருந்து எழுந்திருக்கும்படி செய்யும். அவர்கள் ஆயத்தமாயுள்ளனர்! ஆயத்தமில்லாதவர்களுக்கு சத்தம் என்னவென்று தெரியாது. அந்த கர்த்தருடைய வருகையை அறிவிக்கும் சத்தம் முழுங்கும் போது, அது வானத்தையும், நரகத்தையும் அசைக்கும். ஆனால், நரகத்திலுள்ள இழந்து போனவர்கள் அந்த சத்தத்தை அறிய மாட்டார்கள். என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் மற்றவர்கள், கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்திருந்தாலும், அந்த நிச்சயமான சத்தத்தை அவர்கள் அறிந்துள்ளனர். ஓ, கர்த்தருடைய எக்காளம் தொனிக்கும், அப்பொழுது காலம் இனி இராது, காலையும் நித்தியத்தில், பிரகாசமாக உதிக்கும். அப்பொழுது பூமியில் இரட்சிக்கப்பட்டவர்கள், ஆகாயத்துக்கு அப்பால் தங்கள் வீடுகளில் ஒன்று சேர்வர், பெயர்கள் கூப்பிடப்படும் போது, நான் அங்கிருக்க விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் இன்று உங்கள் பெயரை ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் எழுதுங்கள். அது விளங்காத சத்தமாயிராது. 78இப்பொழுது நாம் தொல்லை வந்து கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்கிறோம். அணுகுண்டுகள் எங்கும் தொங்கிக் கொண்டிருக்கின்றன, இராஜ்யங்களினிடையே சச்சரவு, கலக்கமான நேரம். நாம் ஏன் வேலையைக் குறித்து கவலைப்பட வேண்டும்? நாம் ஏன் குடும்பத்தை குறித்து கவலைப்பட வேண்டும்? நாம் எதையும் குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்? நாம் ஒன்றையும் குறித்து கவலைப்பட வேண்டாமென்று இயேசு கூறினார். ''ஆனால், இவைகள் சம்பவிக்க தொடங்கும் போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்'' என்றார் அவர். அதுவே சுவிசேஷ சத்தத்தின் நிச்சயமுள்ள தன்மை. 79பரிசுத்த ஆவியானவர் சபைக்குள் வந்து இருதயத்தின் சிந்தனைகளைப் பகுத்தறிந்து, இந்தப் பெரிய அடையாளங்களைச் செய்வதை நாம் காணும் போது; வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சாயங்காலத்தில் ஆவியானவர் மறுபடியும் வந்து; அவர் வந்து, சோதோம் எரிந்து போவதற்கு முன்பு செய்வதையே, செய்வதை நாம் காண்கிறோம். தூதன் முதுகைக் கூடாரத்தின் பக்கம் திருப்பி, தமக்குப் பின்னால் இருந்த சாராள் ஏன் நகைத்தாள்?'' என்று கேட்டார். “சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரன் வருகையிலும் நடக்கும்'' என்று இயேசு கூறினார். அது என்ன? அது கர்த்தராகிய இயேசுவின் வருகையை அறிவிக்கும் சத்தத்தின் தொனி. இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் உலகத்தை அழிப்பதற்கு முன்பு, நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவன் பிள்ளைகளுடைய இருதயங்களை மூல விசுவாசத்திற்கு, சுவிசேஷத்திற்கு, தேவனுடைய வல்லமைக்கு, உண்மையான பரிசுத்த ஆவிக்கு, கிறிஸ்துவுக்கு, மறுபடியும் திருப்புவான் - அந்த பெரிதான நாள் வருவதற்கு முன்பு.'' எக்காளம் தொனிப்பதை நாம் கேட்கிறோம். ஓ, என்னே! அது என்ன? ''கர்த்தருடைய பரிசுத்தவான்களே, எழுந்திருங்கள். முடிவு நெருங்கும் போது, ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த கடைசி அழைப்புக்கு நாம் ஆயத்தப்படுவோம்.'' அது விளங்காத சத்தமிட்டால், எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்? ஆனால் அது விளங்காத சத்தமல்ல. 80“பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுடைய சிந்தனைகளை அறிகிறாராமே, வேறென்னவெல்லாம் செய்கிறாராமே, இவர்கள் பேசும் இதெல்லாம் என்ன?'' என்று மக்கள் கேட்கின்றனர். அது சுவிசேஷ சத்தத்தின் நிச்சயமுள்ள தன்மை. அது அவ்வாறிருக்கும் என்று கிறிஸ்து கூறினார். ''நல்லது, இந்த பெரிய சபைகளெல்லாம் ஏன் அப்படி இருக்கின்றன?'' அப்படித்தான் இருக்குமென்று கிறிஸ்து கூறினார். அதில் நிச்சயமின்மை எதுவுமில்லை. அது அவ்வாறிருக்கு மென்பது நிச்சயமே. அது அப்படித்தான் இருக்கு மென்று வேதம் திட்டவட்டமாக கூறியுள்ளது என்பதைக் குறித்து அண்மையில் எட்டு நாட்கள் நடந்த கூட்டங்களில் நாம் பார்த்தோம். பெரிய ஸ்தாபனங்கள் எழும்பும், அவைகள் சபையின் கூட்டு சங்கம் ஒன்று உண்டாக்கிக் கொள்ளும். அதை ஏற்கெனவே நாம் பெற்றிருக்கிறோம். கத்தோலிக்க குருக்களாட்சிக்கு நாம் ஒரு சொரூபத்தை உண்டாக்கி விட்டோம். அதை நாம் ஏற்கெனவே பெற்றிருக்கிறோம். அந்த சங்கத்தில் ஒவ்வொரு ஸ்தாபனமும் சேர்ந்திருக்கும். அது விளங்காத சத்தமல்ல, அது உண்மையான சத்தம். அது நிச்சயமான சத்தம். 81''நமக்கு ஐக்கிய நாடுகளின் சபையின் மீது (United Nations) நிறைய விசுவாசம் உண்டு. அது தேசங்களின் சங்கம் (League of Nations) போன்ற ஒன்று. முதலாம் உலகப் போருக்குப் பிறகு நமக்கு தேசங்களின் சங்கம் ஒன்றிருந்தது. அவர்கள் முழு உலகத்தையும் காவல் காக்கப் போவதாகக் கூறினர். ஆனால் அது கிரியை செய்யவில்லை. ஐ.நா. சபையின் பேச்சுக்கள் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளன, அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதில் குருஷேவ் காலணியை அவிழ்த்து அதை மேசையின் மேல் அடிப்பாரானால், அதனால் என்ன உபயோகம்? வெவ்வேறு காரியங்கள். அது ஐ.நா. சபையின் நிச்சயமற்ற நிலை. அது செய்வது சரிதான், ஆனால் காலதாமதமாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒன்றுக்கு ஏற்கனவே காலதாமதமாகிவிட்டது. ஒரே ஒரு விளங்கும் சத்தம் மாத்திரமேயுண்டு. அது தான் சுவிசேஷம். யுத்தத்துக்கு ஆயத்தப்படுங்கள் எந்த யுத்தத்துக்கு? கர்த்தருடைய வருகைக்கு. பொல்லாங்கு எல்லாவிடங்களிலும் ஜனங்களைத் தாக்கும் போது அதற்கு எதிராக யுத்தத்துக்கு ஆயத்தப்படுங்கள் எல்லாமே தவறாகி, குடும்ப வாழ்க்கை தவறாகி, ஐ.நா. சபை விழுந்து, நாடுகள் உடைந்து, அணுகுண்டுகள் சுற்றிலும் இருந்து, குடும்பங்கள் பிரிந்து, தாய்மை கீழ்த்தரப்பட்டு, ஜனங்களிடையே நன்னடத்தையின்மையும், நம்பிக்கையின்மையும் இருந்து, ஸ்தாபனங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?நிச்சயமுள்ளவர்களாயிருங்கள். யுத்தத்துக்கு உங்களை ஆயத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்! 82தொலைகாட்சி மோசமாகிக் கொண்டே வந்து, வானொலியிலும் செய்தித் தாள்களிலும் சிகரெட்டுகள், புகையிலைகள், விஸ்கி போன்றவைகளை விளம்பரம் செய்து, அவலட்சணமாக உடுத்தியுள்ள பெண்கள், ஆபாசமான நகைச்சுவை. தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஆபாசமான நகைச்சுவை துணுக்குகளைக் கூறுபவர்கள்; அமெரிக்கா இதற்கு மயங்கிவிட்டது... நேபுகாத்நேச்சார் ராஜாவின் அரண்மனையில் அன்றிரவு பயங்கர ஜன நெருக்கடி; கேளிக்கை போன்றவை நடந்து கொண்டிருந்தன. அங்கு மது, விருந்து, நடனம், தொலைக்காட்சி நிகழ்ச்சி அக்காலத்தில் இருந்திருக்குமானால், அதுவும் மற்றும் அவர்களுடைய கோமாளிகள் வெளியே வந்தனர், அப்பொழுது ஒரு விரல் சுவற்றில் எழுதினது. 83அது போன்று இன்றைக்கு, நாம் பாதுகாப்பாக இருக்கிறோ மென்றும், உலகிலேயே மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நமக்குண்டு என்றும், மிகச் சிறந்த எல்லாவற்றையும் நாம் பெற்றுள்ளதாக எண்ணியுள்ளோம். ஆனால், பார்க்கப்போனால், ஏவுகணைகளின் போட்டியில் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். உ,ஊ, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு என்ன நடந்தது? சுவற்றில் விரல் எழுதினது மாத்திரமல்ல, ஆகாயத்திலும் ஏவுகணைகள், நாம் அநேக அநேக ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம் என்பதை எழுதுகின்றது. என்ன விஷயம்? சுவற்றில் கைவிரலின் எழுத்து. அந்த நாளில், அது சுவற்றில் அறியாத பாஷையில் எழுதினது. அந்த இராஜ்யம் முழுவதிலும் அதன் அர்த்தத்தை உரைக்க ஒரே ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு அர்த்தத்தை உரைக்கும் வரம் இருந்தது. அவன் அதற்கு அர்த்தம் உரைத்து, “நீ தராசிலே நிறுத்தப்பட்டு, குறையக் காணப்பட்டாய். தேவன் ஒரு தேசத்தின் ஜனங்களை உன் நடுவில் அனுப்பினார். அவர்களை, நீ ''உருளும் பரிசுத்தர் என்று அழைத்தாய். நீ அங்கு சென்று அவர்களை அவமானப்படுத்தி, அவர்களைக் கொலை செய்து எரித்து போட்டு, உன் தெய்வங்களையும், விக்கிரங்களையும் வணங்கி, மேன்மையாக வாழ்ந்தாய். இப்பொழுது நீ அவர்களுடைய தேவனின் ஆலயத்துக்குச் சென்று அங்கிருந்த பாத்திரங்களை இங்கு கொண்டு வந்து, அவர்களை, உருளும் பரிசுத்தர் என்றும் ''வழுக்கை தலை போதகர்'' என்றும் கேலி செய்தாய். தேவனுக்கு போது மென்றாகி விட்டது! உன் அழிவின் நேரம் சமீபித்து விட்டது'' என்றான். அச்சமயம் அவர்களை கைப்பற்றப் போகும் தேசம் வாசலில் காத்திருந்தது. சிறிது கழிந்து அவர்கள் கொலை செய்யப்பட்டனர், அவர்களுடைய ஸ்திரீகள் வாளால் அறுப் புண்டனர். அவர்களுடைய காவல்காரர், அவர்களுடைய சேனை அனைத்துமே கைப்பற்றப்பட்டன. “தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்.'' 84நாம் தொலைக்காட்சி, வானொலிபை த்தியமாயிருக்கிறோம். ஆபாசமான, அசுத்தமான நகைச்சுவை துணுக்குகள், கோமாளி தன்மை போன்றவைகளைக் கண்டு தேவனுக்கு சலிப்பு உண்டாகி விட்டது. பரிசுத்த ஆவி சபையின் உண்மையான சுவிசேஷம் தேசமெங்கிலும் சென்று இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் அவருடைய வருகையின் நிச்சயத்தைக் குறித்தும் அறிவித்து விட்டது. இப்பொழுது தேவன் வானத்தில், ''நீ தராசிலே நிறுத்தப்பட்டு, குறையக் காணப்பட்டாய்'' என்று எழுதுகிறார். ஆமென். நாம் பயங்கரமான நிலையில் இருக்கிறோம். நிச்சயமுள்ள சத்தத்துக்கு செவி கொடுங்கள், நிச்சயமற்ற ஐ.நா.வுக்கு அல்ல. ஆம், ஐயா. 85அன்றொரு நாள் நமக்குத் தேர்தல் நடந்தபோது; சில நாட்களுக்கு முன்பு அவர்கள் அரசியல் உலகில் வாக்குகளைக்கையினால் எண்ணினார்கள். அவர்கள் கூறினார்கள். எங்களுக்கு வாக்குகளை எண்ண இப்பொழுது இயந்திரங்கள் உள்ளன. எனவே அது தவறாயிருக்க முடியாது. நீங்கள் கம்பியை கீழே இழுத்துவிட்டால் போதும், அப்பொழுது ''கிளிக்'' என்று சத்தம் ஏற்பட்டு, உங்கள் மனிதனுக்கு அது வாக்கை அளித்துவிடும்'' என்றனர். ஊ, அது நிச்சயமற்றது என்பதை அவர்கள் இப்பொழுது கண்டு பிடித்துள்ளனர். அதை திரு. எட்கர் ஹவர் அம்பலப்படுத்தினார். அன்றொரு நாள் அவர் ரிப்பப்ளிக்கன் கட்சியினரின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார். அவர்கள் இயந்திரங்களை நிறுவின் போது, ஒவ்வொரு முறையும் அவர்கள் நிக்சனுக்கு வாக்குகளை அளித்த போது, அது கென்னடிக்கும் வாக்குகளை அளித்ததாம். அது அப்படியிருக்கிறது என்று அவர்கள் கண்டுபிடித்த போது, அதைக் குறித்து அவர்கள் ஏன் எதையேனும் செய்யக்கூடாது? ஏன்? அதைக்குறித்து நிச்சயம் எதுவுமில்லை. ஆம். திரு. ஹவருக்கு என்ன நேர்ந்ததென்று நீங்கள் அறிவீர்கள்,பாருங்கள். சரி. எல்லாமே நிச்சயமற்றதாய் உள்ளது. யார் தேர்தலில் ஜெயித்தார்கள் என்று உங்களால் கூற முடியாது. அது கென்னடியோ அல்லது... கென்னடி “தேர்ந்தெடுக்கப்பட்டதாக'' கூறப்படுகின்றது. ஆனால், உண்மையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டாரா, இல்லையாவென்று எனக்குத் தெரியாது. நான் அரசியல்வாதியல்ல. அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் எது சரி, எது தவறென்று நான் அறிந்திருக்கிறேன். எது சரியல்ல என்பதை அறிந்து கொள்வதற்கு எனக்கு ஞானம் உண்டு. எஃப்.பி.ஐ.யைச் (FBI) சேர்ந்த மனிதன், அந்த இயந்திரம் அவ்வாறு இயங்குவதற்கென நிறுவப்பட்டது என்று கூறும் போது; நிக்சன் கட்சியினர் அப்படி செய்யவில்லை, கென்னடி கட்சியினரே அவ்வாறு செய்தனர். ஏன்? அது அப்படித்தான் நடக்க வேண்டும். தேவனுடைய இராஜ்யத்தைத் தவிர வேறெதுவும் இவ்வுலகில் நிற்க முடியாது. ஏனெனில், ஒவ்வொரு இராஜ்யமும் ''தராசிலே நிறுத்தக்கப்பட்டு, குறைவாய்க் காணப்பட்டுள்ளது.'' நமது தேசமும் கூட. ஏன் அப்படி? 86சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ஒரு பெரிய பழைய மரம் இருந்தது. நான் அங்கு சென்று அதன் கீழ் உட்காருவது வழக்கம். ''நான் முதியவனாகும் வரைக்கும் வாழ நேர்ந்தால் இதனடியில் இளைப்பாறுவேன்'' என்று எண்ணுவதுண்டு. ஆனால், இப்பொழுதோ அடி மரக்கட்டை மாத்திரம் உள்ளது. நாங்கள் வசித்த இடத்தில், குறுகிய கைகளைக் கொண்ட என் தந்தை வெளியே வருவார். அவர் கென்டக்கி நாட்டைச் சேர்ந்தவர். அவர் மரம் வெட்டுவார். குட்டையான ஆள், ஆனால் பருமனானவர். அவருடைய எடை சுமார் நூற்று நாற்பத்தைந்து அல்லது நூற்று ஐம்பது பவுண்டு இருக்கும். ஓ, என்னே! என் தந்தை தனியாக தொளாயிரத்து ஐம்பது பவுண்டு எடையுள்ளவிறகுக் கட்டைகளை வாகனத்தில் ஏற்றியதாக இங்குள்ள திரு. கூட்ஸ் என்னிடம் கூறியிருக்கிறார். உண்மையிலேயே பலசாலி. அவர் ஆப்பிள் மரத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு பழைய, உடைந்து போன கண்ணாடிக்கு முன் நின்று கையைக் கழுவ சட்டை கையை மடித்துவிடுவதை நான் கண்டிருக்கிறேன். நாங்கள் எவ்வளவு ஏழ்மை நிலையில் வாழ்ந்தோம் என்று இந்தியானாவில் வசிக்கும் உங்களில் சிலர் அறியாமலிருக்கலாம். அங்கு குழாயினருகில் ஒரு பழைய குளிப்பாட்டும் தொட்டி இருந்தது. தாயாரிடம் ஒரு பழைய கோணி இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் ஒரு துவாலையை உண்டாக்கி, அதை முனையில் அலங்கரித்து வைத்திருந்தார்கள். அது பெரிய பழைய... அந்த துவாலையைக் கொண்டு அவர்கள் எனக்குத் துடைத்துவிடும் போது, அது மிகவும் சொர சொரப்பாக இருந்த காரணத்தால் தோல் பிய்ந்து வந்துவிடும் போல் இருக்கும். அந்த துவாலையைக் கொண்டு அவர்கள் உடம்பைத் துடைப்பார்கள். அப்பா அங்கு நின்று கொண்டு சட்டைக் கையை மடித்து விட்டு, கைகழுவுவார். ஓ, என்னே, அவருடைய தசைகளை பார்க்க வேண்டும்! நான், ''அவர் மிகுந்த பலசாலி. அவர் ஐந்நூறு ஆண்டுகள் உயிர் வாழ்வார் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால், என்ன தெரியுமா? அவருடைய ஐம்பத்திரண்டாம் வயதில் மரித்து போனார். ஏன்? ''நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை.'' 87நான் ரோமாபுரிக்கு சென்றிருந்தேன். அங்கு மகத்தான சீசர்கள் இராயன்கள் தெருக்களில் நடந்து சென்றனர். அவர்கள் ஆடம்பரத்துடனும் புகழுடனும் அங்கு ஆண்டு வந்தனர். இன்று அவர்கள் சாம்ராஜ்யம் எங்குள்ளது தெரியுமா? நிலத்துக்கு இருபது அடி கிழே. இரண்டாயிரம் ஆண்டுகளில் அது புதைந்துவிட்டது. மகத்தான பார்வோன் அரசாண்ட எகிப்திலுள்ள கெய்ரோவில் நான் ஒருநாள் நின்று கொண்டிருந்தேன். அவன் தேவனுடைய ஜனங்களைத் துன்புறுத்தி, அவர்களை கடினமாக வேலை வாங்கி அடிமைகளாக்கியிருந்தான். அந்த இடம் இப்பொழுது பாழடைந்து, இருபது முப்பது அடி ஆழத்தில் புதைந்து கிடக்கிறது. நான் இங்கிலாந்திலுள்ள லண்டனில் நின்று கொண்டிருந்தேன். அங்கு மிகப்பெரிய ராஜாக்கள் பரம்பரையாக அரசாண்டனர். இப்பொழுது பார்க்கப் போனால், அது பூமிக்கடியில் புதைந்துள்ளது. அது என்ன? ''நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப் போகிறதையே நாடித்தேடுகிறோம்.'' 88இந்த ராஜ்யங்கள் எதற்கு? நித்தியமான ஒருவர் இருக்கிறார் என்பதை உங்களுக்கு அறிவிக்கவே. ஒரு மரம் ஏன் அழகாயுள்ளது? அது தேவனுடைய புத்திரர் முழுவதுமாக வெளிப்படுவதற்கு ஆவலோடே காத்திருக்கிறது. அப்பொழுது அது நித்திய காலமாக ஜீவிக்கும். வரப்போகும் ராஜ்யம் ஒன்றுள்ளது. ''நிலையான நகரம் நமக்கு இங்கு இல்லை, வரப் போகிறதையே நாம் நாடித்தேடுகிறோம். அங்கே, தேவன் நமக்கு அசையாத ஒரு இராஜ்யத்தை தர வேண்டியவராயிருக்கிறார். உலகிலுள்ள அனைத்துமே அசைக்கப்படக் கூடியது. அது விழுந்து கொண்டிருக்கிறது. எல்லாமே அழிந்து கொண்டிருக்கிறது. நாம் மரித்துக் கொண்டிருக்கும் உலகில் வாழ்ந்து வருகிறோம். எல்லாமே மரித்துக் கொண்டிருக்கிறது. மரங்கள் பட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. புல்சாகின்றது. மலர்கள் வாடிப் போகின்றன. நகரங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன, உலகம் மரித்துக் கொண்டிருக்கிறது, நீங்கள் மரித்துக் கொண்டு வருகிறீர்கள், எல்லாமே மரித்துக் கொண்டு வருகிறது. நானும் மரித்துக் கொண்டிருக்கிறேன். காற்றிலுள்ள குறிப்பிட்ட அமிலங்களும் இரசாயனங்களும்... 89வெறும்.... இங்குள்ள இந்த பெரிய பாலத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அது கட்டப்படும் போது நான் கண்டிருக்கிறேன். அப்பொழுது மனிதர் உயிரிழந்ததையும் கண்டேன். அதைக் குறித்து நான் ஏற்கனவே முன்னுரைத்த போது, எனக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு விட்டதாக என் தாயார் கருதி என்னை மருத்துவரிடம் கொண்டு போகத் தீர்மானித்தார்கள். நான் அவர்களிடம், ''இங்கு ஒரு பாலம் கட்டப்படுவைதக் கண்டேன். அங்கு உயிரிழந்த மனிதர்களையும் நான் கணக்கிட்டேன்'' என்றேன். இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து அங்கு பாலம் கட்டப்பட்டு, அதே எண்ணிக்கை மனிதர் உயிரிழந்தனர். அது பதினாறு பேர் என்று நினைக்கிறேன். அந்த பெரிய இரும்பு உத்திரங்களை அவர்கள் வைத்துக்கட்டின போது, அது என்றென்றைக்கும் நிலை நிற்கும் என்று நான் எண்ணினேன். ஆனால் அவர்கள் அதற்கு மூன்று நான்கு முறை வர்ணம் அடித்துவிட்டார்கள், இப்பொழுதும் அது துரு பிடித்து வருகிறது. அது என்ன? காற்றிலுள்ள கதிர்கள் அதை எரிக்கின்றன. 90அழகான பதினாறு வயது பெண்ஒருத்தி மெல்லும் பசையை மென்று சபையில் உட்கார்ந்து கொண்டு, பிறகு வெளியே சென்று, கவர்ச்சியாக காணப்பட உடைகளை மேலே இழுத்து விட்டு, நெளிந்து கொண்டு நடப்பதைக் காண்கிறோம். ஆனால் சில நாட்கள் கழித்து அவளுக்கு வயதாகி முகத்தில் சுருக்கம் விழுகின்றது. அவள் நெளிந்து நடந்த அந்த உடல்; அதற்குள் ஒரு ஆவி ஆதிக்கம் செலுத்த அவள் அனுமதித்து அவளுடைய நல்லொழுக்கத்தை நாய்களுக்கு வீசி எறிந்தாள். விபச்சாரம் செய்த குற்றத்துக்காக அவள் நியாயத்தீர்ப்பின் நாளில் பதில் சொல்லியாக வேண்டும். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று. அவள் மண் என்றும், அவள் மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்பதையும் உணராமலிருக்கிறாள். ''நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.'' அது என்ன? அவள் மாத்திரம் அதை உணர்ந்து அவள் செய்வதை நிறுத்தி விடுவாளானால் அது விளங்காத சத்தம். ''நல்லது, தொலைகாட்சியில் இன்னார் இன்னார், பள்ளியில் இன்னார் இன்னார். ''உங்கள் பள்ளியில் உள்ளவர்களைப் போலநீங்கள் நடந்து கொள்ளாதீர்கள். அது உங்களுக்கு மாதிரியாக அமைய வேண்டாம். தேவனை நோக்கிப் பாருங்கள்! 91ஓ, நிச்சயமற்ற சத்தங்கள். தேர்தல். அது எப்படி நிச்சயமற்ற காலமாக இப்பொழுது உள்ளது! நமக்கு நேரமிருந்தால் வேதாகமத்தைத் திருப்புவோம். அங்குள்ள சகோதரிகள் வேத வசனங்களைக் குறித்துக் கொள்வதைக் காண்கிறேன். இப்பொழுது, 2; தீமோத்தேயு, 2ம் அதிகாரம். சில நிமிடங்கள் படிப்போம்... இல்லை , 2; தீமோத்தேயு: 3ம் அதிகாரம். இதைப் படிப்போம். கவனியுங்கள். ''அறிவாயாக'' இது ஒரு ஆவி. மேலும் கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. இன்று காலை நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு - கி.பி. 66ம் ஆண்டில், இக்காலத்தைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் உரைத்தவைகளாம். எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப் பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய், தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும். இன்றைய காலத்தைப் பாருங்கள். நீங்கள் பரிசுத்தத்தைக் குறித்துப் பேசினால் அவர்கள் உங்களை, ''உருளும் பரிசுத்தர்'' என்றழைப்பார்கள். பிள்ளைகள் எப்படியிருக்கிறார்கள் என்று பாருங்கள். “பிள்ளைகளின் தவறு'' (Juvenile Delinquency) என்பதைக் குறித்து அவர்கள் பேசுகின்றனர். பெற்றோரே, அந்த விஷயத்தில் நான் உங்களுடன் இணங்கப் போவதில்லை. அது பிள்ளைகளின் தவறல்ல, பெற்றோரின் தவறு (Parent Delinquency). பாருங்கள், அதுதான் அது. 92முன்காலத்து கென்டக்கி தாய்மார்கள் உங்களில் சிலர் படிப்பில்லாதவர்கள் என்றழைக்கிறீர்கள். அந்த பழைய காலத்து தாய்மார்கள் தொப்பியை அணிந்து கொண்டு படிப்பில்லாதவர்களாய், மொழியின் முதலெழுத்துக்களையும் கூட அறியாமல் இருந்திருக்கலாம். அவளுக்கு அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் மகள் உங்களில் சிலரின் மகள்களைப் போல் இரவு நேரத்தில் உடைகள் மேலே இழுக்கப்பட்டும், உதட்டுச் சாயம் முகம் முழுவதும் பூசப்பட்டும், தலைமயிர் கலைந்தும் வீட்டுக்கு திரும்பி வரட்டும். அவள், “கண்ணே, மகிழ்ச்சியான தருணம் அனுபவித்தாயா?'' என்று கேட்க மாட்டாள். அவள் கையில் கிடைக்கும் ஒரு மரத்துண்டை எடுத்து - அதுவே அவளுடைய மகள் வெளியே செல்லும் கடைசி முறையாக இருக்கும். ஆனால் நீங்களோ அவளை, ''படிப்பில்லாதவள்'' என்கிறீர்கள். ஆம்! அதுதான். நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் (நல் வாழ்க்கை வாழ முயல்பவர்களைப் பகைத்தல், பாருங்கள்) துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப் பிரியராயிராமல், சுகபோகப்பிரியராயும், என்னே, அவர்கள் பந்து விளையாட்டுக்குச் செல்ல, அல்லது அப்படி ஏதாவதொன்றைச் செய்ய லட்சக்கணக்கான டாலர்கள் செலவழிப்பார்கள்; அல்லது சினிமா நட்சத்திரம் ஏதாவதொரு நிகழ்ச்சியை நடத்தினால் - அநேக ஆண்டுகளுக்கு முன்பிருந்த ரோம் சர்க்கஸ் போல. ஆனால், தெருவின் மறுபக்கத்திலுள்ள பரிசுத்த ஆவி கூட்டத்துக்குப் போகும் விஷயத்தில், அவர்கள் செல்லாமல் உட்கார்ந்து கொண்டு கேலி செய்வார்கள். 93நீங்கள், ''நல்லது, சகோ. பிரன்ஹாமே, அது கம்யூனிஸ்டுகள்'' எனலாம். சரி, நம் வசனம் என்ன கூறுகிறதென்று பார்ப்போம். தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். அவர்கள் எதன் பெலனை மறுதலிக்கிறவர்கள்? தேவனுடைய வல்லமையை. ''தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள். அவர்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்து கொண்டு, சபைக்குச் சென்று, சபையிலுள்ள பரிசுத்த ஆவி ஆதியில் செய்த அதே கிரியைகளை செய்து அதே விதமாக அவர்களை நடந்து கொள்ளும்படி செய்கிறது என்பதை மறுதலித்தல். ஓ, என்னே! ஸ்தாபன சாபம் என்னவென்று பார்த்தீர்களா? ஊ! நீங்கள் என் மீது கோபிக்க மாட்டீர்கள் என்றுநினைக்கிறேன். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதை புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன். பாருங்கள்? இப்பொழுது இதை கவனியுங்கள். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை ''(அவர் சபைக்கு என்ன கூறுகிறார்?) நீ விட்டு விலகும். அதிலிருந்து விலகி வா! அதைவிட்டு வெளியே வா! 94அது உண்மை. நாம் இன்னும் ஓரிண்டு வசனங்களைப் படிப்போம். கவனியுங்கள். இப்படிப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். அது எவ்வளவு நிச்சயமற்றது என்பதைப் பார்ப்போம். எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து அவர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள். சத்தியம் என்பது என்ன? இயேசுவே சத்தியம். ''நானே சத்தியம்'' என்று அவர் கூறியிருக்கிறார். பிலாத்து, ''சத்தியம் என்பது என்ன?'' என்றான். ''நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்.'' 95பெண் பிள்ளைகள் எல்லாவிதமானமாதர் சங்கங்களை அமைத்துக் கொண்டு, போர்வைகள் உண்டாக்கி, நகைச்சுவை துணுக்குகளைக் கூறி, போதகருக்கு சம்பளம் கொடுக்க இரவு உணவு, சூப், இரவு உணவு போன்றவைகளை நடத்தி, இயேசு கிறிஸ்து இன்று அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையிலும் பரிசுத்த ஆவியிலும் இருக்கிறார் என்னும் சத்தியத்தை உணராதவர்களாயிருக்கின்றனர். பாருங்கள், உணரமுடியவில்லை. ''புத்தியில்லாத பெண் பிள்ளைகள்.'' அவர், சகோதரிகளாகிய உங்களை, புத்தியில்லா பெண் பிள்ளைகள்'' என்று குறிப்பிடவில்லை. சரி, ''பற்பல இச்சைகளால் இழுப்புண்டு.'' அதைக் காட்டிலும் மேலானவைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எனவே, என் சகோதரிகளே, உங்களுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். 96“ஒருபோதும் உணராதவர்கள்.'' ஒரு சம்பிரதாய ஸ்தாபனம் எவ்வளவு நிச்சயமற்ற சத்தத்தை அளிக்கிறது! இன்றைய சபையின் சத்தம் எவ்வளவு நிச்சயமற்றதாயுள்ளது! என்ன செய்ய வேண்டுமென்று யாருக்குத் தெரிகிறது? இன்றைய சபையை உங்களுக்குக் காண்பிக்கட்டும். போர் மேகம் எல்லா விடங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாவிடங்களில்லும் தொல்லைகள். ஜனங்கள் தங்கள் சபைக்கு ஓடிச் செல்கின்றனர், ஆனால் பதிலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கிறிஸ்துமஸ் இரவன்று, ''கிழக்கிலுள்ள நட்சத்திரத்துக்கு பதில் எதுவுமில்லை'' என்பதைக் குறித்து பிரசங்கிக்கப் போகிறேன். இப்பொழுது கவனியுங்கள். ஓ, என்னே! அது அங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்கான பதில் அவர்களிடம் இல்லை. அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏன்? அவர்கள் குறிப்பிடக்கூடிய ஒன்றே ஒன்று, “நாங்கள் இதை வேதாகமக் கல்லூரியில் படித்தோம்'' என்று. அவர்கள் கல்லூரியில் என்ன செய்தனர் என்பதில் சபை சார்ந்திருக்கவில்லை. சபையில் ஜீவிக்கும் பரிசுத்த ஆவிதான் அதை வழிநடத்தி, வழிகாட்டி, தீத்துராயன் நாட்களில் செய்தது போல், வரப்போகிற காரியங்களை அதற்கு அறிவிக்கிறது - வரப்போகும் கோபாக்கினையினின்று தப்பியோட அவர்களை எச்சரிக்கிறது. ஓ, என்னே ”ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.'' 97அப்படியானால், ஏதாகிலும் உண்டா? என்று கேட்கிறேன். இன்று காலை உங்களை நீண்ட நேரம் வைத்திருக்க விரும்பவில்லை. நிச்சயமுள்ள ஏதாகிலும் உண்டா? நிச்சயமற்ற அநேக காரியங்களை உங்களுக்கு நான் எடுத்துரைத்திருக்கும் போது, நிச்சயமுள்ள ஏதாகிலும் உண்டா? ஏதாவதொன்றைக் குறித்து நிச்சயமுண்டா? நிச்சயமாக உண்டு. அப்படியிருப்பதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நிச்சயமுள்ள ஏதாகிலும் உண்டா? நிச்சயமுள்ளது எதுவென்று உங்களிடம் கூற விரும்புகிறேன். அதுதான் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம். நீங்கள் அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால், அதற்கு நாம் வேதாகமத்தைத் திருப்பப் போவதில்லை, ஆனால் நீங்கள் குறித்துக் கொள்ளலாம். அது மத்தேயு; 24:35. இந்நாட்களில் என்ன நடக்குமென்று இயேசு உரைக்கிறார். மத்தேயு; 24:35ல் அவர், ''வானமும், பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' என்று கூறியிருக்கிறார். அது நிச்சயம், இல்லையா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அந்த ஒரு காரியம் மிகவும் நிச்சயமுள்ளது, அது அவருடைய வார்த்தை. நாம் நமது சபையின் மேல் கட்டமுடியாது, நமது தேசத்தின் மேல் கட்ட முடியாது. இவை மிகவும் நிச்சயமற்றவை. ஆனால் நிச்சயமுள்ள ஒன்றுண்டு, அதுதான் தேவனுடைய வார்த்தை. நீங்கள் நிச்சயமாக அதன்படி செய்யவேண்டும். 98ஒருவர், ''நிச்சயமுள்ள ஒன்று வரிகளே“ (taxes) என்றார். ஓ, இல்லை, வரிகள் அவ்வளவு நிச்சயமுள்ளவைகள் அல்ல. கர்த்தர் வருவாரானால், வரி வசூலிப்பது நின்றுவிடும். அது முடிந்து விடும். அவர்கள், ''மரணம் நேரிடுவது நிச்சயம்'' என்கின்றனர். இல்லை, ஐயா, மரணம் நேரிடுவது நிச்சயம் அல்லவே அல்ல. எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழக்கூடும், அப்பொழுது மரணம் இருக்காது. மரணம் நேரிடுவது அவ்வளவு நிச்சயம் அல்ல; அல்ல, அல்ல, இந்நாளில் அல்ல. அநேக ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இருந்தது, ஆனால் இப்பொழுது அல்ல. மரணம் அவ்வளவு நிச்சயம் அல்ல. ஒரு காலத்தில் தேவனுடன் சஞ்சரித்த ஒரு மனிதனை எனக்குத் தெரியும் - அது மாதிரியாகக் காண்பிக்கப்பட்டது. ஒருநாள் அவன் நடந்து களைப்புற்று, அவன் இலகுவாகி, மேலே நடக்கத் தொடங்கி, தேவனுடன் வீடு சென்றான். பாருங்கள்? அது யாரென்று யாருக்காகிலும் தெரியுமா? (சபையோர், ''ஏனோக்கு'' என்கின்றனர் - ஆசி). ஏனோக்கு. அவன் யார்? இந்நாளிலுள்ள சபைக்கு அவன் முன்னடையாளமாயிருக்கிறான். 99நோவாவும் முன்னடையாளமானவன், சென்ற வாரம் பாடத்தில் அதை நாம் பார்த்தோம். விடப்பட்ட இஸ்ரவேலருக்கு நோவா முன்னடையாளமாயிருக்கிறான். அவர்கள் மறுரூப் மலையின் மேலும், ஐரோப்பாவிலும், பாலஸ்தீனாவிலும் இருந்து கொண்டு இதை கவனித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள்... ஏனோக்கு, காணாமற்போனதை நோவா கண்டபோது, “ஏனோக்குக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்கே?'' என்று யோசிக்கத் தொடங்கினான். நோவா ஏனோக்கின் பேரன். அவன்,”ஏனோக்கு எங்கே? அவனுக்கு என்ன நேர்ந்தது? அவனைக் காணவில்லையே,'' என்று கூறி பேழையைச் செய்யத் தொடங்கினான். அப்பொழுது காலம் சமீபமாயிற்று என்பதை அவன் அறிந்து கொண்டான். 100சபையும் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஜனங்கள், ''நான் போலீஸக்கு அறிவித்து விட்டேன். நான் எல்லா விடங்களுக்கும் தொலைபேசி மூலம் அறிவித்து விட்டேன். அவள் மேசையினருகில் உட்கார்ந்து கொண்டிருந்தாள், திடீரென்று மறைந்து விட்டாள். அவளுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. என்பார்கள். காவற்படையினரும், ''அப்படி பலர் காணாமற்போனதாக இன்று காலை ஐந்நூறு பேர் தொலைபேசியின் மூலம் எங்களுக்கு அறிவித்துள்ளனர்'' என்பார்கள். என்ன நடந்தது? புறஜாதிகளாகிய உங்களுக்கு காலம் முடிவடைந்துவிட்டது. அது உண்மை விழிப்புடன் இருங்கள். 101தேவனுடைய வார்த்தை நிச்சயமுள்ளது. ''வானமும் பூமியும் ஒழிந்து போகும்,'' மத்; 24:35, ''ஆனால், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஒரு போதும் தவறாது.'' ''வானமும், பூமியும் ஒழிந்துபோகும்'' என்று இயேசு கூறினார். நீங்கள், “வானமா?'' என்று கேட்கலாம். ஆம். வெளிப்படுத்தல்; 21ல் யோவான், “பின்பு, நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும், முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல (அது தான் அது) ஆயத்தமாக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளான். ஓ, அங்குதான் நான் இருக்க விரும்புகிறேன். தேவனே, அந்த நாளில் அங்கிருக்க எனக்குதவி செய்யும். சரி. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிச்சயமானவை. அதை நாம் உணருகிறோம். 102நாம் வேத வசனத்தை எடுத்து, அல்லது வேதாகமத்தில் சிறிது பயணம் செய்து, முன் காலத்தில் விசுவாசித்தவர்கள் எவர் என்றும், தேவனுடைய வார்த்தை நிச்சயமான சத்தம் என்று நம்பி எப்படி வெளியே வந்தனர் என்பதைக் காண்போம். இரண்டு அல்லது மூன்று பேர்களைக் குறித்து பார்க்கத்தக்கதாக வேதாகமத்தின், முதல் பாகத்திற்கு நாம் செல்வோம் என்பதைக் காண்போம்; இன்னும் பதினைந்து நிமிடங்களில் நாம் ஜெப வரிசைக்கு ஆயத்தமாவோம். நாம் தொடக்கத்திற்கு சென்று சகோதரன் நோவாவை எடுத்துக் கொள்வோம். ஆதியாகமத்தில் நோவா, நோவாவின் காலத்தில் இரண்டு, மூன்று சத்தங்கள் இருந்தன என்று நாம் காண்கிறோம். அவைகளில் ஒன்று மழை பெய்யப்போகிறது'' என்று நோவா கேட்ட தேவனுடைய சத்தம். இப்பொழுது தேவன்... 103கவனியுங்கள், தேவன் உலகத்தின் காரியங்களுக்கு மூடத்தனமாயுள்ள ஏதாவதொன்றை உங்களிடம் வழக்கமாக கூறுவார். அவர் உலகத்தை குழப்பத்தில் ஆழ்த்தவே இப்படி செய்கிறார். பாருங்கள்? அவர்கள் தங்கள் சிந்தையில் குழப்ப முற்றுள்ளனர். அவர்கள், ''உருளும் பரிசுத்தரின் கூட்டம். ஓ, தயவு செய்து அதை என்னிடம் கூறாதீர்கள் - பரிசுத்தமுள்ள தேவன் இப்படிப்பட்ட கூட்டத்தினரின் மத்தியிலா வாசம் செய்வார்?'' என்கின்றனர். பாலாக்கும், பிலேயாமும் இஸ்ரவேல் ஜனங்களை பாளயத்தில் பார்த்தபோது அதைத்தான் கூறினர். அவர்கள், இவர்கள் நீசத்தனமான எல்லா செய்கைகளையும் புரிந்துள்ளனர்,'' என்றனர். ஆனால் அவன் பாளயத்திலிருந்து அடிக்கப்பட்ட கன்மலையையும், வெண்கல சர்பத்தையும், அற்புதங்களும், அடையாளங்களும் சுகமடைதலும் நடப்பதைக் காணத் தவறினான். இருவரும் அடிப்படையில் ஒரேவிதமாக இருந்தனர். ஆனால், தேவன் தீவிரமாக ஏதாவதொன்றைச் செய்வார். தேவன் தீவிரமுள்ளவர். அது வினோதமாக ஒலிக்கக் கூடும். ஆனால், அவர் அப்படித்தான். இன்னும் சில பேர்களின் மூலம் இதைக் காண்போம். 104நோவாவைப் பாருங்கள். நோவாவின் காலத்தில் வானத்திலிருந்து மழை பொழியவில்லை என்று வேதம் கூறுகிறது. அவர் பூமியின் ஊற்றிலிருந்து பூமிக்குத் தண்ணீர் பாய்ச்சினார். மழை பெய்யவேயில்லை. ஆனால், இங்கு ஒரு மூட மதாபிமானி தண்ணீரில் மிதக்கவிட இரண்டு நகர் பிளாக்குகள் நீளத்துக்கு ஒரு பேழையை உண்டாக்குகிறான் - அங்கு மிதக்க விட தண்ணீர் இல்லாத போதே. அங்கு தண்ணீர் எதுவுமில்லை. அப்பொழுது பூமியில் இருந்தது ஊற்று மாத்திரமே. அவர்கள், ''இதை ஏன் அவன் செய்து, உள்ளும் புறமும் கீல் பூசுகின்றான்? நோவா, தண்ணீர் எங்கிருந்து வரப்போகின்றது?'' என்றனர். “மேலேயிருந்து'' என்றான். ''நான் ஒரு விஞ்ஞானி. அங்கு தண்ணீர் இல்லையென்று என்னால் நிரூபிக்க முடியும். அங்கு தண்ணீர் இருக்குமானால், அது இப்பொழுதே கீழே வந்திருக்கும். அங்கு தண்ணீர் எதுவுமில்லை. அதை நான் விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியும்.'' ஆனால் நோவா, “தேவன் அங்கே தண்ணீரை வைக்க வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள், அதுதான். அங்கு மேலே தண்ணீர் இருக்கும் என்று தேவன் கூறினார், அது அங்கு இருக்கும்.'' “நோவா, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.'' ''அதற்காக நான் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன், பாருங்கள். நான் ஆயத்தப்படுத்துகிறேன்.'' 105விஞ்ஞானம் ஒரு சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அது, ''அந்த மலையின் மேலுள்ள உருளும் பரிசுத்தர் கூட்டத்தினர் பைத்தியம் பிடித்தவர்கள். அவர்களுக்கு மூளையில் ஏதோ ஏற்பட்டுவிட்டது. அவர்கள் ஒருபெரிய பேழையை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதைக் கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகின்றனர்? உலகத்திலுள்ள எல்லா பாகத்தை நனைக்கவும் கூட போதிய தண்ணீர் இராது. ஆனால் இங்கே அவர்கள், ''அது மிதக்கப் போகின்றது. மேலேயிருந்து தண்ணீர் கொட்டப் போகின்றது'' என்று கூறுகின்றனர் என்றது. விஞ்ஞானத்துக்கு அது எவ்வளவு மூடதனமாகக் காணப்பட்ட போதிலும், அவன் நிச்சயமுள்ள ஒரு சத்தத்துக்கு செவி கொடுத்துக் கொண்டிருந்தான். தேவன், ''நான் உலகத்தை தண்ணீரினால் அழிக்கப்போகிறேன்'' என்றார். அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை. அப்பொழுது அது நிச்சயமற்றதாய் மற்றவர்களுக்கு ஒலித்திருக்கக் கூடும். அது எவ்வளவு மூடத்தனமாக ஒலித்தாலும், அது தேவனுடைய வார்த்தை. 106தேவன், “நானே உன்பரிகாரியாகிய கர்த்தர்'' என்று கூறி யுள்ளார். அதைக் குறித்து எவ்வித நிச்சயமின்மையும் இல்லை. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். தேவன், “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள விரும்புகிற யாவருக்கும் அதைத் தந்தருளுகிறேன்'' என்று கூறியுள்ளார். அதைக் குறித்து எவ்வித நிச்சயமின்மையும் இல்லை. ''நான் ஒரு குடிகாரன். நான் ஒரு விபச்சாரி. நான்...'' என்று நீங்கள் யாராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. ''விருப்பமுள்ளவன் வந்து பெற்றுக் கொள்ளக்கடவன்.'' எந்த நிச்சயமின்மையும் இல்லை. அவர், ''1960ம் ஆண்டில் வில்லியம் பிரன்ஹாம் வருவாரானால், அவருக்கு ஜீவத்தண்ணீர் ஊற்றைத் தருவேன்'' என்று சொல்லியிருந்தால், அது நல்லதாக ஒலித்திருக்கும். ஆனால் இரண்டு வில்லியம் பிரன்ஹாம்கள் இருக்கக்கூடும். ஆகவே அது நானா என்று சந்தேகிக்க வகையுண்டு. அவர் அப்படி கூறாமல், “விருப்பமுள்ளவன் யாராகிலும், என்று கூறியிருப்பதால், அது என்னையும் குறிப்பிடுகிறது என்று அறிந்திருக்கிறேன். ஏனெனில், அதை பெற்றுக்கொள்ள எனக்கு விருப்பமுண்டு. எனவே பாருங்கள், தேவனுடைய வார்த்தை நிச்சயமுள்ளது. 107ஆனால் வெளிப்புற உலகிற்கு, விஞ்ஞான உலகிற்கு, அது நிச்சயமற்றதாய் ஒலிக்கிறது, பாருங்கள். அவர்கள், “யார் அப்படி நினைப்பார்கள்? இப்பொழுது கவனியுங்கள். இரவில் சந்திரனும் நட்சத்திரங்களும் உள்ளன. வாயு மண்டலம் - உள்ளது,'' என்றனர். அக்காலத்தில் அவர்கள் இக்காலத்திலுள்ளவர்களை விட அறிவில் சிறந்தவர்களாய் விளங்கினர். அக்காலத்தில் அவர்கள் ஸ்திரீயின் முகமும் சிங்க உடலும் இறக்கைகளும் கொண்ட சிலைகளை உண்டாக்கினர் (Sphinx). இக்காலத்தில் அதை நாம் கட்ட முடியுமா? அதன் ஒரு பாகத்தை தூக்கி அங்கு நிறுத்த பதினாறு இயந்திரங்கள் தேவைப்படும். அது ஆகாயத்தில் நகர பிளாக்குகளின் உயரத்துக்கு பாதி உயரத்தில் தொங்குகிறது. அதை நாம் கட்ட முடியுமா? அக்காலத்தில் அவர்கள் கூர்நுனிக் கோபுரத்தைக் கட்டினர். அதன் ஒரு கல் மாத்திரம் ஆயிரக்கணக்கான டன்கள்எடை யுள்ளது. அதைக்கட்ட உலகில் இப்பொழுது ஒன்றுமில்லை. அதை அங்கு தூக்கி நிறுத்த நம்மிடம் சக்தி வாய்ந்த இயந்திரங்கள் எதுவுமில்லை. அது சாந்து பூசாமலே அவ்வளவு அழகாக கட்டப்பட்டுள்ளது. அவர்கள் அதை தரையில் செதுக்கி, மேலே எப்படியோ தூக்கி நிறுத்தினர். ஒரு சவரக் கத்தியைக் கூட அதற்குள் நுழைக்க முடியாத அளவுக்கு அவை ஒன்றுகொன்று அழகாக பொருந்தியுள்ளன. நம்மைக் காட்டிலும் அவர்கள் அறிவில் சிறந்தவர்கள். அதே அறிவு... அவர்கள் ஒரு சாயம் வைத்திருந்தனர். அவர்கள் சவத்தை அக்காலத்தில் தைலமிட்டு பாதுகாத்தனர். இன்றைக்கு நாம் சவத்தை தைலமிட்டு பல ஆண்டுகளாக பாதுகாக்க முடியாது. எதை உபயோகித்தால் அதை பாதுகாக்கலாம் என்று நமக்குத் தெரியாது. அவர்கள் ஒரு சாயம் வைத்திருந்தனர். அதை அவர்கள் துணிகளுக்குப் போடுவது வழக்கம். அப்படிப்பட்ட கெட்டியான சாயம் நம்மிடையே இப்பொழுது இல்லை. அப்படிப்பட்ட ஒன்றையும் நம்மால் செய்ய முடிவதில்லை. அவர்கள் பெற்றிருந்த அநேக பொருட்கள் இப்பொழுது நம்மிடையே இல்லை. 108சில நாட்களுக்கு முன்பு அவர்கள் மெக்ஸிகோவில், ஜலப்பிரளயத்துக்கு முன்பு புதைந்து போன நீரைக் சுத்தமாக்கி நகரங்களுக்குப் பங்கிடும் அமைப்பு ஒன்றை (Water Works) தோண்டியெடுத்தனர். அது நவீன அமைப்பைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு சிறந்ததாயிருந்தது. பாருங்கள்? ''நோவாவின் காலத்தில் நடந்தது போல.'' அப்படிப்பட்ட சிறந்த அறிவாளிகள். ''மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்,'' அறிவில் சிறந்த மற்றொரு சந்ததி. அக்காலத்து ஜனங்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தனர்! ஒருக்கால் அவர்கள் விஞ்ஞானத்தில் நம்மைக் காட்டிலும் சிறந்தவர்களாய் இருந்திருக்கக் கூடும். அவர்கள் ஒரு நட்சத்திரத்துக்கும் மற்றொரு நட்சத்திரத்துக்கும் இடையேயுள்ள தூரத்தை கணக்கு பார்த்திருப்பார்கள். அவர்கள் பிரம்மாண்ட மான கூர்நுனிக் கோபுரத்தை பூமியின் மையத்தில் சிறப்பாக நிறுத்தி, சூரியன் எங்கிருந்தாலும் கூர்நுனிக் கோபுரத்தைச் சுற்றிலும் நிழல் விழாத படிக்கு செய்து விட்டார்கள். காலையில், மாலையில், நடுப்பகலில் எப்பொழுதுமே நிழல் இருப்பதில்லை. பாருங்கள்? நான் அங்கு சென்றிருக்கிறேன். 109அவர்கள் புரிந்த இந்த செயல்களையும் அவர்களுக்கிருந்த சக்தியையும் பாருங்கள். அதுவரை மழை பெய்யவில்லை என்றும், மழை பெய்வதற்கு ஆகாயத்தில் ஒன்றுமில்லை என்றும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? மழை பெய்யப் போகிறது என்னும் செய்தியை அந்த மனிதனால் எப்படி மற்றவர்களுக்கு அறிவுறுத்த முடிந்தது? அவனால் முடியவில்லை. அவ்வளவுதான். நோவா பேழையின் வாசலில் நின்று கொண்டு, வந்து கொண்டிருக்கும் அழிவைக் குறித்து ஜனங்களை எச்சரித்தது போல, மறுபடியும் பிறந்த சுவிசேஷ பிரசங்கி இன்றைக்கு கிறிஸ்து இயேசுவாகிய வாசலில் நின்று கொண்டு, பரிசுத்த ஆவியினால் சூழப்பட்டவனாய், வரப்போகும் அழிவைக் குறித்து எச்சரித்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக. நோவாவின் நாட்களில் நடந்தது போல, இதோ, இந்நாட்களில் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். ''மழை அங்கிருந்து எப்படி பெய்ய முடியும்?'' என்று விஞ்ஞானம் எப்படி கூற முடியும்? அங்கிருந்து மழையை எப்படி பெய்யப் பண்ணுவது என்பதை தேவன் அறிந்திருந்தார். அவர் பூமியதிர்ச்சி உண்டாகும்படி செய்திருப்பார், அல்லது யாரிடமாவது அணுசக்தி இருந்திருக்கக் கூடும். அவர்கள் அதை உபயோகித்து பூமியின் சில பாகங்களை வெடிக்கச் செய்த காரணத்தால், ஒருக்கால் அது பூமியை தன் சுழற்பாதையிலிருந்து வெளியே தள்ளி, அதன் விளைவாக அது இன்று நேராக இல்லாமல் சாய்ந்திருக்கிறது. அவர்கள் அப்படி செய்யத போது, பூமியின் வெப்பமும், பூமியின் குளிர்ச்சியும் மாறி மாறி ஏற்பட்டு மேகங்களைத் தோன்றச் செய்திருக்கும். அவர் யேகோவாயீரே. அவருடைய வார்த்தை உரைத்துள்ள எதையும் அவர் தமக்கென்று உண்டாக்கிக் கொள்ளமுடியும். 110அவர் தமக்கென்று ஒரு சபையை உண்டாக்கிக்கொள்ள முடியும். அவருக்கு நான் தேவையில்லை, நீங்கள் தேவையில்லை. இல்லை, தேவையேயில்லை. அவரால் உண்டாக்கிக்கொள்ள முடியும். வேறு யாராகிலும் உங்கள் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியும். உங்கள் கிரீடத்தை வேறு யாராகிலும் எடுத்துக் கொள்ளாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள். அவருக்கு நாம் தேவையில்லை, ஆனால் நமக்கோ அவர் தேவை. நீங்கள் இவ்வுலகில் வாழ நேர்ந்தால், அவரை நிச்சயமாக பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், பேதுரு, கூறினது போல, அவர் ஒருவர் மாத்திரமே நமக்கிருக்கிறார். ''நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?'' என்று அவர் கேட்ட போது; அவர் அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கத் தொடங்கினார். அவர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தின போது, அவரைப் பெரிய மனிதனாகக் கருதினர். ஓ, அவர் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்த போது, அவர் பெரிய மனிதனாகக் கருதப்பட்டார். ஆனால் அவர் சத்தியத்தை எடுத்துரைக்கத் தொடங்கின போது என்ன நேர்ந்தது? அவர் மூட மதாபிமானியாகக் கருதப்பட்டு, எல்லோரும் அவரை விட்டுச் சென்றனர். அவர் சீஷர்களிடம் திரும்பினார். அவர் பிறருடைய ஆதரவை நாடாதவர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஏனெனில் அவர் தேவன். அவர் சீஷர்களிடம், ''நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?'' என்றார். பேதுரு, ''ஆண்டவரே, நாங்கள் யாரிடத்தில் போவோம்? நாங்கள் எங்கே போவோம்? நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. அதைக் குறித்து நாங்கள் நிச்சயமுடையவர்களாயிருக்கிறோம்,'' என்றான். பாருங்கள், அதைக் குறித்து எவ்வித நிச்சயமின்மையும் இல்லை. ''நீர் ஒருவர் மாத்திரமே அதைக் கொண்டிருக்கிறீர் என்று நாங்கள் நிச்சயமுடையவர்களாயிருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு உபதேசத்தின் காற்றிலும் அடிபட்டு அலைவதில்லை. நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டு என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தேவன் தன்னுடன் இராவிட்டால், நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்'' என்றான். நிக்கோதேமுவும் அதைதான் கூறினான். 111நோவா கேட்டுக் கொண்டிருந்த சத்தம் நிச்சயமற்றதா? இல்லை, ஐயா! அது சரியான சத்தம். ஜலப்பிரளயத்தினாலே உலகம் அழிக்கப்பட்டது. நோவா உரைத்தபடியே தேவன் மழை பெய்யப் பண்ணினார். ஏன்? தேவனுடைய வார்த்தை அவ்வாறு உரைத்தது. விஞ்ஞானம் மூழ்கி அழிந்தது. பாருங்கள், நோவாவைக் காப்பாற்றின அதே தண்ணீர் அவனைக் குற்றப்படுத்தினவர்களைக் கொன்று போட்டது. அது உங்களுக்கு தெரியுமா? அதே தண்ணீர், தண்ணீர் இல்லாமல் போயிருந்தால், நோவா காப்பாற்றப்பட்டிருக்க மாட்டான். பேழை தண்ணீரில் மிதந்தது. எனவே பேழையை மிதக்கச்செய்த அதே தண்ணீர், குற்றப்படுத்தினவர்களை மூழ்கடித்தது. இன்றைக்கு ஜனங்கள் கேலி செய்யும் அதே பரிசுத்த ஆவிதான் சபையை இரட்சித்து, குற்றப்படுத்துகிறவர்களை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தும். அதே பரிசுத்த ஆவி! ஒருவரை இரட்சிக்கிறது, மற்றவரைக் கொன்று போடுகிறது... விசுவாசிகளை எது இரட்சிக்கிறதோ, அது அவிசுவாசிகளை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்துகிறது. அது உண்மை. எனவே, பாருங்கள், தேவனுடைய வார்த்தையில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். அந்த ஒன்றின் மேல் நீங்கள் நின்று, அது நிச்சயமுள்ளதென்று அறிந்திருக்கலாம். தேவன் உரைப்பது எதுவோ, அது நிச்சயமுள்ளது. அதை விசுவாசியுங்கள்! 112இப்பொழுது வேறொரு ஆளை நாம் எடுத்துக்கொள்வோம்; மோசேயின் நாட்களில் மோசே தன் கல்வி திட்டங்கள், இராணுவத்திட்டங்கள் இவைகளின் மூலம் இஸ்ரவேல் ஜனங்களை இரட்சிக்க முயன்றான். ஏனெனில் அவர்களை இரட்சிக்கவே அவன் பிறந்திருக்கிறான் என்பதை அவன் அறிந்திருந்தான். அதை அவன் செய்ய அதுவே அந்த மணி நேரம். ஆனால் அவன் தன் சொந்த வழியில் முயன்றான். அவன் தன் கல்வியை உபயோகித்து, பெரிய சங்கம் போன்ற ஏதோ ஒன்றை அமைத்து, அதை ஒரு இராணுவ உபாயமாக்கினான். ஆனால் அவன் தன் சொந்த முயற்சியில் தோல்வி கண்டான். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ஆனால் ஒரு நாள் தேவன் எரிகிற முட்செடியின் அருகில் அவனைப் பிடித்துக் கொண்டார். அவர் எப்படி விவேகத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றை அந்த மனிதனுக்கு செய்தார் என்பதை பாருங்கள். தேவன் அவனை எரிகிற முட்செடியின் அருகில் இழுத்து, அவனுடன் பேசினார். அதற்கு முன்பு தேவன் அவனுடன் பேசினதில்லை. அவர் மனிதரிடம் பேசியிருக்கிறார் என்று அவன் புத்தங்களில் படித்திருந்தான். ஆனால் இப்பொழுது தேவன் நேரடியாக அவனுடன் பேசினார். அதன் காரணமாகத்தான் நோவா, தான் பேசுவது என்னவென்று அறிந்திருந்தான். ஏனெனில் தேவன் அவனுடன் பேசினார். அப்படித்தான் அவன் உறுதியாக அறிந்திருந்தான். அவன் தேவனிடமிருந்து நேரடியாக கேட்டான். பாருங்கள்? 113ஒரு காலத்தில் மோசே இராணுவ பயிற்சி பெற்று, மெருகேற்றப்பட்டு; ஓ, என்னே, அவன் சிறந்த அறிவாளி, இராணுவ வீரனும் கூட அவன், “என் அறிவு திறனைக் கொண்டு எனக்கு பிஎச்.டி, டி.டி.டி. இரண்டு எல்.டி பட்டங்கள் இன்னும் எத்தனையோ டாக்டர் பட்டங்கள் உள்ளன. இதை எப்படி செய்வதென்று நான் நன்கு அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் தான் எகிப்தின் மூளை'' என்றான். நீ எதினுடைய மூளையாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அதனால் ஒரு உபயோகமுமில்லை. தேவனுடைய விஷயத்துக்கு வரும்போது, அது மூடத்தனமாயுள்ளது. உன் ஞானம் தேவனுக்கு மூடத்தனம். பாருங்கள். ஏனெனில், ''உங்கள் வழிகளைப் பார்க்கிலும், என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது'' என்று தேவன் கூறியுள்ளார். பாருங்கள்? எனவே, உங்கள் சிறந்த ஞானம். 114பவுல், ''நான் உங்களிடத்தில் மனுஷ ஞானத்துக்குரிய நயவசனத்துடன் வரவில்லை. அப்படி நான் செய்திருந்தால், உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்தில் நின்றிருக்கும்,'' என்று கூறினது போல். பவுல் அப்படி செய்திருக்கலாம். ஏனெனில் அவன் ஒரு அறிவாளி. அவன், ''வேண்டுமானால் நான் அப்படி செய்திருக்கலாம். ஆனால் நீங்கள் மனுஷருடைய தத்துவத்தில் நின்றிருப்பீர்கள். ஆனால் உங்கள் விசுவாசம் தேவனில் நிலைத்திருக்கும்படி நான் தேவனுடைய பெலத்திலும் உயிர்த்தெழுந்த வல்லமையிலும் உங்களிடத்தில் வருகிறேன்,'' என்றான். பார்த்தீர்களா? மற்றது விளங்காத சத்தம். இதுவே நிச்சயமான சத்தம், உண்மை. 115நல்லது, நோவா... என்னை மன்னிக்கவும். மோசே நிச்சயமற்ற சத்தமாகியதன் வேத சாஸ்திரம், கல்வி இவைகளின் மூலம் முயன்றான். அது நிச்சயமற்றதாய் இருந்தது. ஆனால் ஒரு நாள் அவன் நிச்சயமுள்ள சத்தத்தைக் கேட்டான். ஓ, இப்பொழுது நான் பக்தி பரவசப்படுகிறேன். ஆம், அவன் நிச்சய முள்ள சத்தத்தைக் கேட்டான். அவன் புதரில் தொங்கிக் கொண்டிருக்கிற ஒளியைக் கண்டான். அங்கிருந்து ஒரு சத்தம், ''உன் பாதரட்சைகளைக் கழற்றிப் போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி'' என்றார். அவர் தொடர்ந்து, “என் ஜனங்கள் இடும் கூக்குரலைக் கேட்டேன். என் வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன்'' என்றார். ஆமென். அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் கிடையாது. ''நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபிடம் பண்ணின உடன்படிக்கையை நினைவு கூருகிறேன். என் வாக்குத்தத்தங்களை நான் நினைவு கூருகிறேன். அவைகளை நான் மறப்பதில்லை. என் ஜனங்களின் கூக்குரலை நான் கேட்டேன். அவர்களை விடுவிக்கும் நேரம் வந்துவிட்டது. மோசே, அதற்காக உன்னை அனுப்பப் போகிறேன்,'' என்றார். மோசே, ''நான் எப்படி திரும்பப்போவேன்?'' என்றான். கவனியுங்கள், ''நிச்சயமாக நான் உன்னோட கூட இருப்பேன். அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை.'' ''நான் மோசேயோடே இருந்தது போல், உன்னோடும் இருப்பேன்.'' பாருங்கள்? ''நான் உன்னோடே இருப்பேன்.'' அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை. 116அநேக ஆண்டுகளுக்குப் பிறகு அவர் யோசுவாவிடம், ''நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்.'' என்றார். “இந்த பெரிய மதில் பட்டினங்களை நான் எப்படி கைப்பற்றுவேன்?'' அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நான் மோசேயோடே இருந்தேன். உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். நீ நடந்து கொண்டேயிரு. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. ''அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை. ''நான் உன்னோடே இருப்பேன்.'' தேவன் மோசேயுடன், ''நான் நிச்சயமாக உன்னோடே இருப்பேன்'' என்றார். இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். ஒரு மனிதன் தேவனுடைய சத்தத்தைக் கேட்கும் போது; நீங்கள் தேவனுடைய வார்த்தையை கேட்கலாம். நீங்கள், “தேவன் என்னைச் சந்திக்க வந்திருக்கிறார்'' என்று கூறலாம். நான் இங்கு நின்று கொண்டு, விழுந்து சாகும் வரைக்கும் பிரசங்கம் செய்யலாம். நான் பத்து, இருபது, முப்பது, ஐம்பது ஆண்டுகள் பிரசங்கம் செய்தாலும், தேவன் வார்த்தையை உங்களுக்கு வெளிப்படுத்தி தராவிட்டால், உங்களால் தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியாது. நீங்கள் உங்கள் இருக்கையிலே அமர்ந்திருக்கலாம். நீங்கள் எரிகிற முட்செடியின் அருகில் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒருக்கால் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அருகாமையில் இருக்கலாம். இங்கு உட்கார்ந்திருங்கள். தேவன் வார்த்தையின் மூலம் உங்களுடன் பேசட்டும். 117“இந்த விதமான வாழ்க்கை வாழ்வதை நான் விட்டுவிட்டு, நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும். அது தேவன். தேவன் தமது வார்த்தையில் இருந்து கொண்டு, தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். என் வாழ்க்கையை நான் தேவனுடன் சரி செய்துக்கொள்ள வேண்டும்.'' அது தேவன், அது தேவன் என்பது நிச்சயம். என்றாவது ஒரு நாள் நான் மரிக்க வேண்டும். நிச்சயமாக நீமரிப்பாய். “நான் நியாயத்தீர்ப்பின் போது பதில் கூற வேண்டும். நிச்சயமாக நியாயத்தீர்ப்பின் போது நீ பதில் கூற வேண்டியவனாயிருக்கிறாய். உன் நியாயத்தீர்ப்பு எங்கே? இரக்கமே உனக்கு இருக்க முடியாத மேலேயுள்ள சிங்காசனத்திலா, அல்லது உனக்கு இரக்கம் கிடைக்கப் பெறும் இங்குள்ள சிங்காசனத்திலா? அது நீ தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று. ஏதேன் தோட்டத்தில் இருந்த விருட்சங்களைப் போல் - ஒன்று ஜீவ விருட்சம், மற்றது மரண விருட்சம். அதை அந்நாள் வரைக்கும் நீ தள்ளிப் போட்டால், நீ மரிப்பாய். அதை இப்பொழுதுதே ஏற்றுக்கொண்டால் நீ ஜீவிப்பாய். நீயே இப்பொழுது சீர்தூக்கி பார்க்க வேண்டியவன். நீயே இப்பொழுது நியாயதிபதி. ஆனால் அப்பொழுது அவர் நியாயாதிபதியாக இருப்பார். உனக்கு விருப்பமிருந்தாலும் இல்லாமற் போனாலும் நீயே இப்பொழுது நியாயாதிபதி. அதை நீ ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாமற் போனாலும், அவரே அப்பொழுது நியாயாதிபதியாயிருப்பார். எனவே, நீ என்ன செய்யப் போகிறாய் என்பதை இப்பொழுதே தீர்மானிக்க வேண்டும். அது உன்னைப் பொறுத்தது. ஆதாமும், ஏவாளும் போல, ஒவ்வொரு மனிதனுடைய முன்னிலையிலும் சரியும், தவறும் உள்ளன. எதைத் தெரிந்துக்கொள்ளப் போகிறாய் என்பதை நீயே தீர்மானம் செய்ய வேண்டும். ''நிச்சயமாக நான் உன்னோடே இருப்பேன்.'' 118''நான் எப்படி என் முதலாளியிடம் திரும்பச் சென்று, நான் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டேன் என்று கூறுவேன்?'' ''நிச்சயமாக நான் உன்னோடே இருப்பேன்.'' ''என் சத்தனத்தை நான் விட்டுவிடப் போகிறேன் என்று நான் எப்படி என் கணவனிடம் கூறுவேன்? நான் எப்படி அதை செய்யப் போகிறேன்?'' ''நிச்சயமாக நான் உன்னோடே இருப்பேன்.'' ''என் மனைவியிடம், நான் தவறான வாழ்க்கை வாழ்ந்து வந்தேன் என்றும், நான் தவறுகளைச் செய்தேன் என்றும் எப்படி கூறுவேன்? நான் எப்படி அதை செய்ய முடியும்? நான் எப்படி என் குடும்பத்தின் முன்னால் மறுபடியும் நிற்க முடியும்? நான் இப்படிப்பட்ட செயல்களைப் புரிந்தேன் என்று அவர்கள் அறிந்தால் என்னை எப்படி அவர்கள் நம்புவார்கள்? இப்பொழுது நான் எப்படி அவர்களிடம் சென்று, ''நான் ஒரு கிறிஸ்தவன்'' என்று கூற முடியும்?'' “நிச்சயமாக நான் உன்னோடே இருப்பேன்,'' என்கிறார் தேவன். 119நீ நினையாத காரியங்களைச் செய்யும்படி அது செய்யும். மோசேயைப் பாருங்கள். அது அவனை எவ்வளவு தீவிரமாக நடந்து கொள்ளும்படி செய்தது? எண்பது வயதான அந்த மனிதன் என்ன செய்தான்? நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, இப்பொழுது நான் நடுத்தர வயதுள்ளவனாகி விட்டேன், நான் வயோதிபனாகி விட்டேன்'' எனலாம். உங்களுக்கு எவ்வளவு வயதானாலும் எனக்குக் கவலையில்லை. அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. உன்னிடம் அவர் பேச உன்னை அமரிக்கையாயிருக்கும்படி அவர் செய்து, அவருடைய சத்தத்தை நீ கேட்கும் அந்த நாளில், உன் வயது என்னவாயிருப்பினும், அவர் உன்னுடன் பேசுகிறார். ''சகோ. பிரன்ஹாமே, அதை என்னால் எப்படி செய்ய முடியும்?'' எண்பது வயதான மோசேயைப் பாருங்கள். எகிப்து அப்பொழுது முழு உலகத்தையும் வென்று தன் ஆதிக்கத்தில் கொண்டிருந்தது. அவர்களிடம் எல்லா இராணுவ இரகசியங்கள்ளும் இருந்தன. மோசே தன் மனைவியைக் கோவேறு கழுதையின் மேலேற்றி, கெர்சோமை அவள் இடுப்பில் வைத்து இதோ அடுத்த நாள் காலை புறப்பட்டுச் செல்கிறான். அவனுடைய கையில் கோணலான தடி இருந்தது? அவனுடைய நரைத்து வெளுத்த தாடி இப்படி தொங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய வழுக்கை மண்டை ஒருக்கால் இப்படி பிரகாசித்திருக்கும். இந்த கோவேறு கழுதை நடந்து சென்றது. அவன் அதை இழுத்துக் கொண்டு சென்றான். அவன், ''தேவனுக்கு மகிமை! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்'' என்று உரக்க சத்தமிட்டுக் கொண்டே சென்றான். யாரோ ஒருவர், “மோசே, எங்கே போகிறாய்?'' என்று கேட்டார். ''எகிப்தைக் கைப்பற்ற அங்கு செல்கிறேன்.'' எவ்வளவு கேலித்தனமான, ஒரு காரியம்! 120ஆனால் தேவன் ஒரு மனிதனுடன் பேசி, அவன் தேவனுடைய சத்தத்தையும், தேவனுடைய வார்த்தையையும் தனக்குள் கொண்டவனாக இருப்பானானால், ''நீங்கள் என்னிலும்'' யோவான்; 15ம் அதிகாரம். ''நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதேதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். பாருங்கள், நிச்சயமின்மை எதுவுமில்லை. அது செய்யப்படும். அது உண்மை. நிச்சயமின்மை எதுவுமே கிடையாது. மோசே, நீ எப்படி... மோசே தேவனிடம், ''நான் எப்படி அதை செய்யப் போகிறேன், அது ஒரு மனிதனின் படையெடுப்பாயிருக்குமே! எண்பது வயது கிழவனாகிய நான், லட்சக்கணக்கானவர் உள்ள இராணுவத்தைக் கொண்ட அந்த தேசத்தை எப்படி கைப்பற்றுவேன்?'' என்று கூறியிருப்பான். ''நிச்சயமாக நான் உன்னோடே இருப்பேன்“ அவ்வளவுதான் அவனுக்குத் தெரிய வேண்டியது. இதோ அவன் போகிறான், அவன் அங்கு சென்றான். அவன் அதைக் கைப்பற்றவும் செய்தான். ஏன்? அவன் கேட்ட சத்தம் சரியானது என்பது நிச்சயமாக அறிந்திருந்தான். 121இன்று காலை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் சத்தமும் சரியானதே. ஏனெனில், அது தேவனுடைய வார்த்தை. எரிகிற சூளையில் போடப்பட்டஎபிரெயப் பிள்ளைகள், அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எப்படி அறிந்திருந்தனர்? அவர்கள், “எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்'' என்றனர். அவர் அதை முன்பு செய்ததில்லை. ”இருப்பினும் அவர் எங்களை எரிகிற அக்கினிச் சூளைக்கு நீங்கலாக்கி விடுவிப்பார் என்று உறுதியாக அறிந்திருந்கிறோம்.'' அதைக்குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை. ''அவருடைய சித்தத்தை நாங்கள் அறிந்திருக்கிறோம். எனவே, நாங்கள் உம்முடைய சிலைக்கு முன்பாக பணியமாட்டோம்.'' [நாங்கள் அந்த விருந்துக்கு செல்ல மாட்டோம், நாங்கள் சிகரெட்டு புகைக்க மாட்டோம், நாங்கள் மது அருந்தமாட்டோம், நாங்கள் பொய் சொல்ல மாட்டோம், நாங்கள் விபச்சாரம் செய்ய மாட்டோம், எங்கள் மனைவிகளை நாங்கள் கொடூரமாக நடத்த மாட்டோம், எங்கள் கணவர்களின் மேல் நாங்கள் ஆதிக்கம் செலுத்த மாட்டோம்.] இது நிச்சயம், தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். 122''நீங்கள் அப்படி மாறினால், அவர்கள் உங்களை சூதாட்டத்திலிருந்தும், சீட்டுக் கச்சேரியிலிருந்தும் தள்ளிவிடுவார்கள்.'' ''அவர்கள் எனக்கு என்ன செய்தாலும் கவலையில்லை. தேவன் என்னைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்.'' ''அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? நீங்கள் தலைமயிரை மறுபடியும் நீளமாக வளர்த்து, நீண்ட உடைகளை அணிந்து, நற்பண்புள்ள பெண் போல் நடந்து கொண்டால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? உங்களை அநாகரீகம் என்று அழைப்பார்கள்.'' ''அவர்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் என்னைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அதைத் தான் இன்று நான் விரும்புகிறேன். தேவன் என்னைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவ்வளவுதான். ''அடுத்த கோடை காலத்தின் போது, நீ குட்டை கால் சட்டை அணியாமல் போனால், சூசி என்ன சொல்வாள்?'' “சூசி என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் என்ன சொல்கிறார் என்பதையே நான் அறிய விரும்புகிறேன். ஏனெனில், சூசியிடம் நிச்சயமில்லாத சத்தம் உள்ளது. ஆனால், தேவன் கூறுவதே சரி, பாருங்கள், அது நிச்சயமுள்ள சத்தம்.'' எனவே, அவர் எபிரெய பிள்ளைகளை அக்கினிச் சூளையினின்று விடுவித்தார். 123ஆபிரகாம் இருபத்தைந்து ஆண்டு காத்திருந்த போதிலும், அவனுக்கு குழந்தை உண்டாகும் என்று தேவன் கூறினதைக் குறித்து அவன் எவ்வளவு நிச்சயமுள்ளவனாயிருந்தான் கிழவனான ஆபிரகாமிடம் ஜனங்களுக்கு நன் மதிப்பு இருந்தது. ஒரு நாள் தேவன் அவனிடம், ''ஆபிரகாமே, உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன். உன் பெயரை, ஆபிராம் என்பதிலிருந்து ஆபிரகாம் என்று மாற்றப்போகிறேன். அப்படி அவளையும் இனி மேல் சாராய் என்றழைக்காமல் சாராள், இராஜகுமாரத்தி என்றழைக்கப் போகிறேன். நீங்கள் இருவரும் ஆபிரகாமே, உனக்கு எழுபத்தைந்து வயது, அவளுக்கு அறுபத்தைந்து வயது. அவளுடைய பதினாறாம் பதினேழாம் வயதிலிருந்தே நீ அவளுடைய பதினாறாம், பதினேழாம் வயதிலிருந்தே நீ அவளுடன் வாழ்ந்துவருகிறாய். ஏனெனில், அவள் உனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. இத்தனை ஆண்டுகளாக நீ அவளுடன் வாழ்ந்து வருகிறாய், அவள் சிறுமியாயிருந்தபோதே அவளை விவாகம் செய்து கொண்டாய். இருப்பினும் உங்களுக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை. நான் உங்களுக்கு குழந்தையை கொடுக்கப் போகிறேன். ஆபிரகாமே, என்னை நீ விசுவாசிக்கிறாயா?'' “ஆம், ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்.'' ''அவர்கள் உன்னைப் பைத்தியகாரன் என்று அழைக்கப் போகிறார்கள்.'' ''அவர்கள் என்ன அழைத்தாலும் பரவாயில்லை, ஆண்டவரே.'' ''உங்களுக்குக் குழந்தை பிறக்கப்போகிறதென்று அவர்களிடம் சொல்.'' அவன் சாராளிடம் சென்று அவளைப் பிடித்துக்கொண்டு, “தேனே, என்ன தெரியுமா, உனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது'' என்றான். “என்ன, குழந்தையா?'' ''ஆம்.'' ''உமக்கு எப்படித் தெரியும்?'' “தேவன் கூறினார்.'' 124''ஆமென். அது உண்மை, தேனே. நமக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? எனக்கு கொஞ்சம் பணம் தா. நான் சென்று காலுறைகளுக்காக நூலையும் ஊசியையும் வாங்குகிறேன். இந்த குழந்தைக்காக நாம் ஆயத்தப்படுவோம். ஏனெனில், அது இப்பொழுதே பிறக்கப் போகிறது.'' எனவே, அவள் கடைக்குச் சென்றாள் அவர்கள் மருத்துவரிடம் சென்று, ''மருத்துவரே, உங்களுக்குத் தெரியுமா? மருத்துவமனையை ஆயத்தமாக வையுங்கள். எங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ''ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊம்! உங்கள் பெயர் என்னவென்று கூறினீர்கள்? “ஆபிரகாம்.'' “ஊம்! ஆம்! ஆம், ஐயா. என்னை மன்னியுங்கள். நான் இப்பொழுது அவசரமாகச் செல்கிறேன்.'' மருத்துவர் அங்கு சென்று, “ஏய், நீங்கள் அதிகாரிகளை அவரிடம் அனுப்பி அவர் மூளையை பரிசோதிப்பது நலம். அவருக்கு எழுபத்தைந்து வயது. அந்த ஸ்திரீயும் சிறு கம்பளியை தோளில் போட்டு பாட்டியைப் போல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால், அவளுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். அது தேராகு என்பவனின் குமாரன் அல்லவா? அவன் கோபுரமுள்ள சிநெயார் தேசத்திலிருந்து வந்தவன் அல்லவா? இவன் அவன் குமாரன் தானே?'' என்றார். ''ஆம். ''பாவம், அந்தக் கிழவன் அதிகமாக வெயிலில் சென்றதால் அது மூளையை பாதித்து விட்டது. அவனுக்கு சிறிது பைத்தியம் பிடித்து விட்டது, பாருங்கள். ஆம்.'' ஆனால் அது நிச்சயமற்ற சத்தம். ஆபிரகாமோ நிச்சயமுள்ள சத்தத்தைக் கொண்டிருந்தான். தேவன் அவ்வாறு கூறியிருந்தார்! 125''அதிகாரிகள் அவன் மிகவும் நல்ல கிழவன் என்று கூறுகின்றனர். அவன் விதவைகளுக்கு தர்மம் செய்வதை நான் அநேகமுறை கண்டிருக்கிறேன்... அவளும் மிகவும் தயவுள்ளவள். அவர்களை அடைத்து வைக்க நான் பிரியப்படவில்லை. அவர்களை விலங்கிட்டு மரத்தடியில் வைக்க வேண்டாம். அப்படிப்பட்ட செயல்கள் அவர்களுடைய நிலைமையை மோசமாக்கிவிடும். அவர்கள் மேல் கவனமாயிருப்போம்.'' அவர்கள், அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டே வந்தனர். “ஊ, ஊ? ஊ, ஊ?'' என்ன ஒரு நிச்சயமற்ற சத்தம்! ஆனால், ஆபிரகாமோ அது நிச்சயமுள்ள சத்தம் என்று அறிந்திருந்தான். முதலாம் மாதம் கடந்தது. ''தேனே, உனக்கு எப்படியிருக்கிறது? ஏதாகிலும் வித்தியாசம் உண்டா?'' பெண்களே, இதை ஞாபகம் கொள்ளுங்கள். அந்த இருபத்தெட்டு நாட்கள், அவளுக்கு நாற்பது வயதான போதே அதை கடந்துவிட்டாள். இப்பொழுது அவளுக்கு அறுபத்தைந்து வயது. “தேனே, உனக்கு எப்படியிருக்கிறது?'' ''அன்பே, எந்த வித்தியாசமும் இல்லை'' தேவனுக்கு மகிமை. நாம் எப்படியும் குழந்தையைப் பெறப்போகிறோம். எந்த நிச்சயமின்மையும் இல்லை. ''நிச்சயமாக! நான் உறுதி கொண்டவனாயிருக்கிறேன்! ஆம், ஐயா! நாம் நிச்சயம் பெறப் போகிறோம்.'' ''ஆபிரகாமே, நீ பெற்றுக்கொள்ளப் போகிறாய் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' “தேவன் கூறினார், எப்படியும் பெறப்போகிறோம்.'' இரண்டாம் மாதம், மூன்றாம் மாதம், முதலாம் ஆண்டு. “தேனே, ஏதாகிலும் வித்தியாசம் தெரிகிறதா?'' “இல்லை.'' ”இதுவரை ஒன்றும் நடக்கவில்லையா?'' ''இல்லை, இல்லை.'' ''நல்லது, தேவனுக்கு மகிமை! நாம் எப்படியும் அதைப் பெறப் போகிறோம்.'' 126“ஆபிரகாமே, உனக்கு குழந்தை பிறக்கப் போகிறதென்று நீ சொன்னதாக கேள்விப்பட்டேனே. ஹீ - ஹீ ஹீ - ஹீ அது நிச்சயமற்ற சத்தம், பாருங்கள். ஆனால், ஆபிரகாமோ இந்த சத்தங்கள் எல்லாவற்றையும் விட உரத்த ஒரு சத்தத்தை கேட்டான். “தேவனுக்கு மகிமை! அவர் எவ்வளவு காலம் தாமதித்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் எப்படியும் அதைப் பெறுவேன்.'' ''ஆபிரகாமே, உனக்கு எப்படித் தெரியும்?'' “தேவன் அவ்வாறு கூறினார்.'' ''அவர் இறங்கி வந்து உன்னுடன் பேசினாரா?'' ''ஆம்.'' ''உனக்கு எப்படித் தெரியும்? நானும் அவர் பேசுவதைக் கேட்கட்டும்.'' ''அவர் என்னிடம் பேசினார், உன்னிடமில்லை.'' அவிசுவாசியே, நீ இப்படியே சென்று கொண்டிரு. நீ எப்படியும் விசுவாசிக்கப் போவதில்லை. நான் அவரை விசுவாசிக்கிறேன். நீ உன் வழியிலே போய்க்கொண்டிரு. எங்களுக்கு எப்படியும் குழந்தை பிறக்கப் போகிறது. இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தன. 127ஆனால் அந்த நேரம் வரும்போது, நிறைய பரிகாசமும் சிரிப்பும் இருந்தது. தேவன், ''நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? உன்னை அவர்களிடமிருந்து பிரிக்கப் போகிறேன். உன் துணிகளையெல்லாம் மூட்டை கட்டி ஆயத்தப்படும். அந்த அவிசுவாசிகளின் கூட்டத்திலிருந்து உன்னைப் பிரித்துக்கொள்ள வேண்டும். உனக்கு நான் ஒரு சிறு சபையையும், உன்னை விசுவாசிக்கும் சில நபர்களையும் தரப்போகிறேன். இந்த குளிர்ந்த, சடங்காச்சாரமான ஸ்தாபனங்களை விட்டுவெளியே வந்து, என்னுடன் தனியே நட'' என்றார். அவன் பரிபூரணமாக தன்னை எல்லா அவிசுவாசத்தினின்று பிரித்துக்கொள்ளும் வரைக்கும் தேவன் அவனை ஆசீர்வதிக்கவேயில்லை. நீங்களும் அப்படி செய்யும் வரைக்கும், தேவன் உங்களை ஆசீர்வதிக்க மாட்டார். உங்களுடைய பழைய மூட நம்பிக்கைகளையும், ''ஒருக்கால் இருக்கலாம், ஒருக்கால் இல்லாமல் இருக்கலாம்'' என்பது போன்றவைகளை உதறித்தள்ளுங்கள். இன்று காலை நீங்கள் ஜெபித்துக்கொள்ள வருவீர்களானால், “தேவன் உரைத்துள்ளார். அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது'' என்னும் உண்மையுள்ள விசுவாசத்துடன் வாருங்கள். அதுதான், தேவன் உரைத்துள்ளார். அதுதான் முக்கியம் வாய்ந்தது. அவர் ஒன்றை உரைத்தால், அத்துடன் அது முடிவு பெற்றுவிடுகிறது. அதன் பிறகு நீங்கள் அதைக்குறித்து யோசித்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. சரி. 128இப்பொழுது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு, ஆபிரகாம் மிகவும் வயது சென்றவனானான். அவனுக்கு நூறு வயதாகிவிட்டது. சாராளுக்கு, தொண்ணூறு வயது. அதை சற்று யோசித்துப் பாருங்கள், பாட்டி, ஒரு சிறு கம்பளத் துண்டை தோளின் மேல் போட்டுக்கொண்டு, சிறு தொப்பி ஒன்றை அணிந்திருந்தாள். பாட்டனார், இப்படி. “தேனே, எப்படியிருக்கிறது?'' “ஒரு வித்தியாசமுமில்லை.'' “எப்படியும் நாம் பெறப்போகிறோம். தேவனுக்கு மகிமை!'' ஒரு நாள் அவன் பார்த்தபோது, மூன்று பேர் நடந்து அவனிடம் வந்து, உட்கார்ந்தனர். அவர்களில் இருவர் பிரசங்கம் செய்ய சோதோமுக்குச் சென்றனர். அவர், ''ஆபிரகாமே, உன் மனைவி சாராள் எங்கே?'' என்றார். ஓ, என்னே வ்யூ! அது மறுபடியும் நடக்கும் என்று இயேசு கூறினார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியுமா, அதே தூதன். அவர்கள் தூதர்கள் என்று ஆபிரகாம் அடையாளம் கண்டு கொண்டான், பாருங்கள். அவன் அந்த சத்தத்தை முன்பு கேட்டிருக்கிறான். அந்த மனிதன் பேசுவதை அவன் கேட்டபோது, அதில் ஏதோ ஒன்றிருந்தது. அது அதே சத்தம் என்பதை அவன் கண்டு கொண்டான். பாருங்கள், அது அவரே என்பதை அவன் அறிந்து கொண்டான். 129அவர், ''சாராள்'' என்றார். அவன் மெல்ல உள்ளே நழுவி, “தேனே, வேகமாகப் போய் அடுப்பிலுள்ள சாம்பலைத் தட்டிவிட்டு, கரி வைக்கும் தட்டை உள்ளே நுழைத்து விடு.'' அந்த அடுப்பு உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? ''கொஞ்சம் ஆகாரம் சமைத்துக் கொண்டு வா'' என்றான். கென்டக்கியராகிய உங்கள் எத்தனை பேருக்கு அது நினைவிருக்கிறது? என்னே, உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். என் தாய் அதை எடுத்து, ''பாங், பாங், பாங்'' என்று அடித்து, அதை செய்து, தேய்த்து, ''பாங், பாங்'' என்று அடித்து, ஆகாரம் சமைத்து தருவார்கள். பிறகு பழைய தோல்களை கொதிக்க வைத்து அதில் கிடைக்கும் கொழுப்பை பொறிக்கும் சட்டியில் ஊற்றுவார்கள். கறுப்பு கண் பட்டாணியும், சிகப்பு முள்ளங்கிக் கீரையும் சமைத்து, அது கெட்டியாகும் போது, அதன் மேல் சிறிது காடி ஊற்றினால், அது ருசியாக இருக்கும். எனவே, 130சாராள் இப்படிப்பட்ட ஒரு அடுப்பில் ஆகாரம் சமைப்பதை நான் காண்கிறேன். ஆபிரகாம் வெளியே சென்று, கொழுத்த கன்றைத் தேடிக் கண்டு பிடித்து அதை கொன்று சமையலுக்காக இறைச்சியைக் கொண்டு வந்தான். அவன் மறுபடியும் அங்கு சென்று, ''இந்த மனிதனில் விசேஷமான ஏதோ ஒன்றுண்டு. அந்த சத்தத்தை முன்பு நான் கேட்டிருக்கிறேன். அவருடைய துணிகளின் மேல் தூசு படிந்துள்ளது என்று எனக்குத் தெரியும். அவர் உட்கார்ந்து கொண்டு, முகத்தை தேய்த்துக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சத்தம் எனக்குத் தெரியும். அது நிச்சயமற்ற சத்தம் அல்ல. இதை நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருக்கிறேன். தேனே, இவ்வளவு நாட்களாக அதை நாம் எதிர்பார்த்து வருகிறோம். எனவே நீ... அந்த மனிதனைக் குறித்து விசேஷமான ஏதோ ஒன்றுண்டு! ஏனென்று தெரியவில்லை, ஆனால் அவரில் விசேஷமான ஒன்றுண்டு என்று நம்புகிறேன்'' என்றான்.'' 131சரி, அவன் அங்கு சென்றுஈக்கள் ஓட்டியினால், ஈக்கள் அனைத்தையும் ஓட்டி, அவர்கள் புசிக்கும் போது அவர்களருகில் உட்கார்ந்து கொண்டிருந்தான். சற்று கழிந்து அவர்களில் இருவர் சோதோம் இருந்த திசையை நோக்கிக் கொண்டிருந்து அங்கு சென்று விட்டார்கள். ஒரு நவீன போதகர் அங்கு சென்று அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். ஆபிரகாம் இந்த மனிதனுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவருடைய முதுகு கூடாரப்பக்கம் திரும்பியிருந்தது. அவர், ''ஆபிரகாமே, உன் மனைவி சாராள் எங்கே?,'' என்றார். ''உமக்குப் பின்புறமாய் கூடாரத்தில் இருக்கிறாள்,'' என்றான். அவர், ''ஒரு உற்பவ காலதிட்டத்தில், நான் வாக்களித்தபடி உன்னிடத்தில் திரும்ப வருவேன்,'' என்றார். அந்த சத்தம், நிச்சயமானது என்பதை அவன் அப்பொழுது அறிந்து கொண்டான். என்ன நடந்தது? தூதன் சென்றவுடனே, சாராள் அழகான வாலிப ஸ்திரீயாக மாறினாள். அவர் ஆபிரகாமின் சந்ததியிலுள்ள ஒவ்வொருவருக்கும் என்ன செய்யப் போகிறார் என்பதை அதன் மூலம் காண்பித்தார். தள்ளாத கிழவி வாலிபப் பெண்ணாக மாறினாள். ஆபிரகாமின் முதுகிலிருந்த கூன் மறைந்தது, அவனுடைய வெள்ளைத்தாடி கறுப்பாக மாறினது. அவன் வாலிபனாக மாறினான். 132அவர்கள் முந்நூறு மைல் தூரமுள்ள கேராருக்கு சிறு பயணம் செய்தனர். அவர்கள் அங்கு சென்றபோது, பெலிஸ்தியரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஒரு மனைவியைத் தேடிக் கொண்டிருந்தான். அவன் அழகான பெலிஸ்திய பெண்களை எல்லாம் கண்டு விட்டு, “அவர்களில் ஒருவரையும் என்னால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை, என்னமோ தெரியவில்லை'' என்றான். ஒரு நாள் அவன் நூறு வயதான இந்த சாராள் பாட்டி வருவதைக் கண்டான். அவன், ''நான் காத்திருந்தவள் இவளே! இதோ அவள். இவள் தான்'' என்றான். எனவே அவன் அவளைக் கொண்டு வந்து மணம் புரிந்து கொள்ளப் பார்த்தான். தேவன் அவனுக்கு சொப்பனத்தில் தோன்றி, ''நீ செத்தாய், அவள் என் தீர்க்கதரிசியின் மனைவி,'' என்றார். அபிமெலேக்கு, ''ஆண்டவரே, என் உத்தம இருதயத்தை அறிவீர்,'' என்றான். அதில் எந்த நிச்சயமின்மையும் இல்லை. உத்தம இருதயம்; அவளைக் கொண்டுபோய் விட்டுவிடு, இல்லையென்றால், நீ என்னிடம் செய்யும் எந்த ஜெபத்தையும் நான் கேட்க மாட்டேன். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவளைக் கொண்டு போய் அவனிடம் விட்டுவிடு. அவனுக்கு கொஞ்சம் பணம் தேவை. ஆகையால் தான் இதெல்லாம் சம்பவித்தது. அவனுடைய மனைவியைக் கொண்டு போய் அவனிடம் விட்டுவிடு. அப்படி செய்யாமல் போனால், நீ சாகவே சாவாய்.'' அதைக் குறித்து எந்த நிச்சயம்மின்மையும் இல்லை. ஏனெனில், தேவன் எல்லோருடைய கர்ப்பங்களையும் அடைத்தார். அது முற்றிலும் உண்மை. அபிமெலேக்கு, “ஆபிரகாமே, நீ ஏன் இப்படி செய்தாய்?'' என்று கேட்டான். ஆபிரகாம், ''அவன் என் சகோதரி என்று நான் உம்மிடம் கூறினது உண்மை தான். ஆனால், அவள் என் மனைவியானாள்,'' என்றான். அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். 133அவன் யார்? இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு, அவர்கள் வாலிபமாக மாறி அவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு, தேவன் ஒரு நாள், ''அவனை மலைக்கு கொண்டு சென்று அவன் தொண்டையை அறுத்து விடு'' என்றார். ஓ, என்னே. ஆதியாகமம்; 22ம் அதிகாரம். அவன் பையனை மலையின் மேல் கொண்டு செல்கிறான். ஈசாக்கு அப்பொழுது சிறு குழந்தை அல்ல. அவனுக்கு அப்பொழுது ஏறக்குறைய பதினான்கு வயது. அவன் தன் சுருட்டை மயிரை இப்படிபின்னால் விட்டிருந்தான். அந்த வயோதிப தகப்பன் நடுங்கின கைகளில் கத்தியை எடுத்தான்; அவனுக்குத் தொண்டை அடைத்தது என்பதில் சந்தேகமில்லை, அவன் கடினமாக விழுங்கினான். ''என் ஒரே மகன். இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். வேறு பையன் எனக்குப் பிறக்கவில்லை. அவனைப் பாருங்கள் அவனைப் பாருங்கள்! இதோ அவன், என் ஒரே மகன், பாவம் ஏழை பையன், தேவனே, அதை செய்ய நீரே கட்டளையிட்டீர். உமது வார்த்தையை விசுவாசிக்க நான் அறிந்திருக்கிறேன். நீர் எப்படி அதை செய்வீர் என்று எனக்குத் தெரியாது. ஆண்டவரே, நீரே அவனை மரித்தோரிலிருந்து ஒருவனாக எனக்குத் தந்தீர்,'' என்றான். நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், அது எபிரெயர்; 11: 17-19. அந்த பாகத்துக்கு நாம் வேதாகமத்தை திருப்பி அதை படிப்போம். இன்னும் ஒரு நிமிடத்தில் முடிக்கப் போகிறோம். 11:17, சரி. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்ட போது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து மெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரே பேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனைப் பாவனையாகத் திரும்பவும் பெற்றுக் கொண்டான். எபி; 11:17-19. 134ஆபிரகாம், ''ஆண்டவரே, நீர்... முன்பு எனக்குப் பிள்ளை இல்லாதிருந்தது. எனக்கு ஒன்றுமேயில்லை. நான் பாவியாயிருந்தேன். என்னை ஆளாக்கினீர். எனக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அருளினீர். இதோ அவன், இந்த பையனை எனக்குத் தந்தீர். அவன் பிறப்பதற்கு நான் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருந்தேன். இப்பொழுது பதினான்கு ஆண்டுகள் கழித்து அவன் வாலிபப் பருவத்தை அடைந்து விட்டான். அவனுடைய தாய் அவனைக் குறித்து பெருமை கொள்கிறாள். அவனை நான் தாய்க்குத் தெரியாமல் வீட்டிலிருந்து மெல்ல கொண்டு வந்து விட்டேன்... தாய்க்கு இது புரியாது. ஆனால் கர்த்தாவே, உம்மை நான் புரிந்து வைத்திருக்கிறேன். உமது சத்தம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன். அவனை பலியாக செலுத்த எனக்குக் கட்டளையிட்டீர். அவன் மூலம் நான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவேன் என்று நீர் உரைத்திருக்கிறீர். அன்று நீர் அந்த வாக்குத்தத்தத்தை அளித்து, இறைச்சியை துண்டு துண்டாக வெட்டின போது, அந்த சிறு வெள்ளை ஒளி அவைகளின் நடுவே சென்றது. இந்த பிள்ளையின் மூலம் உமது சொந்த குமாரனை நீர் எழுப்பப் போவதாக எனக்கு வாக்களித்தீர். ஆமென். என் குமாரனின் மூலம் உமது குமாரனை தோன்றப் பண்ணப் போவதாகவும், அவர் சகல ஜாதிகளையும் இரட்சிப்பார் என்றும் நீர் வாக்களித்தீர். ஆண்டவரே, நீர் எப்படி செய்வீரோ, எனக்குத் தெரியாது. அது என் வேலை அல்ல. ஆனால் அதன் நிச்சயத்தன்மையை நான் அறிந்திருக்கிறேன். உமது வாக்குத்தத்தம் நிச்சயமுள்ளது என்று விசுவாசிக்க நான் ஏவப்படும்கிறேன். அவனை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்ப வல்லவராயிருக்கிறீர் என்று முழு நிச்சயமாக நம்புகிறேன். விசுவாசத்தின் மூலம் அவனை மறுபடியும் நீர் எழுப்புவீர். கர்த்தாவே, உமது வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றான். 135அவன் கத்தியை உருவி, “ஈசாக்கே, சென்று வா,'' என்று கூறி அவனை முத்தம் செய்து விடைபெற்று, கத்தியை ஓங்கினான். தேவன், ''ஆபிரகாமே, ஒருநிமிடம் பொறு , ஒரு நிமிடம் பொறு. என்னை விசுவாசிக்கிறாய் என்று அறிந்திருக்கிறேன். என்னை நேசிக்கிறாய் என்று அறிந்திருக்கிறேன். உன் கையைப்போடாதே,'' என்றார். அதே நேரத்தில், அவனுக்குப் பின்னால் ஒரு சத்தத்தை அவன் கேட்டான். அவன் பார்த்த போது, ஒரு ஆட்டுக்கடா புதரில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்த ஆட்டுக்கடா எங்கிருந்து வந்தது? ஆபிரகாம் நாகரீகத்துக்கு நூறு மைல்கள் அப்பால் வனாந்தரத்தில் இருந்தான். அங்கு ஆடுகளைக் கொல்லும் சிங்கங்கள், புலிகள், நரிகள் போன்றவை இருந்தன. அவன் மலையின் உச்சியில் இருந்தான். அங்கு ஆடுகள் உயிர் வாழ தண்ணீர் அல்லது வேறெதுவும் இல்லை. ஒரு நிமிடத்துக்கு முன்பு அது அங்கிருக்கவில்லை. ஆனால் ஆபிரகாம் திரும்பிப் பார்த்தபோது, அடுத்த நிமிடம் அது அங்கிருந்தது. அவர் யேகோவாயீரே. தேவனால் கூடும்! ஆபிரகாம் மேலே நோக்கி, ''நீர் யேகோவாயீரே,'' என்றான். யேகோவாயீரே என்றால் என்ன? ''நீர் உரைக்கும் எதையும் உம்மால் கொடுக்க முடியும். இது உண்டாகக்கடவது என்று நீர் கூறினால், அது உண்டாகும். உம்மால் அதை சிருஷ்டிக்க முடிகிறது.'' 136அவன் என்ன செய்தான்? ''வானத்தில் அவர் எப்படி தண்ணீரை கொண்டு செல்ல முடியும்? என்று நோவா கேட்டது போன்ற ஒரு சத்தத்தை அவன் கேட்டிருப்பான்.'' ''எனக்குத் தெரியாது. அவர் யேகோவாயீரே, அவரால் தண்ணீரை அங்கு, அளிக்க முடியும்.'' அவர் ஒரு மனிதனை இந்த பூமியிலிருந்து மகிமைக்கு எப்படி எடுத்துச் செல்ல போகிறார். என்னால் அதை செல்ல முடியாது. நாம் மிக கனமாய் இருக்கிறோம். ''என்னுடைய எடை 68 கிலோ, என்னுடைய எடை 90 கிலோ,'' என்று கூறாலாம். உன்னுடைய எடை என்னவாக இருந்தாலும், எனக்கு கவலை இல்லை. அவர் யெகோவாயீரே. அந்த வாகனம் எப்படி வரும்? அதை என்னால் செல்ல முடியாது. ஆனால், அவர் அதை கொண்டு வருவார். அது அங்கிருந்துதான் வருகிறது. 137இந்த காலைப்பொழுதில் இங்கு அமர்ந்துருக்கும் என்னுடைய கருப்பின நண்பர்கள் நிமித்தமாக இதை சொல்லுகிறேன். தெற்கு பகுதியில் ஒரு வயதான கருப்பின மனிதன் எங்கு சென்றாலும் தன்னுடைய வேதாகமத்தை அவரோடு கொண்டு செல்வார். அவர் இருதயம் உணரதக்க மதம் அவரிடத்தில் இருக்கிறது என்று சொன்னதால் அவருடைய முதலாளி அவரை கேலி செய்வதுன்டு. ''இருதயம் உணரதக்க மதம் என்பதை போல் ஒரு காரியம் கிடையாது'' என்றார். அதற்கு அவர், ''முதலாளி, ஒரு காரியம் உங்களிடத்தில் குறைவாக இருக்கிறது. உங்களுக்கு தெரிந்த அளவுக்கு இருதயம் உணரதக்க மதம் என்பது இல்லை அது சரிதான'' என்றார். பாருங்கள்? ஆனால், அதனுடைய வித்தியாசத்தை அறிந்துருக்கிறார். ''அந்த வேதாகமத்தைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்? உன்னால் படிக்க முடியாதே'' என்று கேட்டார். அவனோ, ''அதை நான் முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரைக்கும் விசுவாசிக்கிறேன். நான் அட்டையையும் விசுவாசிக்கிறேன். ஏனெனில், அதன் மேல் பரிசுத்த வேதாகமம் என்று எழுதப்பட்டுள்ளது'' என்றான். அவர், ''அதிலுள்ள வரலாறுகள் அனைத்தையும் விசுவாசிக்கிறாய் என்று நினைக்கிறேன்“ என்றார். அவன், ''ஆம், ஐயா.'' தேவன் உரைத்த எல்லாவற்றையும் நான் விசுவாசிக்கிறேன். தேவன் என்னிடம் கூறும் அனைத்தையும் நான் விசுவாசிக்கிறேன்'' என்றான். அவர், ''இப்பொழுது கேள், சம்போ. நீ அப்படி செய்யக் கூடாது. தேவன் இந்தக் கல்மதில் வழியாய் உன்னைக் குதிக்கச் சொன்னால், நீ குதித்துவிடுவாயா என்ன?'' என்று கேட்டார். அவன், ''ஆம், ஐயா. நான் கல்மதிலின் வழியாக குதிப்பேன்'' என்றான். அவர், ''நீ எப்படி கல்மதிலின் வழியாக குதிப்பாய்? அதில் ஓட்டை இல்லையே'' என்றார். அவன், “தேவன் என்னை குதிக்கச் சொன்னால், நான் அங்கு செல்லும் போது, அவர் ஒரு ஓட்டையை அதில் வைத்திருப்பார்,'' என்றான். அது முற்றிலும் உண்மை. தேவன் தம்முடைய வார்த்தையைக் காப்பார். அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை, தேவனுடைய சுவிசேஷ எக்காளம் உங்கள் செவிகளில் தொனிக்கும் போது, அது நிச்சயமுள்ளது. ஆமென். அதில் முற்றிலும் நிலைத்திருங்கள். ஓ, அது நிச்சயமுள்ளது! 138இந்த ஜனங்கள் எல்லாம் ஏன்... நமக்கு நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரே ஒரு விளக்கம், அல்லது இங்கு எழுதி வைத்துள்ள இரண்டு வேத வாக்கியங்களை மாத்திரம் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். இந்த ஜனங்கள் எல்லாம் இதைச் செய்தனர்? ஏனெனில் அவர்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டனர். இப்பொழுது வேகமாக முடிப்போம், இன்னும் இரண்டு மூன்று நிமிடங்களில். 139இயேசு இவ்வுலகில் இருந்த போது, ''என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு,'' என்றார். அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை. ''எனக்கு உண்டு'' “எனக்கு இனிமேல் இருக்கும்'' என்றல்ல. ஆனால், ”எனக்கு இப்பொழுதே உண்டு.'' என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும், எனக்கு அதிகாரம் உண்டு. ''சரி. மார்த்தாள், தன் சகோதரனாகிய லாசருவை இழந்த பிறகு, ''நான் அவனை எழுப்பப் போகிறேன்,'' என்று அவர் கூறுவதைக் கேட்டாள். அவர், ''அவனை எங்கே வைத்தீர்கள்?'' என்றார். இப்பொழுது அவர் அவள் அவருக்கு ஆள் அனுப்பி, ''இயேசுவே, நீர் வந்து என் சகோதரனை சுகப்படுத்தும். அவன் வியாதியாயிருக்கிறான் என்றாள். ஆனால் இயேசுவோ எந்த கவனமும் செலுத்தாமல் அப்படியே போய்க் கொண்டிருந்தார். மறுபடியும் அவளும் மரியாளும் அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். அவரோ எவ்வித கவனமும் செலுத்தவில்லை. 140சிறிது கழிந்து லாசரு மரித்துப் போனான். அவர்கள் அவனைக் கல்லறையில் வைத்தார்கள். நான்கு நாட்கள் ஆகிவிட்டப்படியால், அவன் நாற்றமெடுத்தான். அவனுடைய மூக்கு அரிக்கப்பட்டுப் போனது, அவனுடைய உடலில் புழுக்கள். அவன் துணியினால் சுற்றப்பட்டிருந்தான். அந்த கல்லறையின் மேல் ஒரு கல்லை வைத்தனர். கிழக்கு தேசத்தில் அவர்கள் ஒரு குழியுண்டாக்கி அதில் மரித்தவர்களை அடக்கம் பண்ணி, அதன் மேல் ஒரு கல்லைப் புரட்டி வைக்கின்றனர். அதுதான் அவர்கள் கல்லறை. முதலாவதாக என்ன தெரியுமா, இயேசு வந்தார். இந்த அழகான பெண் மார்த்தாள் தன் தோளின் மேல் ஒரு துணியைப் போட்டுக் கொண்டு தெருவின் வழியாக ஓடிச்சென்று, ''ஆண்டவரே!'' என்றாள். அவள் அவரை அணுகின விதத்தைப் பாருங்கள். அவள் ஒரு நாள் ஒரு சத்தத்தைக் கேட்டாள், அது நிச்சயமான சத்தம். அவர் விசேஷமான ஒருவர் என்பதை அவள் அறிந்து கொண்டாள். அவள் சொன்னாள்.... 141அவள், “நீர் ஸ்தாபனங்களுக்கு விரோதமாக பிரசங்கித்ததனால் தான் நாங்கள் அதை விட்டு வெளியே வந்தோம். நீர் இன்னின்னதை செய்ததால் தான் நாங்கள் இதை செய்தோம். உம்மிடத்தில் நாங்கள் விசுவாசம் வைத்திருந்தோம். ஆனால் இப்பொழுது நாங்கள் பட்டினத்திலுள்ளவர்கள் ஏளனமாக பேசும் நிலைக்கு வந்து விட்டோம். எல்லோரும், ''உங்கள் உருளும் பரிசுத்தர், போதகர் எங்கே'' ஏதாவதொன்று தேவைபடும் போது, அவர் எங்கு போய்விட்டார்? அவர் ஓடிவிட்டார், பாருங்கள். அவர் எங்கே? தெய்வீக சுகமளிப்பவர்கள் எங்கே? என்று கேட்கின்றனர் என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும்? சகோ. ரைட், ஞாபகமிருக்கிறதா? உங்கள் கிறிஸ்து சபை போதகர்களும் மற்றவர்களும் உங்களை அப்படித்தான் கூறினார்கள். ஆம். ஐயா. ''அவர்கள் எங்கே? இதெல்லாம் என்ன? இதைக் குறித்து இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்?'' பாருங்கள்? 142சிறிது கழிந்து, ''நான் கூப்பிட்ட போது நீர் ஏன் வரவில்லை?'' என்று அவரைக் கடிந்து கொள்ள அவளுக்கு உரிமை இருந்தது போல் தோன்றினது, ஆனால், பாருங்கள், தேவனை அந்த வழியில் அணுகக் கூடாது. கேள்வி கேட்காதீர்கள், அந்த சத்தம் நிச்சயமுள்ளது என்பதை அறியுங்கள். நீங்கள் அவரிடம் நடந்து சென்று, ''ஆம், ஆண்டவரே“ என்று கூறுங்கள். ''ஆண்டவரே, அவர்கள் என் மேல் கைகளை வைத்த பிறகு, நான் சுகமடைவேன் என்று எப்படி அறிவேன்?'' அது உன் வேலையல்ல, பாருங்கள். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, தேவன் அப்படி உரைத்தார் என்னும் அந்த நிச்சயமுள்ள சத்தத்தை அறிந்து, முன் செல்வதே. தேவன் அப்படி உரைத்தார், பாருங்கள். ஆம், ஐயா, அது தேவனுடைய வார்த்தை. 143முதலாவதாக என்ன தெரியுமா, மார்த்தாள் ஓடி வந்து, ''ஆண்டவரே!'' என்கிறாள். ஓ, அது எனக்குப் பிரியம். பாருங்கள், அவர் என்னவாயிருந்தாரோ, அந்த பட்டத்தை அவள் அளிக்கிறாள். அவர் அவளுடைய ஆண்டவர். ''நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரிக்கமாட்டான். பாருங்கள்? “இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்.'' அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை. பாருங்கள்? பாருங்கள்? அப்பொழுது தான் இரண்டு பாஸிடிவ்கள் ஒன்றையொன்று சந்திக்கின்றன. அப்பொழுது தான் இரண்டு சர்வ வல்லமைகள் சந்திக்கின்றன. அவளுக்கு கிறிஸ்துவின் மேல் பரிபூரண சர்வவல்லமையுள்ள விசுவாசம் இருந்தது; கிறிஸ்து சர்வ வல்லமை உள்ளவர், பாருங்கள். அவளுக்கு கிறிஸ்துவின் மேல் பரிபூரண, முடிவற்ற விசுவாசம் இருந்தது - அவர் ஆண்டவர் என்று அவர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ, அதைத் தேவன் அவருக்குத் தந்தருளுவார் என்று அவள் அறிந்திருந்தாள். வேறு விதமாகக் கூறினால் அவள், ''நீர் வார்த்தையைப் பேசும், அவ்வளவுதான் நீர் செய்ய வேண்டியது. நீர் தேவனிடத்தில் எதைக் கேட்டாலும், தேவன் அதை உமக்குத் தந்தருளுவார்'' என்றாள். அதுதான் சர்வவல்லமை. ஏனெனில், அவர் கூறினால்.''பாருங்கள்? சரி, அவர் சர்வ வல்லமையுள்ளவர். அப்பொழுது இரண்டு சர்வ வல்லமைகள் ஒன்றாக சந்திக்கின்றன. அப்பொழுது தொடுதல் ஏற்படுகிறது. 144இங்கு ஒரு மின்சாரக் கம்பியில் நூற்றைம்பது வோல்டு மின்சார சக்தி பாய்ந்து, இந்த கம்பியில் நூற்றைம்பது வோல்டு மின்சார சக்தி பாய்ந்து, இவ்விரண்டு கம்பிகளும் ஒன்றாக சேருமானால், இரண்டு பக்கங்களிலும் உங்களுக்கு நூற்றைம்பது வோல்டு மின்சாரம் கிடைக்கிறது. பாருங்கள். அதுபோன்று உங்களுக்கு உன்னத வல்லமை உண்டு. இயேசு, ''வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று கூறியுள்ளது உண்மையென்று உங்களுக்கு உன்னத விசுவாம் இருக்குமானால், அந்த உன்னத வாக்குத்தத்தம் அளித்த உன்னத தேவன் உங்களுக்குத் தேவை. அப்பொழுது உன்னத பலன்கள் உண்டாகும். ஆமென். அது தான். பாருங்கள்? 145இப்பொழுது மார்த்தாளைக் கவனியுங்கள். அவள், ''ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்,'' என்றாள். அவர், ''உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அவள், ''உண்மை தான், ஆண்டவரே, அவன் கடைசி நாளிலே உயிர்த்தெழுந்திருப்பான்'' என்றாள். ஏன்? அவள் அந்த வார்த்தையைக் கேட்டிருந்தாள். அது நிச்சயமான சத்தம் என்பதை அவள் அறிந்திருந்தாள். ''நிச்சயமாக, ஆண்டவரே, அவன் கடைசி நாளில் உயிர்த்தெழுந்திருப்பான். அவன் நல்ல பையன். அவன் கடைசிநாளில் பொதுவான உயிர்த்தெழுதலில் உயிர்த்தெழுந்திருப்பான்,'' என்றாள். இயேசு, “நான் இருக்கிறேன்'' என்றார். அதைக் குறித்த எந்த நிச்சயமின்மையும் இல்லை. ''நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்'' என்றார். வ்யூ! ''நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,'' என்றார். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், என்றார். அதைக்குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை. இதை விசுவாசிக்கிறாயா?'' 146அவள், “ஆம், ஆண்டவரே, நீர் யாரென்று கூறினீரோ, அதுவே நீர் என்று பரிபூரணமாக விசுவாசிக்கிறேன். எங்களை இரட்சிக்க, நீர் உலகத்தில் வருகிறவராக தேவ குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் கூறுவது அல்லது சொல்வது எதுவோ, அது பரிபூரணமானது என்று நான் விசுவாசிக்கிறேன். அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை,'' என்றாள். ''அவனை எங்கே வைத்தீர்கள்? நான் போய் அவனை எழுப்பப் போகிறேன்.'' அவர், ''நான் போய், அவனை எழுப்ப முடியுமா என்று பார்க்கிறேன், நான் போய் முயற்சி செய்கிறேன், நான் போய் என்ன செய்ய முடியுமென்று பார்க்கிறேன்'' என்று கூறவில்லை. இல்லை. எந்த நிச்சயமின்மையும் இல்லை. “நான் போய் அவனை எழுப்பப் போகிறேன்.'' ஏன்? பிதா அவரிடம் கூறியிருந்தார். அவரிடம் உண்மையான தேவனுடைய வாக்குத்தத்தம் இருந்தது? அவர் தேவனுடைய வாக்குத்தத்தத்தை பெற்றிருந்தார். யோவான்; 5:19ல் அவர், ''பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்'' என்று கூறினார். தேவன் என்ன செய்யப்போகிறார் என்பதை அவர் ஏற்கனவே தரிசனம் கண்டுவிடுவதனால், அவர் அதை உறுதியாய் அறிந்திருந்தார். எந்த நிச்சயமின்மையும்... ''நான் போய் முயற்சி செய்யமாட்டேன், நான் செய்யப் போகிறேன்.'' ஆமென். ஆமென், ஆமென். ஓ, ஒவ்வொருவருடைய இருதயத்திலும் அதை என்னால் அழகாக பதிய வைக்க முடியுமானால் நலமாயிருக்கும். பாருங்கள், ''நான் முயற்சி செய்வேன், என்னால் முடியுமா என்று பார்க்கிறேன்,'' என்றல்ல. ''நான் நிச்சயம் செய்வேன். நான் போய் அவனை எழுப்பப் போகிறேன். நான் போய் முயற்சி செய்ய மாட்டேன், நான் போய் அதை நிச்சயம் செய்வேன். நான் போய் அவனை எழுப்பப் போகிறேன். அவர் அதை செய்தார்.'' ஓ, என்னே! எந்த நிச்சயமின்மையும் இல்லை. இல்லவே இல்லை. ''நான் முயற்சி செய்ய மாட்டேன். என்னிடம் வாக்குத்தத்தம் உள்ளது.'' 147அவர் உலகத்தை விட்டுச் சென்ற போது, நம்மை விட்டுப் பிரிந்து செல்லவில்லை. அவர், ''உங்களிடம் நான் கூறுவது என்னவெனில், நீங்கள் உலகமெங்கும் போய் பெரிய ஸ்தாபனங்களை நிறுவுங்கள். ஓ, நீங்கள் ஆயிரக்கணக்கான அங்கத்தினர்களைப் பெறுவீர்கள். அவர்கள் சரியாயிருப்பார்கள்'' என்று கூறவில்லை. அது நிச்சயமற்றதாக இருக்கும், அதைத் தான் மனிதன் செய்து விட்டான். நாம் வஞ்சிக்கப்படக் கூடாது என்பதற்காக, அவர் உலகத்தை விட்டுப் போகும் போது, இதைத் தான் கூறிச் சென்றார். இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது. அவர்கள் அவ்விசுவாசிகள், அவர்கள் அவ்விசுவாசம் கொண்டு நின்று விட்டனர். அவர்கள் என்னைக் காணமாட்டார்கள். நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் உங்களுடன் வாசம் பண்ணி உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுக்குள்ளே இருப்பேன்.'' 148யோவான்; 14:12ல் அவர், ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்'' என்றார். அதிக கிரியைகளை நீங்கள் கிரேக்க சொல்லைப் பார்ப்பீர்களானால், அது, ''அதிக கிரியைகளை செய்வீர்கள்'' என்றுள்ளது. ஏன்? அப்பொழுது தேவன் ஒரு மனிதனுக்குள் வாசம் செய்து தம்முடைய கிரியைகளை நடப்பித்தார். இப்பொழுது அவர் முழு சபையிலும் இருக்கிறார். பாருங்கள், அப்பொழுது தேவன் ஒரு மனிதனுக்குள் இருந்தார். இப்பொழுது அவரை விசுவாசிக்கிற அனைவருக்குள்ளும். “நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளைச் செய்வீர்கள். இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் வழி நடத்தின அந்த ஒளிக்கு செல்கிறேன். கொஞ்சம் காலத்திற்கு பிறகு நான் மறுபடியும் வருவேன்.'' பாருங்கள். யோவான்; 14:12, ”நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளையும் செய்வான்.'' 149அவர் இவ்வுலகத்தை விட்டு செல்லும் போது, மாற்கு; 16ல், ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன என்றார். ''அவர் ஒருக்கால் நடக்கும்'' என்றா சொன்னார்? இல்லை. அடையாளங்களாவன. அவை நிச்சயமானவை. ''அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால் அது வேறொரு காலத்துக்குறியது,'' என்று ஸ்தாபனங்கள் கூறுகின்றன. அது நிச்சயமற்றது. ஆனால் இயேசுவோ, ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் உறுதியாக தொடரும்,'' என்றார். அவர்கள் என்ன செய்வார்கள்? ''பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். ''ஓ, சகோதரனே!'' ''ஒருக்கால் அவர்கள் இவைகளைச் செய்வார்கள் என்றோ, அல்லது, “இவர்கள் இதை மாற்றி ஸ்தாபனம் அமைத்துக்கொள்ள வழியுண்டு,'' என்றோ அல்ல. இல்லவே இல்லை. ''இந்த அடையாளங்களை....'' அவர்கள் விசுவாசிக்காவிட்டாலும், அவர்கள் விசுவாசிகளாயிருப்பார்கள்,'' என்றல்ல. ஓ, இல்லை. இல்லை, இல்லை. “இந்த அடையாளங்கள் அவர்களை நிச்சயமாகத் தொடரும்.'' அவர் இன்றும் அதே தேவனாயிருக்கிறார். அவர் மரித்த நிலையில் இல்லை. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவ கோட்பாடு கூறி, அதே சமயத்தில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை எப்படி மறுதலிக்க முடியும்? 150மத்தேயு; 17ல், நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், மத்தேயு; 17:2. அது மறுரூப மலையில் நடந்த சம்பவத்தைக் குறித்தது. உங்களிடம் கிரேக்க வேதாகமம் இருக்குமானால், அது, ''அவர் மறுரூபமானார்'' என்றுள்ளது. அப்படித்தான் நினைக்கிறேன். அதை சரியாக கூறினேனா என்றுநான் பார்க்கட்டும். மத்தேயு; 17. அவை எல்லாவற்றையும் இங்கு எழுதி வைத்திருக்கிறேன். ஆறு நாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும் படி உயர்ந்த மலையின் மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்... மத். 17: 1-2. அவர் செய்தது என்னவென்று கிரேக்க மொழி கூறுகிறது. அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார் (transfigured). “அவர் தம்முடைய தோற்றத்தை (fashion) மாற்றிக் கொண்டார்.'' 151ஓ, நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? (சகோ. நெவில் முழு நாளும்'' என்கிறார். சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். இதை உங்களிடம் கூற வேண்டும். ஏதோ ஒன்று எனக்குபட்டது. அதை நான் கூறியே ஆக வேண்டும்? என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இரவு உணவு, பீன்ஸ் கரிந்து போகாது, அதை அப்படியே விட்டு விடுங்கள். சரி, அவர் இன்றும் அப்படியே இருக்கிறார். அவர் மாறவேயில்லை. “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்,'' என்று எபிரேயர்; 13:12 மற்றும் 13 உரைக்கிறது. இப்பொழுது கவனியுங்கள். அவர் உயிர்த்தெழுந்தார். அவர் மரித்த நிலையில் கல்லறையில் இல்லை, அவர் உயிரோடிருக்கிறார், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நாம் விசுவாசிப்போமானால்; அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், இல்லையா? (சபையோர் ஆமென் என்கின்றனர் - ஆசி.) 152அவர் மறுரூபமடைந்த போது என்ன செய்தார்? கிரேக்க வேதாகமம், “அவர் தம்முடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டார்'' என்றுரைக்கிறது. ஓ, பாருங்கள், உயிர்த்தெழுதலின் வரிசைக் கிரமத்தைப் பாருங்கள். அதுதான் என் மனதில் பட்டது. கவனியுங்கள். முதலில் தோன்றினது என்ன? அதற்கு முந்தின அதிகாரத்தில், 16ம் அதிகாரத்தில், அவர் அவர்களிடம், ''இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் வல்லமையாய் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை'' என்றார். வேறுவிதமாகக் கூறினால், அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை முன்கூட்டியே ருசி பார்த்து, உயிர்த்தெழுதலின் வரிசைக் கிரமத்தையும் தேவனுடைய வருகையையும் குறித்து அறிந்து கொள்வார்கள். 16ம் அதிகாரத்தில் பாருங்கள். அவர் மலையின் மேல் செல்கிறார். என்ன நடந்தது? அவருடைய தோற்றம் மாறினது. வேறு விதமாகக் கூறினால், அவர் வேறு விதத்தில் வெளிப்படுத்தப்பட்டார். நான் கூறுவது புரிகிறதா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி.) 153வெளிப்படுத்தல் என்பதற்கு என்ன அர்த்தம் என்று அன்றொரு இரவு நாம் கண்டோம்? அபோகாலிப்ஸ் என்னும் கிரேக்க சொல்லுக்கு அர்த்தம் என்ன? ஒரு சிற்பி ஒரு சிலையை இங்கு செய்கிறான். அதன் பிறகு அவன் என்ன செய்கிறான்? அதை மறைந்துள்ள திரையை நீக்கி, ''இதோ அந்த சிலை'' என்கிறான். அவர் இங்கு என்ன மறுபடியும் செய்து கொண்டிருந்தார்? அவர் தம்மை வேறொரு தோற்றத்தில் வெளிப்படுத்தினார். அவர் எந்த நிலையில் இருந்தார்? மகிமைப்பட்ட, மறுரூபப்பட்ட நிலையில். அவர் எப்படி வரப் போகிறாரோ அப்படி; மறுரூபமடைந்த மகிமைப்பட்ட கிறிஸ்து. அவருடைய வஸ்திரம் சூரியனைப் போல் பிரகாசித்தது. என்னே! ஓ, அவர் மேகத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் மகிமையின் மேகங்களுடன் வரப்போகிறார். அவர் மேகத்தினால் நிழலிடப்பட்டார். அது ஒரு சிறு மேகம் அல்ல, அவர் வரப்போகும் மேகம், மகிமையின் மேகம். அவருடைய தூதர்கள் எல்லாரும் அவரோடே இருப்பார்கள். அல்லேலூயா! என்னே, அப்படித்தான் அவர் வருகிறார், மகிமையின் மேகத்தில் அவர் வருகிறார். 154இப்பொழுது கவனியுங்கள், அவர் நின்று கொண்டிருக்கிறதை அவர்கள் கண்டனர். அப்பொழுது மோசேயும், எலியாவும் அங்கு காணப்பட்டனர். அதை கவனியுங்கள். மோசே யாருக்கு அடையாளம்? மரித்து கல்லறையில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மோசே அடையாளமாயிருக்கிறான். ஏனெனில் மோசே மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். அவன் அடக்கம் பண்ணப்பட்ட இடம் யாருக்குமே தெரியாது. நித்திரையடைந்துள்ளவர்களுக்கு அவன் அடையாளமாயிருக்கிறான் - அவர் வரும் போது அவருக்குள் நித்திரையடைந்தவர்களுக்கு. மரிக்க அவசியமில்லாமல் மறுரூபமாகிறவர்களுக்கு எலியா அடையாளமாயிருக்கிறான். பாருங்கள்? பேதுருவும், யாக்கோபுவும், யோவானும், இதோ “எங்கள் தேவன், இவருக்காக காத்திருந்தோம்,'' என்று கூறும் இஸ்ரவேலில் மீதியானவர்களுக்கு அடையாளமாயுள்ளனர். அதோ உங்கள் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். (சகோ. உட், எங்கிருக்கிறீர்கள்? அதுதான்). பார்த்தீர்களா? பேதுரு, யாக்கோபு, யோவான் மூன்று பேர். அவர் மறுபடியும் வரும்போது அவருக்கு சாட்சிகளாயிருப்பவர்கள். 155முதலாவது நடப்பது என்ன? உயிர்த்தெழுதல், மோசே மற்றும் (இடைச்சொல்) எலியா அவருக்குக் காணப்பட்டார்கள். பாருங்கள். மரித்தோரின் உயிர்த்தெழுதல், மரிக்க அவசியமில்லாமல் மறுரூபமாகிறவர்களும் அவருடைய சமூகத்தில் நின்று கொண்டிருத்தல், ஓ, என்னே! அவர் அங்கு மகிமையடைந்தவராய் நின்று கொண்டிருந்தார். அங்கு பேதுருவும், யாக்கோபும், யோவானும் இருந்தனர்; அவரைப் பார்த்து, “அது அவர். அது அவர்,'' என்று சொல்லும் இஸ்ரவேலில் மீதியானவர்கள். அதுதான் கர்த்தருடைய வருகையின் போது நடக்கவிருக்கும் சம்பவங்களின் வரிசைக் கிரமம். பார்த்தீர்களா? உயிர்த்தெழுதல். அவர்கள் அங்கிருந்தனர். ஓ, அது அற்புதமல்லவா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) 156இப்பொழுது கவனியுங்கள், அவர் செய்த ஒன்றே ஒன்று, தமது மானிட சரீரமாகிய திரையைக் களைந்து, மகிமையடைந்த நிலையை அடைதல். பாருங்கள், அவர் தம்முடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டார். இன்று ஸ்தாபனங்கள் கூறுவது போல் மூன்று பேர்கள் அல்ல. ஓ, சகோதரனே! மூன்று பேர்கள் அல்ல, மூன்றல்ல. மாற்றிக் கொள்ளுதல்... மூன்று பேர்கள் அல்ல, ஒரே நபரின் மூன்று மாற்றங்கள். ஓ, என்னே! ஒரு காலத்தில் அவர் பிதாவாகத் தோன்றினார். அவர் முகமூடியை எடுத்துவிட்டு, குமாரன் ஆனார். இப்பொழுது அவர் மாம்சமாகி திரையை எடுத்துவிட்டு, பரிசுத்த ஆவியாக இருக்கிறார். மூன்று தெய்வங்கள் அல்ல; ஒரே தேவனின் மூன்று மாற்றங்கள். ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. ஒரே நபரின் மூன்று மாற்றங்கள். பாருங்கள்? 157அவர் பூமியில் இருந்த போது, அவர் அக்கினி ஸ்தம்பமாக இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தினார். அது சரியா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). பிறகு அவர் மாம்சமாகி தேவனுடைய குமாரன் ஆனார். மானிடவர்க்கத்துக்கு பாவ நிவாரணம் செய்ய, மரணத்தை ருசி பார்ப்பதற்கென அவர் அப்படியானார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (''ஆமென்'' இன்று அவர் என்னவாயிருக்கிறார்? அதே இயேசு அவரே (என்ன?) நேற்று பிதாத்துவத்திலும், அவரே குமாரத்துவத்திலும், அவரே பரிசுத்த ஆவியின் ரூபத்திலும், அதே ஒளி! தமஸ்குவுக்குப் போகிற வழியில் பவுல் ஒளியினால் தாக்கப்பட்டான். அவன் ''ஆண்டவரே, நீர் யார்?'' என்றான். அவர், ''இயேசு நானே'' என்றார். அது என்ன? மூன்று முறை அவர் தமது முகமூடியைக் கழற்றினார். அக்கினி ஸ்தம்பமாய் இருந்த அவர் முகமுடியைக் கழற்றின பின்பு என்னவானார்? பாவத்தைப் போக்குவதற்கென, ஒரு மனிதனாக. மனிதனாயிருந்த அவர் தம் முகமூடியைக் கழற்றி பரிசுத்த ஆவி என்றழைக்கப்படும் ஆவியாக மறுபடியும் சென்று, உங்கள் மேலும், உங்களுக்குள்ளும் வந்து அதே கிரியைகளை செய்து கொண்டிருக்கிறார். சபையே, அதை நீ காண்கிறாயா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை. ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். ஏனெனில் நான் உங்களோடே வாசம் பண்ணி, முடிவு பரியந்தம், உலகத்தின் முடிவு பரியந்தம், காலத்தின் முடிவு பரியந்தம், எல்லாவற்றின் முடிவுப்பரியந்தம் உங்களுக்குள்ளே இருந்து கொண்டு அதே கிரியைகளைச் செய்வேன்.'' அதைக் குறித்து எந்த நிச்சயமின்மையும் இல்லை. 158சிலர், ''நீங்கள் பிரஸ்பிடேரியனாக இருக்க வேண்டும். நீங்கள் மெதோடிஸ்டாக இருக்க வேண்டும். நீங்கள்... பாப்டிஸ்டுகளாகிய நாங்கள் அதைப் பெற்றிருக்கிறோம். பெந்தெகொஸ்தேயினராகிய நாங்கள் அதைப் பெற்றிருக்கிறோம்'' என்று கூறக் கேட்டிருக்கிறீர்கள். அதெல்லாம் தவறு. அதுபொய். அது நிச்சயம் மற்றது. பெந்தெகொஸ்தேயினரிடையே முப்பது ஸ்தாபனங்கள் இருக்கும் போது, அவர்கள் எப்படி அதை பெற்றிருக்க முடியும்? அதைப் பெற்றுள்ள ஸ்தாபனம் எது? மெதோடிஸ்டு களினிடையே ப்ரிமிடிவ், சுயாதீன மெதோடிஸ்டுகள் என்று எத்தனையோ பிரிவுகள் இருக்கும் போது, அவர்கள் எப்படி அதை பெற்றிருக்க முடியும்?பாப்டிஸ்டுகளிடையே அறுபது ஸ்தாபனங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அவ்வாறே கத்தோலிக்கரிடையிலேயும் வெவ்வேறு பிரிவுகள். அவர்கள் எல்லோரும் எங்குள்ளனர்? அதைப் பெற்றுள்ளது எது? அது நிச்சயமற்ற சத்தம். ஆனால் அவர், ''நான் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறேன்'' என்று கூறுவதை நீங்கள் கேட்கும் போது, அது நிச்சயமுள்ள சத்தம். எனவே, எக்காளம் விளங்காத சத்தமிட்டால், யுத்தத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள யாருக்குத் தெரியும்? அது என்ன? அவர்கள் எங்கே, எப்படி? தொளாயிரம் வெவ்வேறு ஸ்தாபனங்கள் உள்ளபோது, அவர்கள் எப்படி அதை செய்ய முடியும்? சரி, அவர்களால் முடியாது. 159அவர் அப்போஸ்தலர்; 2:38ல், ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்று சொன்ன போது, அதில் எந்த நிச்சயமின்மையும் இல்லை. அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.'' ''ஒருக்கால், நீங்கள் பெறுவீர்கள்.'' என்றோ, ''நீங்கள் பெற வழியுண்டு'' என்று கூறவில்லை. ஆனால், ''நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். ''எப்பொழுது? நீங்கள் மனந்திரும்பின பிறகு. நீங்கள் மனந்திரும்பாமலே ஞானஸ்நானம் பெறலாம், அப்படியானால் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளமாட்டீர்கள், ஆனால் நீங்கள் முழுவதுமாக மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், அதைப் பெற்றுக் கொள்வீர்கள். அதில் எந்த நிச்சயமின்மையும் இல்லை. ''நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தை நிச்சயம் பெறுவீர்கள்.'' (ஆங்கிலத்தில், “Ye shall receive” என்று எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் அது கிடைப்பது நிச்சயம் என்று அர்த்தம் - தமிழாக்கியோன்). அது சரியா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி.) அவர், வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள், என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்'' என்று கூறினபோது, அதில் நிச்சயமின்மை எதுவுமில்லை. அது நிச்சயம், அந்த அடையாளங்கள். ''நான் உங்களுடனே இருப்பேன்.'' நீங்கள், ''நல்லது, எங்கள் சபை அப்படிப்பட்ட காரியங்களை விசுவாசிப்பதில்லை'' எனலாம். அது நிச்சயமற்ற சத்தம். 160அவரே, ''நான் உங்களோடே இருப்பேன். நான் ஒரு காலத்தில் செய்த கிரியைகளை, உங்களுக்குள்ளே இருந்து கொண்டு உலகத்தின் முடிவு பரியந்தம் செய்வேன். என்னை விசுவாசிக்கிறவர்கள் வியாதியாயிருந்து அவர்கள் மேல் கைகள் வைக்கப்படும் போது, அவர்கள் நிச்சயம் சொஸ்தமாவார்கள். (shall recover) என்று கூறியுள்ளதாக, வேதம் உரைக்கிறது. ஒருக்கால் சொஸ்தமாகலாம்'' என்றல்ல. “ஜோன்ஸ் சுகமடைந்தார், ஆனால் ஜான்சன் சுகமடையவில்லை.'' அதற்கும், இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. ஜான்சன் ஜோன்ஸை போல் விசுவாசித்திருந்தால் அவரும் சுகமடைந்திருப்பார். அது சரியா? (சபையோர், ''ஆமென் என்கின்றனர் - ஆசி). நிச்சயமின்மை எதுவுமில்லை! நிச்சயமின்மை எதுவுமில்லை! என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை, ''நிச்சயமின்மை எதுவுமில்லை! “ஒருக்கால் அவர் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்.'' ஓ, ஏமாற்றப்பட்ட ஏழை மனிதனே! கவனியுங்கள், அவருடைய ஊழியக்காரன் என்னும் முறையில் இதை உங்களிடம் கூறுகிறேன். அவர் ஏற்றுக் கொள்பவர்களைத் தவிர வேறு யாரும் அவரிடத்தில் வரமுடியாது. “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்,'' அதில் நிச்சயமின்மை எதுவுமில்லை. ''உங்கள் பாவங்களின் ஒரு பாகத்தை மன்னிப்பேன். நீ இதை செய்தாய், அதை செய்தாய் அதை உனக்கு விரோதமாக நிறுத்து வேன்,'' என்றா கூறினார்? “அவை உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்.'' “என் கணவருக்கு நான் செய்த துரோகத்தை அவர் மன்னிக்க மாட்டார். என் மனைவிக்கு செய்த துரோகத்தை என் சகோதரிக்கு செய்த ரோகத்தை என் சகோதரருக்கு செய்த துரோகத்தை அவர் மன்னிக்கமாட்டார்.'' நீ என்ன செய்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர் எல்லாவற்றையும் மன்னித்து விடுவார். அதில் நிச்சயமின்மை எதுவுமில்லை. ''உங்கள் பாவங்கள் சிவேறென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும். ''நிச்சயமின்மை எதுவுமில்லை.'' 161''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புகென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ளயாவருக்கும் உண்டாயிருக் கிறது. ''(இதை கவனியுங்கள், வைராக்கிய திரித்துவக்காரர்களே), ''நம்முடைய தேவனாகிய கார்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது. அதே மருந்துச்சீட்டு, ஒவ்வொரு சந்ததியிலும் அது கிரியை செய்யும். “ஒருக்கால் இருக்கலாம், சிறிது கழிந்து, அது ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று மாறிவிடும் என்றல்ல. ஏமாற்றப்பட்ட ஏழை போதகனே! 162தேவன் மாறமுடியாது. அவர் முடிவற்றவர். சீட்டில் எழுதியுள்ள மருந்தை சரியான விதத்தில் கொடுத்தால், அது ஒவ்வொரு முறையும் கிரியை செய்யும். ஆம். ஐயா. நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். ''அது என்ன? இந்த மருந்து சீட்டு, இந்த ஞானஸ்நானம், இந்த ஞானஸ்நான முறைமை , இந்த பரிசுத்த ஆவி, இந்த அதே வல்லமை! கைகுலுக்கி, ''நான் நல்வழிப்பட்டு, நல்லவிதமாக வாழ்வேன்“ என்றல்ல. ''தேவனுடைய வல்லமை உங்கள் மேல் வந்து, உங்கள் வழிகளை மாற்றி, நவமான பாஷைகள் பேசும்படி செய்து, வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்து, பிசாசுகளைத் துரத்தி, அவர்கள் செய்த அதே கிரியைகளை நீங்களும் செய்யும்படி செய்யும்.'' எத்தனை பேருக்கு, எவ்வளவு காலத்துக்கு? சீஷர்களின் காலத்துடன் அது முடிவு பெற்று விட்டது. அப்படி கூறுவாயானால், நீ ஒரு கள்ளத்தீர்க்கதரிசி, ஒரு கள்ளப் போதகன். 163ஏனெனில், “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்,'' என்று வேதம் போதிக்கிறது. இங்கு அப்போஸ்தலர்கள், வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது,'' என்று கூறியுள்ளனர். என்னுடன் கூட சேர்ந்து சொல்லுங்கள் (சகோ. பிரன்ஹாமும், சபையோரும் அப். 2:39ஐ சேர்ந்து கூறுகின்றனர் - ஆசி). ''நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும்.'' எத்தனை பேர்? ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு சந்ததியிலும், ஒவ்வொரு நிறத்தவரிலும், ஒவ்வொரும தத்தினரிலும், அது யாராயிருந்தாலும், தேவன் அழைக்கும் யாவரும். தேவன் உன்னை அழைப்பாரானால், நீ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியைப் பெற அவர் உனக்குக் கட்டளையிடுகிறார். அப்பொழுது கிறிஸ்துவே உனக்குள் வாசம் செய்கிறார். அப்பொழுது நிச்சயமற்ற சத்தம் எதுவுமில்லை, நிச்சயமின்மை எதுவுமே இல்லை. உனக்கு வேதாகமம் உள்ளது. ஓ, அதன் மேல் நீ நிற்கிறாய். அதைக் கொண்டு நீமரிக்கலாம், அதைக் கொண்டு நீ உயிர்த்தெழுந்திருக்கலாம். மகிமை! அது தேவனுடைய வார்த்தை. வ்யூ என்னே! 164ஒட்டகத்துக்கு தண்ணீர் வார்த்த ரெபேக்காளைப் போல். அவள் தண்ணீர் வார்த்த அதே ஒட்டகத்தின் மேல் ஏறிச்சென்று தன் மணவாளனைச் சந்தித்தாள். அது போன்று, நாம் பிரசங்கிக்கிற அதே தேவன், வார்த்தையாகிய அதே தேவன், வார்த்தையில் இருக்கும் அதே தேவன், என்றாவது ஒரு நாள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் நம்மை எழுப்புவார். நம்மை மகிமையில் எழுப்பும் அதே வல்லமையின் மூலம் நம்மை குற்றப்படுத்துகிறவர்கள் கொன்று போடப்படுவார்கள். ஓ, என்னே! எழுந்து அதன் மேல் சவாரி செல்லுங்கள். வியாதியாயுள்ள நீங்கள் தேவனை அவ்விசுவாசிக்காதீர்கள். 165லீயோவும் மற்றவர்களும்... அவர்கள் செய்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஜெப அட்டைகளை விநியோகித்தார்களா? ஜெப அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளனவா? இன்று காலை பில்லிவரவில்லை. அவனுக்கு நேற்று ஜலதோஷம் பிடித்தது... சரி, என்ன, நமக்கு அது தேவையிருக்காது. கவனியுங்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்தது உண்மையென்று விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) உங்கள் முழு இருதயத்தோடு அதை விசுவாசிக்கிறீர்களா? (ஆமென். அது உங்களுக்கு நிச்சயமுள்ள சத்தமாக விளங்குகிறதா? (ஆம்! ஆமென், இது எப்படி இருக்கிறது பாருங்கள். இயேசு சபைக்கு அளித்த முதல் கட்டளை, மத்தேயு; 10 , ''நீங்கள் போய்...'' அதை நான் படிக்கப் போவதில்லை. அதை எடுத்துரைக்கிறேன். மத்தேயு; 10, அதை ஞாபகத்திலிருந்து கூற முடியும். அப்பொழுது அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளுக்கு எதிராக பிரயோகிக்க வல்லமையும், தீய ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் மரித்தோரை, உயிரோடெழுப்பவும் குஷ்டரோகத்தை சுகப்படுத்தவும் அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.'' அது சரியா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி. ஜனங்களை விசுவாசிக்கும்படி செய்து, அவர்கள் மேல் கைகளை வைத்தல்; அவர் எழுபது பேரை அனுப்பின் போதும், அதுவே அவர் முதல் கட்டளையா? 166அவர் அளித்த கடைசி கட்டளை எது? மாற்கு; 16, நமது ஆண்டவரின் உதடுகளிலிருந்து வெளி வந்த கடைசி சொற்கள் அவர் சபைக்கு அளித்த கட்டளை; ''நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.'' “ஒருக்கால் அவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படலாம், அவனுக்கு மற்றொரு தருணம் அளிக்கப்படலாம்.'' அவனுக்கு ஒரு தருணமும் அளிக்கப்படாது. அதைக் குறித்து நிச்சயமின்மை எதுவுமில்லை. அவன் விசுவாசியாமல் போனால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். 167அவர்களை பின்தொடரப் போகும் நடக்கும் அடையாளங்கள் எவை? ''சிலரால் அது நடக்கும். ஒருக்கால் அது நடக்கும்'' என்றா? இந்த அடையாளங்கள் நிச்சயம் நடக்கும். அவர்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிருப்பார்கள், பிசாசுகளைத் துரத்துவதில் விசுவாசம் கொண்டிருப்பார்கள், நவமான பாஷைகளைப் பேசுவதில் விசுவாசம் கொண்டிருப்பார்கள். ஓ, அவர்கள் இயற்கைக்கு மேம்பட்ட தேவனுடைய கிரியைகள் அனைத்திலும் விசுவாசம் கொண்டிருப்பார்கள். உயிர்தெழுந்த இயேசு அவர்கள் மூலம் கிரியை செய்வார். அது உண்மையா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அதுவே தேவனுடைய கடைசி வார்த்தையா? (''ஆமென்''). அப்படியானால் அதனுடன் ஏதாவதொன்றை கூட்டுபவன், அல்லது அதிலிருந்து ஏதாவதொன்றை எடுத்துப் போடுபவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். அப்படித்தான், அது உள்ளது. அப்படித்தான், அது உள்ளது. 168தொடக்கத்தில் பரிசுத்த ஆவிவிழுந்த போது, ஆதி பெந்தொகொஸ்தே சபை சந்தடியுள்ள சபையாக இருந்ததா? கன்னி மரியாள் குடித்தவளைப் போல் தேவனுடைய வல்லமையினால் தள்ளாடினாள். எல்லோருமே அந்நிலையில் இருந்தனர். அவர்களைக் கண்ட ஜனங்கள், இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்'' என்றனர். அந்த விதமாகத்தான் சபை நிறுவப்பட்டது. அந்த விதமாகத்தான் ஒவ்வொரு சபையும் நிறுவப்படுகிறது. ஒவ்வொரு முறையும் தேவனுக்கு ஒரு சபை உண்டாகும் போது, அது அதேவிதமான சபையாக இருக்கும். ஏனெனில், அதற்கு நிச்சயமற்ற சத்தம் எதுவுமில்லை. ''நல்லது, நல்லது, எங்கள் பேராயர் சொல்கிறார்...'' பேராயர் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. வார்த்தை கூறுவது தான் முக்கியம் வாய்ந்தது. பாருங்கள். பேராயர் நிச்சயமற்ற சத்தமிடுகிறார். அவர் இந்த சத்தத்தைப் போன்ற ஒரு சத்தமிட்டால், அவர் சரி. சபையானது முன்பு நடந்து கொண்டது போல் இப்பொழுது நடந்து கொள்ளாவிட்டால், அது தவறு. அதை நீ பெற்றுள்ளதாகக் கூறிக்கொண்டு, அது போன்று நடந்து கொள்ளாவிட்டால், உன்னிடம் ஏதோ தவறுண்டு. ஏனெனில் அப்படித்தான் அது கூறுகிறது என்பதை எல்லோரும் இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள். அது வீட்டுக்கு சென்ற பிறகு.... 169பிலிப்பு சென்று சமாரியருக்குப் பிரசங்கித்தான். பவுல் அங்கு வந்து... பேதுரு அங்கு வந்து அவர்கள் மேல் கைகளை வைத்தான். அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று, தொடக்கத்தில் அவர்கள் செய்ததை இவர்களும் செய்தனர். பேதுரு கொர்நேலியுவின் வீட்டுக்குச் சென்றான். அங்கு புறஜாதிகள் இருந்தனர், கிரேக்கர்கள் போன்றவர்கள். அவர்கள் மேல் அவன் கைகளை வைத்தபோது, தொடக்கத்தில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டது போல் இவர்களும் பெற்றுக்கொண்டனர். 170உங்களிடம் ஒன்றைக் கூறுகிறேன். நான் ஒரு மிஷனரி என்று உங்களுக்குத் தெரியும். மிஷனரி என்பவன் போவதும், வருவதுமாக இருப்பவன். அவன்தான் மிஷனரி. நீங்கள் ஒரு இடத்துக்கு சென்று அங்கு தங்கினால், அவர்கள் உங்களை மிஷனரி என்று அழைக்கின்றனர். அது வீடு மாறுபவன். நீங்கள் உங்கள் வீட்டை வேறிடத்துக்கு மாற்றிக் கொண்டீர்கள். அவன் மிஷனரி அல்ல. பவுல் ஒரு மிஷனரி. அவன் ஓரிடத்தில் தங்கவில்லை. அவன் ஓரிடத்தை விட்டு மற்றொரு இடத்துக்கு போய்க் கொண்டேயிருந்தான். அவன் வீடு மாறவில்லை, போய்க் கொண்டேயிருந்தான், அவன் ஒரு மிஷனரி. மிஷனரி ஊழியத்தில் நான் உங்களுக்கு சொல்லுகிறேன். ஆப்பிரிக்காவில் பின்தங்கிய இடங்களில் வசிக்கும் மக்கள்; அவர்கள் காடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் மானிடரா இல்லையா என்று கூட அவர்கள் நீண்ட காலமாக அறிந்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் தென் ஆப்பிரிக்காவை ஆளத்தொடங்கிய போது; நீங்கள் காட்டுக்குச் சென்று ஒரு காட்டுமிராண்டியைக் காண நேரிட்டால்... (சகோ. பிரன்ஹாம் 'பர்ர்ர்' என்று சத்தம் உண்டாக்குகிறார் - ஆசி. குரங்குகளைப் போல் அசைந்து சுற்றும் முற்றும் பார்த்தால், அங்கு ஒன்றுமில்லை. பிறகு நீங்கள் பார்க்கும் போது, மணலிருந்து ஒரு கறுப்பு தலை வெளியே நீட்டி சுற்றிலும் பார்ப்பதை நீங்கள் காணலாம். பாருங்கள், அவன் தன்னை மணலில் புதைத்துக் கொண்டு, மணலை அவன் மேல் வேகமாக வாரிப் போட்டுக் கொள்கிறான். நீண்ட காலமாக அவர்கள் மிருகங்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மனிதர்கள் என்று எப்படி கண்டு பிடித்தனர் தெரியுமா? அவர்கள் நாய்களை வைத்திருந்தனர். நாய்கள் மனிதரைத் தவிர வேறெ தெனுடனும் வாழ்வதில்லை. அப்படித்தான் அவர்கள் மனிதர் என்று கண்டுபிடித்தனர். 171இந்த ஆட்களில் ஒருவனை எடுத்துக் கொள்ளுங்கள் - பாசுடோக்கள், அல்லது ஷான்கான், ஹோசாஸ் போன்ற பழங்குடியினரிலிருந்து ஒருவனை. அவர்கள் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாதவர்கள். அவர்கள் எப்பொழுதும் ''பிளா, ப்ளா, ப்ளு'' என்று உளறிக் கொண்டிருப்பார்கள். பெண்களும், ஆண்களும் எல்லோருமே நிர்வாணிகள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். பரிசுத்த ஆவி அவன் மேல் விழும்படி செய்யுங்கள். உங்கள் மேல் பரிசுத்த ஆவி விழும்போது என்ன செய்வீர்களோ, அவனும் அதையே செய்வான். அதைக்குறித்து நிச்சயமின்மை எதுவுமில்லை. அவன்... தன் வாழ்க்கையில் அந்நியபாஷைகளில் பேசுவதைக் குறித்து கேள்விப்பட்டதேயில்லை. இதோ அவன் உங்களுக்கு அந்நிய பாஷைகளில் பேசிக் காண்பிக்கிறான். இங்கு மொழி பெயர்ப்பாளர் நின்று கொண்டிருக்கிறார். “நீங்கள் இரட்சிக்கப்பட விரும்புகிறீர்களா?'' என்று கூறினால் மொழி பெயர்ப்பாளர், ”ப்ளா'' என்பார். அப்பொழுது “ப்ளா - ஆ'' என்று மறு உத்தரவு அருளுவார்கள். அதற்கு, ''ஆம்'' என்று அர்த்தம். ''அங்கு யாராகிலும்...'' ''ஊள - ப்ளா, ப்ளா, ப்ளா“ ''உங்கள் கைகளை உயர்த்திப் பெற்றுக்கொள்ளுங்கள்.'' ''ஊள - ப்ளா.'' ஓ, ஓ, ஓ, என்னே! இதோ அவன் அந்நிய பாஷைகளில் பேசுகிறான். அதைக் குறித்து அவன் கேள்விப்பட்டதேயில்லை. அதைக்குறித்து அவனுக்கு ஒன்றும் தெரியாது. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதில் நிச்சயமின்மை எதுவுமில்லை. அவன் பழங்குடியினரிடையே சென்று, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறான். அவனிடம் யாரும் சொல்ல வேண்டியதில்லை. 172ஆனால் நமது அமெரிக்க பெண்மணிகளும், சபை அங்கத்தினராகிய நீங்களும்; உங்களைக் குறிப்பிட்டு நான் பேசவில்லை. இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறதென்று உங்களுக்குத் தெரியும். குட்டைகால் சட்டை அணிந்து, இப்படி நடந்து கொள்ளும் சபை அங்கத்தினர்களே, ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் நீளத்தை சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டே வருகிறீர்கள். முதலில் நீங்கள் குட்டை கால் சட்டை அணிந்திருந்தீர்கள், பிறகு அது, குட்டை கால் சட்டையாக ஆனது. அது மேலும் குட்டையானது. வஞ்சிக்கப்பட்ட சபை அங்கத்தினனே, நீ ஆப்பிரிக்கரைக் காட்டிலும் மோசமானவன். அங்கு முப்பதாயிரம் பேர் ஒரே நேரத்தில் கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட அந்நாளில் பெண்களும் அதில் இருந்தனர். நீங்கள் சபை பாடற்குழுக்களில் பாடி, அதே சமயத்தில் புல் வெட்டும் போதும், நகருக்குச் செல்லும் போதும் குட்டைகால் சட்டை அணிகிறீர்கள். அவர்களைக் காட்டிலும் நீங்கள் மோசமானவர்கள். அவர்கள் நியாயத்தீர்ப்பின் நாளில் எழுந்து நின்று நீங்கள் வெட்கப்படும்படி செய்வார்கள். 173அங்கு பெண்கள் நிர்வாணமாய் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் முன்னில் ஒரு சிறு கோவணம் மாத்திரமே இப்படி இருந்தது. மார்பகம் பாகத்தில் ஒன்றுமேயில்லை. நான்கு அல்லது ஆறு அங்குல அகலமுள்ள நாடா அவர்கள் இடுப்பைச் சுற்றிலும் இருந்தது. ஆண்களும் கூட முழுவதும் நிர்வாணமாய் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாதிருந்தனர். பரிசுத்த ஆவியின் வல்லமை அவர்கள் மேல் இறங்கினவுடனே, அவர்கள் வெட்கப்பட்டு கைகளை கட்டி மறைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்து சென்றுவிட்டனர். அடுத்த நாள் அவர்கள் ஆடை அணிந்திருந்தனர். அல்லேலூயா! ஆம், அதைக் குறித்து நிச்சயமின்மை எதுவுமில்லை. பரிசுத்த ஆவி உங்களை ஆடை அணியும்படி செய்கிறார். நீங்கள் ஆடை அணிவீர்கள். அது உங்களை நாணயமாக நடந்து கொள்ளும்படி செய்கிறது. அதைக் குறித்து நிச்சயமின்மை எதுவுமில்லை. அவர் உங்களுக்கு வேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட ஒருவரை - கர்த்தராகிய இயேசுவை - சேவிக்க உங்களுக்கு விருப்பம் அல்லவா? இந்த நிச்சயமற்ற சத்தங்களிலிருந்து விலகிச் செல்லுங்கள். ஓ, நீ புகழ்வாய்ந்தவள், ஆம். நீ புகழ் வாய்ந்தவள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். ஆனால், தேனே, நீ மரித்துக் கொண்டிருக்கிறாய். நீ பிழைத்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறாய், ஆனால் நீமரித்துக் கொண்டிருக்கிறாய். ''சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்'' என்று வேதம் கூறுகிறது. அது நிச்சயமற்ற சத்தமல்ல. அவள் செத்தவள். அது உண்மை. அதைக் குறித்து நிச்சயமற்ற சத்தம் எதுவுமில்லை. சுகபோகம் நிச்சயமற்றது, சகோதரனே. 174தேவன் பரிசுத்தமுள்ளவர். ஒரு மனிதன் ஆவியால் பிறக்கும் போது, அவன் ஒரு மாணாக்கன் ஆகிவிடுகிறான். அது மாத்திரமல்ல, அவன் ஒரு ராஜா. ஒரு ராஜகுமாரன். அவன் வேறொரு தேசத்தை சேர்ந்தவன். அவனுடைய இராஜ்யம் பரத்திலுள்ளது. அவன் தேவனுடைய வல்லமையினால், தேவனுடைய பிரசன்னத்தினால் நிறையப்படுகிறான். பரிசுத்த ஆவியைப் பெற்ற பெண் ஆடை அணிந்து கொள்கிறாள். மனிதன் நாணயமாகவும் அவனுடைய மனைவிக்கு உண்மையுள்ளவனாகவும் நடந்து கொள்கிறாள். மனைவியும், நாணயமாகவும் புருஷனுக்கு உண்மையுள்ளவளாகவும் நடந்து கொள்கிறாள். அவர்களுக்கு உலகத்திலுள்ள எதுவும் வேண்டாம். அவர்கள் மேலானவைகளையே நாடுகின்றனர். அவர்கள் உலகத்தின் காரியங்களுக்கு தங்களை முடித்துக் கொள்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாயிருக்கின்றனர். அவர்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் பரிசுத்தர் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவி அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர்களுக்கு சுயசிந்தை எதுவுமில்லை. பரிசுத்த ஆவி அவர்களுக்குள் அசைவாடுகிறார். ஆகையால் தான் அவர்கள் உலகத்தின் மக்களுக்கு பைத்தியக்காரர் போல் காணப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் வேறொரு ராஜ்யத்தின் ஆவியினால் நடத்தப்படுகின்றனர். 175ஓ, நண்பனே, அது அப்படித்தான் என்று நானறிவேன். ஒரு காலத்தில் நான் காணாமற் போயிருந்தேன், இப்பொழுதோ நான் கண்டு பிடிக்கப்பட்டேன். அந்த காரியங்களுக்கு நான் குருடனாயிருந்தேன், இப்பொழுதோ நான் காண்கிறேன். பயப்பட என் இருதயத்துக்கு கிருபைதான் சொல்லிக் கொடுத்தது. கிருபைதான் என்னை பயத்தினின்று நீக்கினது, நான் முதலில் விசுவாசித்து கிறிஸ்துவினிடம் வந்த அந்த நேரத்தில், அந்த கிருபை எவ்வளவு விலையேறப் பெற்ற தாய் காணப்பட்டது! 176முடிக்கும் தருணத்தில், இரட்சிப்புக்கும் சுகம் பெறுதலுக்கும் இந்த வார்த்தைகளை ஒரு நிமிடம் கூற விரும்புகிறேன். பால் ராடேர் என் நண்பர். அவரை சிறிது காலமாக நான் அறிந்திருந்தேன். நான் பையனாக அவருடைய பாதங்களில் உட்கார்ந்திருக்கிறேன், பெரிய ஊழியக்காரர். அண்மையில் அவர் கலிபோர்னியாவில் காலமானார். அவர் மரிக்கும் தருவாயில் அவருக்கு புற்றுநோய் உண்டாகி, கலிபோர்னியாவில் மரணத்தருவாயில் இருந்தார். இப்பொழுது ஓ.எல். ஜாகர்ஸ், வைத்துள்ள கூடாரத்தை அவர் முன்பு வைத்திருந்தார். அப்பொழுது அதன் பெயர் என்னவென்று மறந்து விட்டது, இப்பொழுது அது உலக சபை என்றழைக்கப்படுகிறது. பால் ராடேரின் பழைய கூடாரம், அது எல்டராடோ தெருவைத் தாண்டியுள்ளது, நீங்கள் அதன் வழியாக சென்று, மக்பர்ஸன் ஆலயத்தை கடந்து, பூங்காவில் உள்ளது. பால் ராடேர் அதற்கு போதகராயிருந்த போது அவர்கள் அங்கு சென்றனர். 177அவர் மரிப்பதற்கு முன் தன் கரங்களை நான் நன்கு அறிந்து துள்ள ஒரு சகோதரனின் தோள் மேல் போட்டு - அவர் எர்ண் பாக்ஸ்டருக்கு நண்பர் - ''நான் பாப்டிஸ்டு கூட்டத்தாராகிய உங்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக என் கிருபையின் செய்தியை உற்சாகமுள்ள பெந்தெகொஸ் தேயினருக்கு அளித்திருந்தால், இன்றைக்கு நான் பிழைத்திருப்பேன். ஆனால், நீங்கள் என்னைத் தொல்லைப்படுத்திவிட்டீர்கள். நான் மிகவும் சோர்வடைந்து, குழப்பமுற்று, முடிவில் இப்பொழுது மரித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றார். அவர் படுக்கையில் அங்கு படுத்துக் கொண்டிருந்த போது, அவர்கள் திரையை இழுத்துவிட்டு, ''உம்மண்டை தேவனே“ என்னும் பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர். அவர் நகைச்சுவை உள்ளவர். அவர், ''மரித்துக் கொண்டிருப்பது யார், நீங்களா நானா? நீங்கள் மரித்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அப்படி செய்யாதீர்கள். உற்சாகமான சில சுவிசேஷப் பாடல்களை எனக்காக பாடுங்கள்,'' என்றார். அப்பொழுது மூடி வேதாகம சங்கத்தைச் சேர்ந்த நால்வர் பாடல் குழு, ''மீட்பர் மரித்த குருசண்டை'' என்னும் பாடலைப் பாடினர். அவர், ''இது அதைக் காட்டிலும் நன்றாயிருக்கிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்'' என்றார். அவர், ''லூக் எங்கே?'' என்றார். லூக்கும், பாலும், நானும் என் மகன் பில்லியும் இருப்பது போல், ஒன்றாகவே இருந்து வந்தனர். அவர்கள் சகோதரர், அவர்கள் ஒன்றாக இருந்தனர். 178அவர், ''லூக் எங்கே?'' என்று கேட்டார். லூக் தன் சகோதரன் மரிப்பதைக் காண விரும்பாமல், அந்த ஆஸ்பத்திரியில் அடுத்த அறையில் இருந்தார். அவர், ''அவனை இங்கு வரும்படி சொல்லுங்கள், அவனைக் கொண்டு வாருங்கள்,'' என்றார். லூக் பால் இருந்த இடத்துக்கு வந்தபோது, பால் தன் கையை நீட்டி அவர் கையை பிடித்துக் கொண்டார். லூக் தன் தலையை திருப்பிக்கொள்ள முயன்றார். அவர், ''லூக், நாம் எத்தனையோ கடினமான போராட்டங்களின் வழியாக ஒருமித்து கடந்து வந்திருக்கிறோம். இல்லையா, சகோதரனே?'' என்றார். லூக், ''ஆம்,'' இத்தனை ஆண்டுகளாக நாம் ஒன்றாக பாடுபட்டோம், சகோதரனே. ''அது உண்மை, அநேக கடினமான போராட்டங்கள்,'' என்றார். பால், ''லூக், சற்று யோசித்து பார். இன்னும் ஐந்து நிமிடங்களில் நான், அவருடைய நீதியின் வஸ்திரத்தை உடுத்தினவனாய், தேவனுடைய சமூகத்தில் நின்று கொண்டிருப்பேன்'' என்று சொல்லி, அவருடைய சகோதரனின் கரங்களை இறுகப் பிடித்தவரே மரித்துப்போனார். அதைக் குறித்து நிச்சயமின்மை எதுவுமில்லை. அவர் போகும் வழியை அவர் அறிந்திருந்தார். அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, அவருடைய வாழ்க்கையில் தேவனுடைய வல்லமையைக் கொண்டிருந்ததை அறிந்திருந்தார். 179அவர் மரம் வெட்டுபவர். அவர் மரங்களை வெட்டுவது வழக்கம். அவர் சொன்னார்... அவரும் என்னைப் போல் ஒரு மிஷனரி - நான் கடல் கடந்து செல்வதைப் போல், அவரும் தூக்கும் மற்றவர்களும் தீவுகளுக்கு சென்றிருந்த போது, விஷ ஜுரத்தில் பீடிக்கப்பட்டனர். அது மிகவும் மோசமானது, மரணத்தை விளைவிக்க கூடியது. அவருக்கு விஷ ஜுரம் கண்டது. அது காடுகளில், அங்கு ஒன்றுமேயில்லை. அவரும், அவருடைய அழகிய மனைவியும் அங்கிருந்தனர். அவர் என்ன சொன்னார் தெரியுமா, அந்த வரலாற்றை உங்களிடம் கூறியிருக்கிறேன். ''சென்ற முறை அவர் மரித்து விடுவார் என்னும் எண்ணம் அவருக்குண்டான போது, அவருடைய மனைவி முத்தமிட்டு விடை பெற்றாள்,'' என்று கூறினார். எனவே அவர்கள் அங்கிருந்தனர். அந்த அறை இருட்டாகிக் கொண்டே வந்தது. அவர் போய்விடுவார் என்று நினைத்தார். அவர் மனைவியிடம், “தேனே, இங்கு இருட்டடைந்து கொண்டே வருகிறது. நான் மரித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார். அவள், ''ஓ, பால், பால்,'' என்று கதறி முகங்குப்புற விழுந்து அழத் தொடங்கினாள். அவர், ''தேனே அழுது கொண்டேயிரு... தேவனிடம் கதறி அழுது கொண்டேயிரு. உன் குரலை நான் கேட்கட்டும். யாராகிலும் ஜெபியுங்கள். இனிமேல் என்னால் ஜெபிக்க முடியாது. நான் மரிக்கும் போது, அதை கேட்க விரும்புகிறேன்,'' என்றார். 180அவள் தேவனிடம் கதறி அழுது, “ஓ, தேவனே, அவர் மரிக்க விடாதேயும். அவர் வேலை இன்னும் முடியவில்லை. ஓ, தேவனே, பாலை மரிக்க விடாதேயும்'' என்று அழுது கொண்டே யிருந்தாள். அவள் இப்படி அவர் மேல் படுத்துக் கொண்டிருந்தாள். அது இருட்டடைந்து கொண்டே வந்தது. அவர், ''அன்பே, அது மேலும், மேலும் இருட்டடைந்து கொண்டே வருகிறது'' என்றார். முடிவில் அவர் கடந்து சென்றார். அவர், ''நான் கடந்து சென்றபோது, நான் மீண்டும் இளைஞனாக மாறினதாக சொப்பனம் கண்டேன். நான் ஓரிகானிலுள்ள ஒரு காட்டை அடைந்தேன்,'' என்றார். அது தான் அவருடைய சொந்த இடம். அவர் தொடர்ந்து, நான் ஒரு மரத்தை வெட்டினேன். முதலாளி என்னிடம், ''நீ மலையின் உச்சிக்கு சென்று ஒரு குறிப்பிட்ட மரத்தை வெட்டு. வீடு கட்டுவதற்கு நாம் மரம் உண்டாக்க வேண்டும்'' என்றார். 181அவர், ''சரி, முதலாளி என்று கூறிச் சென்றார். அவர் அவைகளை முகர்ந்ததாகவும், அவை பச்சையாக இருந்ததாகவும் கூறினார். அவருக்கு நல்லுணர்வு தோன்றினதாம். அவர் காட்டின் வழியே இப்படி ஓடிச் சென்றாராம். அவர் கோடாரியால் வெட்டின போது, கோடாரியின் இரும்பு மிருதுவான தேவதாரு மரத்துக்குள் பாய்வதை உணர்ந்தாராம். உங்களுக்கு ஓரிகான் தேவதாரு மரம் தெரியும். அது உள்ளே பாய்ந்த போது... தென் பாகத்திலும் அதே விதமான மரம் உள்ளது. ஆனால் அது கடினமானது. நீங்கள் வடக்கே செல்லும் போது, குளிர் அதிகமாகுந்தோறும் மரம் மிருதுவாகிக் கொண்டே வருகிறது. முடிவில் அவர் இரட்டை இரும்புத் துண்டை கோடாரியில் பொருத்தி, மரத்தின் எல்லா கிளைகளையும் வெட்டி வீழ்த்தினார். அவர் கோடாரியை அங்கு குத்தி நிறுத்தி, “மரத்தை சுமந்து மலையின் கீழே செல்லப் போகிறேன்,'' என்றார். அவர் அதை தூக்க முயன்றபோது, அவரால் தூக்க முடியவில்லை. அவர் முயன்று, முயன்று பார்த்தார். அவரால் முடியவில்லை. ஒரு மனிதனின் வலுவான தசைகள் முதுகிலுள்ளவை என்று அவர் நினைவு கூர்ந்ததாகச் சொன்னார். எனவே அவருடைய தசைகள் பிளந்து போகாமல் இருப்பதற்காக, தன் முழங்கால்களை ஒன்றாக சேர்த்து, குனிந்து அதை தூக்க முயன்றார். அவர் எல்லா தசைகளின் வலிமையையும் அதில் போட்டு தூக்க முயன்றும் அவரால் முடியவில்லை. அவர் பாடுபட்டு முயன்றும் பயனில்லை. அவர், ''நான் எப்படியும் இந்த மரக்கட்டையை கீழே கொண்டு செல்ல வேண்டும். என் முதலாளி அதை கொண்டு வரும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். என் பலம் என்னை விட்டு எங்கே சென்றதோ தெரியவில்லை. என்னால் தூக்க முடிந்தால், அதை தோளின் மேல் வைத்துக் கொண்டு நடந்து சென்றிருப்பேன். ஆனால், ''என்னால் தூக்க முடியவில்லையே'' என்றார். அவர் எவ்வளவோ முயன்று பார்த்தும் அவரால் முடியவில்லை. அவர் களைத்துப் போனார். 182அவர் மரத்தின் பக்கம் விழுந்து (சகோ. பிரன்ஹாம் மூச்சு வாங்குவது போல் காண்பிக்கிறார் - ஆசி ), “நான் பாடுபட்டேன், பாடுபட்டேன், பாடுபட்டேன், பாடுபட்டேன். இனி என்னால் முடியாது. நான் எப்படியும் அந்த மரக்கட்டையை கீழே கொண்டு செல்ல வேண்டும், ஆனால் எப்படியென்று தெரியவில்லை. என்னால் தூக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை,'' என்று சொல்லிக் கொண்டு அங்கு உட்கார்ந்திருந்தார். அப்பொழுது அவர் ஒரு சத்தத்தைக் கேட்டார். அது, அவரை ''பால்'' என்று அழைத்த அவருடைய முதலாளியின் குரல். அது மிகவும் இனிமையான குரலாக இருந்ததாகக் கூறினார். அவர், ''நான் திரும்பி பார்த்தபோது, அது என் முதலாளி அல்ல. அது என் உண்மையான முதலாளி இயேசு'' என்றார். இயேசு, ''பால், நீ ஏன் கஷ்டப்படுகிறாய்? அங்கு ஓடிக் கொண்டிருக்கும் ஓடையை கவனித்தாயா? அது நேராக முகாமுக்குச் செல்கிறது. நீ ஏன் மரக்கட்டையை தண்ணீரில் தள்ளி, அதன் மேல் ஏறிச் சொல்லக் கூடாது?'' என்றார். எனவே, அவர் மரக்கட்டையை தண்ணீரில் உருட்டி விட்டு, அதன் மேல் குதித்து உட்கார்ந்து, சிறு அலைகளின் மேல் சென்று, “நான் அதன் மேல் ஏறிச் செல்கிறேன் நான் அதன் மேல் ஏறிச் செல்கிறேன்!'' என்று கூச்சலிட்டுக் கொண்டே சென்றார். அவருடைய உயிர் அறைக்குள் வந்தபோது, அவருடைய மனைவி அவருடைய உடலின் மேல் படுத்திக் கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள். அவர், ''நான் அதன் மேல் ஏறிச் செல்கிறேன் நான் அதன் மேல் ஏறிச் செல்கிறேன்'' என்று சத்தமிட்டுக் கொண்டே குதித்தெழுந்தார். 183சகோதரனே, இன்று காலை உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீ பாடுபடாதே, நானும் பாடுபட மாட்டேன். ''நான் மெதோடிஸ்டு, நான் பாப்டிஸ்டு, நான் இது'' என்று அங்கும், இங்கும் ஓடுவது உங்களைக் களைப்பாக்கிவிடும். நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன். அவருடைய கிருபையினால் நான் அவருடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொண்டேன். அவர் என்னிடம் வந்தார். நான் அதன் மேல் ஏறிச் செல்கிறேன். என்ன நடந்தாலும், எத்தனை முறை நாம், “பைத்தியக்காரர்'' என்று அழைக்கப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை. இன்று காலை நீங்கள் சுகம் பெறுதலைக் குறித்த விஷயத்தில், உங்களுக்காக ஜெபம் பண்ணப்படும் போது; இப்பொழுது நமக்கு சிந்தனைகளைப் பகுத்தறிதலின் வரிசைக்கு நேரமில்லை. (இப்பொழுது பகல் ஒரு மணி ஆகிவிட்டது). நாம் வியாதியஸ்தர்களுக்காக, இங்குள்ள ஒவ்வொருவருக்காகவும், ஜெபிக்கப் போகிறோம். ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்'' என்றார் இயேசு. அது சரியா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). “வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.'' அது சரியா? நான் அதன் மேல் ஏறிச் செல்கிறேன். நீங்களும் அதன் மேல் ஏறிச் செல்ல ஆயத்தமா? சற்று நேரம் நாம் தலை வணங்குவோம். 184கிருபையுள்ள தேவனே, இந்தக் கடைசி நாட்களில், நேரம் இருளடைந்து வரும் போது, சபையானது ஸ்தாபனங்களின் மூலம் வார்த்தையை உருட்டி திரித்துவிட்டது. ஆண்டவரே, அது சரியல்ல என்று அவர்கள் அறிவார்கள். அவர்கள் அதை திரிப்பதை நிறுத்தி விடுவார்களாக. ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்குத் தாவின மக்கள் ஒருக்கால் இன்று காலை இங்கிருக்கக் கூடும். ஒரு சமயம் அவர்கள் மெதோடிஸ்டு சபையிலிருந்து, பின்பு பாப்டிஸ்டு சபைக்கு, அதன் பின்பு பெந்தெகொஸ்தே சபைக்கு, தேவனுடைய சபைக்கு, நசரின் சபைக்கு, இப்படி மாறிக் கொண்டேயிருக்கின்றனர், ஓ தேவனே, அவர்கள் இப்படி மாறுவதை நிறுத்திக் கொள்வார்களாக. அவர்கள் வந்து, இன்று காலை தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் ஏறிச் செல்வார்களாக. அவர்கள் இளைப்பாறி, தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக் கொள்வார்களாக. அவர், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என்று கூறியுள்ளார். தேவனே, அவர்கள் இன்று காலை அந்த வாக்குத்தத்தத்தின் மேல் ஏறிச்சென்று, தேவனுடைய நன்மை என்னும் கடலில், நித்திய ஜீவன் என்னும் ஆவியின் தண்ணீரால் தெளிக்கப்பட்டு செல்வார்களாக. கர்த்தாவே இதை அருளும். 185அலை அலையாக, புத்துணர்ச்சியுடன் அவர்களுடைய வாசலினருகே ஓடிக் கொண்டிருக்கும் பரிசுத்த ஆவியின் ஓடையில், அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் ஏறிச் சென்று, ''கர்த்தாவே, நான் அதன் மேல் ஏறிச் செல்கிறேன். இதோ வருகிறேன். நான் அதன் மேல் ஏறிச் செல்கிறேன்,'' என்று கூறுவார்களாக, வியாதியஸ்தரும், அவதிப்படுவோரும், என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கும் வியாதியஸ்தரும்; ஒருக்கால் மருத்துவர்கள் அவர்களை கைவிட்டிருக்கக் கூடும். அவர்கள் ஒரு ஆஸ்பத்திரியிலிருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு சென்று போராடி, கதவுக்கு கதவு, இடத்துக்கு இடம் சென்று, இப்பொழுது என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கின்றனர். ஆனால் அவர்களுடைய பக்கத்தில் ஜீவநதி இன்று காலை ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மாற்கு; 16ல் காணப்படும். ''வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்,'' என்னும் வேதவாக்கியத்தை ஏற்றுக்கொள்வார்களாக. விசுவாசிக்கிறவர்கள் மேல் கைகள் வைக்கப்படும் போது, அவர்கள் சொஸ்தமாவார்கள். கர்த்தாவே, அவர்கள் அதன் மேல் இன்று காலை கவனம் செலுத்தி, “கர்த்தாவே, இதோ நான் இருக்கிறேன். நான் எப்படிபோகப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. நான் ஜீவ நதியில் களிகூர்ந்தவனாய் சென்று, என் கைகளினால் தண்ணீரை தெளிக்கப் பண்ணி, அதை என் ஆத்துமாவிலும், என் தலையின் மேலும் ஊற்றி, உம்முடைய நன்மையினால் குளித்து, களிகூர்ந்தவனாய் சென்று, ''அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்னும் உம்முடைய வாக்குத்தத்தத்தின் மேல் ஏறிச் செல்கிறேன்'' என்று சொல்வார்களாக. பிதாவே, இதை அருளும். 186இப்பொழுது நாம் தலைவணங்கியிருக்கும் போது, இன்று காலை இக்கட்டிடத்தில் யாராகிலும் இருக்கின்றனரா என்று வியக்கிறேன்; கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக அறிந்திராமல், ஜீவநதி உங்களிடம் கொண்டு வரப்பட்டதென்று விசுவாசிப்பவர் எத்தனை பேர், இன்று காலை இக்கட்டிடத்தில் உள்ளனர்? நீங்கள் எல்லாவிதமான நிச்சயமற்ற சத்தங்களையும் பெற்றிருந்தீர்கள், உங்கள் வீட்டை நீங்கள் அமிழ்ந்து போகும் மணலின் மேல் கட்டியிருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் மரிக்கப் போகிறீர்கள்என்றும், இவ்வுலகை விட்டு நீங்கள் செல்ல வேண்டுமென்றும் உணர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலே நிச்சயமுள்ள சத்தத்தை கேட்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள். கிறிஸ்து உங்களை இன்னமும் நேசிக்கிறார் என்னும் சத்தத்தை இன்று காலை நீங்கள் கேட்பதாக விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு பாவமுள்ளவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர் இன்னமும் உங்களை நேசிக்கிறார். உங்களை நான் ஜெபத்தில் நினைவுகூர வேண்டுமென்று விரும்புகிறீர்களா? நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திலேயே, உங்களை பீடத்தண்டை அழைக்க இயலாது, இங்கு பீடம் எதுவுமில்லை, அது பிள்ளைகளால் நிறைந்துள்ளது. ஆனால் கிறிஸ்துவை விசுவாசித்து, உங்கள் சொந்த இரட்சகராக அவரை இப்பொழுதே நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பி, உங்களை நான் ஜெபத்தில் நினைவுகூர வேண்டுமென்று விரும்பினால், உங்கள் கைகளை உயர்த்தி, ''இப்பொழுது நான்...'' தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, பின்னால் உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. இங்கு நடுவில் உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. இந்த பக்கத்தில் உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. ''இப்பொழுது நான் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். அவர் எனக்கு நல்லவராயிருக்க விரும்புகிறேன்.'' மிகவும் பின்னால் உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. உட்பாதையின் பின்னால் உள்ள உன்னை நான் காண்கிறேன், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராகிலும் உண்டா? நீங்கள் எங்கிருந்தாலும் கையுயர்த்துங்கள். தலைகள் வணங்கியிருக்கட்டும். வாலிபப் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 187பின்னால் உள்ள சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ, உன் கையையுயர்த்தவில்லை. நேற்றிரவு ஆஸ்பத்திரியில் உள்ள உன் கணவரைக் காணச் சென்றிருந்தேன். அவர் மிகவும் மோசமான நிலையில் இருந்தார்; அங்கே அந்த சகோதரனின் சபையிலிருந்து. கவலைப்பட வேண்டாம், அவர் குணமாகிவிடுவார். நேற்றிரவு தேவன் அவரை அங்கேயே தொட்டார். அவருக்கு அதைக் கண்டு பிடிக்க நான்கு நாட்களாக அரும்பாடுபட்டனர். எக்ஸ்ரேக்களைக் கொண்டு அவர்களால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், பரிசுத்த ஆவியோ எக்ஸ்ரேவை விட ஆழமாக ஊடுருவக் கூடியவர். அவர் தேவனாயிருக்கிறார். அவர் நன்றாகிவிடுவார். அவர் இன்று ஒருக்கால் வீடு திரும்பலாம். 188சரி. வேறு யாராகிலும் உண்டா? மிகவும் பின்னால் உள்ள உன்னை, தேவன் ஆசீர்வதிப்பாராக. “நான் கிறிஸ்துவை, என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் ஆயத்தமாக விரும்புகிறேன். என் வீட்டின் நிச்சயமின்மை எனக்குத் தெரியும், என் வேலையின் நிச்சயமின்மை எனக்குத் தெரியும், என் வாழ்க்கையின் நிச்சயமின்மை எனக்குத் தெரியும். நான் எந்த நேரத்தில் மரிக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. ஒருக்கால் நான் இன்று மரிக்கலாம். எனக்குத் தெரியாது. அது நிச்சயமற்றது. ஆனால் எனக்கு நிச்சயமுள்ள சத்தம் வேண்டும். அதை நான் இன்று சுவிசேஷத்தின் மூலமாக, இயேசு கிறிஸ்து என்னை நேசிக்கிறார் என்பதை, நான் கேட்டேன். அவரை என் சொந்த இரட்சகராக, ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.'' கைகளையுயர்த்தாத யாராகிலும், இப்பொழுது உயர்த்த விரும்புகிறீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சரி. இதற்கு முன்பு கைகளையுயர்த்தாத வேறு யாராகிலும் உயர்த்த விரும்பினால், உங்கள் கைகளையுயர்த்தி, ''சகோ. பிரன்ஹாமே, என்னை ஜெபத்தில் நினைவு கூருங்கள்,'' என்று சொல்லுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சரி. 189பரலோகப் பிதாவே, இந்த ஜனங்கள் நிச்சயமுள்ள ஒரு சத்தத்தைக் கேட்டனர். இங்குள்ள அநேகர் இன்று காலை உம்மை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். இப்பொழுதும், பிதாவே, ஜெபிப்பதற்காக ஜனங்களை பீடத்தண்டை கொண்டு வருவது பாரம்பரியமான ஒன்று என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் அதுவேத ரீதியானதல்ல. ஏனெனில், ''அவரை விசுவாசித்தவர் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்,'' என்று வேதம் கூறுகிறது. எனவே பிதாவே, நிச்சயமுள்ள சத்தத்தின் மூலம் அது நீர் என்று உம்மை வெளிப்படுத்தித்தந்தீர் என்று விசுவாசிக்கும் இவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அவர்கள் உம்மை இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனர். அவர்களை நான் ஜெபத்தில் நினைவு கூர, அவர்கள் கைகளையுயர்த்தினர். ஓ தேவனே, நேரம் முடிவடைந்து கொண்டிருக்கிறது என்றும், விளக்குகள் இப்பொழுது அணைந்து கொண்டிருக்கிறதென்றும் நான் அறிந்திருக்கிறேன். அமெரிக்காவின் விளக்கு இப்பொழுது அணைந்து கொண்டிருக்கிறது. தேசங்களின் விளக்கு இப்பொழுது அணைந்து கொண்டிருக்கிறது, ஏனெனில், உலகத்தின் ஒளி உள்ளே வந்து கொண்டிருக்கிறது. தேவனே, இந்த மகத்தான ஒளியை அவர்கள் ஏற்றுக்கொள்ள நீர் உதவி செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். ஒளிக்கு முன்னால் இருள் எதுவும், இருக்க முடியாதென்பதை நாங்கள் உணருகிறோம். இருளைக் காட்டிலும் ஒளி அதிக சக்தி வாய்ந்தது! 190பதினைந்து, அல்லது பத்து மணி நேரத்துக்கு முன்பு இந்த கட்டிடம் மிகவும் இருட்டாயிருந்தது என்பதை அவர்கள் அறிவார்களாக. இங்குள்ள இருக்கை ஒன்றையும் காண முடியவில்லை. பத்து மணி நேரத்துக்கு முன்பு இக்கட்டிடத்தில் நள்ளிரவாயிருந்தது. ஆனால் சூரியன் உதயமான போது, இருள் எங்கு சென்றது? அதை எனக்கு கண்டுபிடித்து தாருங்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அதன் இரசாயனம் எங்கே? அதற்கு என்ன நேர்ந்தது? அதை கண்டுபிடிக்க முடியாது. அது போய்விட்டது. அப்படித்தான் இவர்களுடைய பாவங்களும் இப்பொழுது மறைந்துவிட்டன. இருபது நிமிடங்களுக்கு முன்பு இருள் அவர்களுடைய ஆத்துமாவை சூழந்திருந்தது. ஆனால் அவர்கள், உம்மை இப்பொழுது இரட்சகராக ஏற்றுக் கொண்டனர், ஆகையால் இருள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டது. ''அநேகமாயிருந்த உங்கள் பாவங்கள் கழுவப்பட்டு, இப்பொழுது அவை உறைந்த மழையைப் போல் வெண்மையாயின்.'' அவைகளை இப்பொழுது நீங்கள் காணவே முடியாது. அவை புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன. அவை தஸ்தாவேஜுகளிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவர்களுடைய பாவங்களை மன்னித்து விட்டது. அவர்கள் இப்பொழுது எழுந்து, இன்றிரவு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு, பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வார்களாக. பிதாவே, இதை அருளும். இன்று காலை அளித்த செய்தியில் கிடைக்கப்பெற்ற விருதுகளாக, அவர்களை உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். 191நமது தலைகள் இப்பொழுது வணங்கியிருக்கும் போது, கரங்களையுயர்த்தின ஒவ்வொருவரும், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், இன்றிரவு சபையில் ஆராதனை நடைபெறும். உங்களை அதற்கென்று ஆயத்தப்படுத்துங்கள். இன்று காலை போதகர் உங்கள் பெயர்களை எழுதிக்கொள்ளட்டும். சகோதரனே, இன்று காலை ஞானஸ்நானம் இருக்காது, இல்லையா? (சகோ. நெவில், இன்று காலையிலும் ஞானஸ்நானம் கொடுக்கிறோம், என்கிறார் - ஆசி). ஆம், காலையிலும், ஆராதனை முடிந்தவுடனே, ஞானஸ்நான ஆராதனை. வாருங்கள், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள, உடைகளை நாங்கள் உங்களுக்காக ஆயத்தமாக வைத்திருக்கிறோம். 192இப்பொழுது நீங்கள் கிறிஸ்தவர்கள். தேவனுடைய ஒளி உங்கள் இருதயத்தில் வந்துவிட்டது. அது எவ்வளவு நல்லதென்று யோசித்துப் பாருங்கள். இயேசு, ''என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளா விட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' என்று கூறியுள்ளார். நீங்கள் ஏன் கைகளை உயர்த்தினீர்கள்? ஏனெனில் ஏதோ ஒன்று உங்களை அப்படி செய்யும்படி தூண்டியது. உங்களை கைகளையுயர்த்தச் சொன்ன அவரே, ''என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு,'' என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அதைக் குறித்து நிச்சயமின்மை எதுவுமில்லை. இப்பொழுது நீங்கள், நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறீர்கள். அதை நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டீர்கள். நீங்கள் சதாகாலமும் உயிரோடிருப்பீர்கள். இப்பொழுது, உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்வதற்கென்றும், நீங்கள் அவருக்கென்று உழைப்பதற்காகவும், அவருடைய பரிசுத்த ஆவியை - தேவனுடைய வல்லமையை - இப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, அதை பெற்றுக் கொள்வீர்களாக. 193வியாதியாயிருந்து ஜெபித்துக்கொள்ள விரும்புகிறவர்கள்; உங்கள் எண்ணிக்கையை அறிய விரும்புகிறேன். நம்மால் முடியுமா இல்லையாவென்று... உங்கள் கைகையுயர்த்துங்கள், பகுத்தறிதலின் வரிசையை அமைக்கலாமா, வேண்டாமா என்று அறிய. அநேகம் பேர் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை அதிகம் - ஜெபித்துக் கொள்வதற்காக நூற்றைம்பது இருநூறு பேர் உள்ளனர். சரி. பகுத்தறிதலின் வரம் கிரியை செய்வதை எத்தனை பேர் கண்டிருக்கிறீர்கள்; உங்கள் கரங்களையுயர்த்துங்கள். சரி, எல்லோருமே, அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். இன்று காலை நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டதாக விசுவாசிக்கிறீர்களா? 194நான் சகோ. உட், சகோ. ஃபிரட்சாத்மன், இன்னும் சில தர்மகர்த்தாக்களை சிறிது நேரம் இங்கு வரும்படி அழைக்கப் போகிறேன். தர்மகர்த்தா சகோதரர்களே, அல்லது டீகன்மார் யாராயிருந்தாலும், சற்றுநேரம் இங்கு வாருங்கள். இங்கு நெருக்கமாக இருக்கப் போகிறது, நீங்கள் உதவி செய்ய விரும்புகிறேன். ஜெபித்துக்கொள்ள என் வலது பக்கத்தில் இருப்பவர்களே, இந்த பக்கத்தில் வரும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். சகோ. காலின்ஸ், அங்கு நில்லுங்கள். இந்த இடத்தில் வந்து நில்லுங்கள். அப்பொழுது ஜனங்கள் வந்து ஜெபித்துக்கொள்ள உதவியாயிருக்கும். 195பீடத்தின் இந்த பக்கத்திலுள்ள பிள்ளைகள், சில நிமிடங்கள் இந்த பக்கம் வரும்படி கேட்டுக்கொள்ளப் போகிறேன். சகோ. பிரன்ஹாமுக்காக அல்ல, கர்த்தராகிய இயேசுவுக்காக. சகோதரரே, இங்கே நில்லுங்கள். அப்பொழுது ஜனங்களால் உங்கள் வழியாக வரமுடியும். பிறகு நாம் எல்லோரையும் இந்த மறுபக்கம் கொண்டு செல்வோம். இங்குள்ள முதல் வரிசையிலிருந்து. சகோ. சார்லி, டேவிட், இன்னும் மற்றவர்கள் இங்கு வர விரும்பினால், அல்லது பின்னால் நகர விரும்புகிறீர்களா? இந்த வரிசையில் முதலில் உள்ளவர்கள், நாங்கள் ஜெபிக்கும் போது எழுந்து நில்லுங்கள். சுவற்றின் பக்கத்திலிருந்து தொடங்குங்கள். நாங்கள் தொடங்க ஆயத்தமாகும் போது, இப்பொழுதல்ல. இந்த பக்கத்திலுள்ளவர்கள் முடிந்த பிறகு, நீங்கள் அந்த பக்கம் சென்று, அந்த வழியாக வந்து கீழே செல்லுங்கள். தர்மகர்த்தாக்களும் மற்றவர்களும் உங்களை சரியான ஸ்தானத்தில் நிறுத்துவார்கள். 196அந்த ஸ்திரீ ஊனமடைந்து எழுந்திருக்க முடியாமல் போனால் - சக்கர காற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சிறு பெண், அங்கே உட்கார்ந்திருங்கள். நாங்கள் உங்களிடம் வருவோம், பாருங்கள். பின்னால் உள்ள சிறு ஈடித்தை எனக்குத் தெரியும். அவளை இங்கு கொண்டு வருவோம். எழுந்திருக்க முடியாதவர்களிடம் நான் வருவேன். நீங்கள் கேட்காமல் போனால், நாங்கள் இங்கு நின்று கொண்டு தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதனால் என்ன பயன்? பாருங்கள்? “கேட்டு விசுவாசிக்கிறவனுக்கு.'' கேட்பவனுக்கு. நீங்கள் ஆயத்தமா? நீங்கள் ஒவ்வொருவரும் தேவனிடத்தில் தனிமையில் பேசி, இது தேவனுடைய வார்த்தை. எனக்காக ஜெபிக்கப்பட்ட பிறகு, என் நிலைமை எப்படியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் எப்படியும் சுகமடைந்து விட்டேன்,'' என்று கூற ஆயத்தமுள்ளவர்களாயிருக்கிறீர்களா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி ) 197இன்று அநேகம் பேர் ஒன்றை எதிர் நோக்கியுள்ளனர். பின் படிக்கட்டில் நான் ஜெபம் செய்த அந்த ஸ்திரீ. நான் அவளைப் பார்த்து சொன்னேன், அது நிறைவேறினது. அவள், ''ஒரு மாதம் கடந்துவிட்டது. நான் பருமனாக வளர்ந்து கொண்டே போகிறேன்'' என்று கூறியிருந்தால், பாருங்கள்? இல்லை, இல்லை, அவள் அப்படிக் கூறவேயில்லை. அவள் ஒரு சத்தத்தைக் கேட்டாள். அந்த சத்தம் அவளிடம் உரைத்தது. அவள் அதை முழு இருதயத்தோடும் விசுவாசித்தாள். அந்த கட்டி, சிறிது கழிந்து, அமுங்கி விட்டது. இப்பொழுது அவள் நன்றாகவும், குணமடைந்தவளாகவும் இருக்கிறாள். லீயோ, எங்கேயிருக்கிறீர்கள்? அவர் இங்கு எங்காவது இருக்கிறாரா? அந்த ஸ்திரீயின் பெயர் எனக்கு மறந்துவிட்டது. யாருக்காகிலும் ஞாபகம் இருக்கக்கூடும். அவளுடைய முகவரி என்னிடம் உள்ளது. லீயோ, அவளுடைய பெயர் உமக்கு ஞாபகமுள்ளதா? (சகோ. லீயோ, ''பெர்ல், பெர்ல்....,'' என்கிறார் - ஆசி)? அது ரெட்ஃபோர்ட், அல்லது ரெட்ஃபர்னா? நீங்கள் அவளுக்கு எழுதிக் கேட்க விரும்பினால், அவளுடைய பெயரும், முகவரியும் எங்களிடம் உள்ளது. 198அவளுக்கு முப்பது பவுண்டைக்காட்டிலும் அதிக எடையுள்ள கட்டி இருந்தது. அவள் அங்கேயே குணமடைந்தாள். கத்தியினால் ஒரு கீறலும் அவள் மேல் படவில்லை. இதோ கட்டியுடன் அவளுடைய புகைப்படம்; இதோ அவள் இப்பொழுது ஒரு கீறலும், அவள் மேல் இல்லாமல் தேவன் அவளை குணமாக்கி அதை அவளிடமிருந்து எடுத்துப்போட்டார். ''புற்றுநோய் அவளுடைய சிறு நீரகங்களை அரித்துப் போட்டு மரித்துக் கொண்டிருக்கிறாள்,'' என்னும் மருத்துவரின் வாக்குமூலம் இதோ! அவள் மருத்துவரால் கைவிடப்பட்டாள். இப்பொழுது அவள் எவ்வித சிறுநீரகக் கோளாறுமின்றி, நன்றாக இருக்கிறாள். குணமடைந்த ஆயிரக்கணக்கானவர்களில் அவள் ஒருத்தி. அது என்ன? அது நிச்சயமற்ற சத்தம் அல்ல. நண்பனே, காரியம் என்னவென்றால், உன்னால் அந்த சத்தத்தைக் கேட்க முடிகிறதா? 199''சிலர் சுகமடைகின்றனர், சிலர் சுகமடைவதில்லை,'' என்று எக்காளம் விளங்காத சத்தமிட்டால் அது நிச்சயமற்றது. பாருங்கள், அதை விசுவாசிக்காதீர்கள். இயேசு, ''எவனாகிலும்'' என்றார். அது நிச்சயமுள்ளது. ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அவர்கள் மேல் கைகள் வைக்கப்படும் போது, அவர்கள் சொஸ்தமாவார்கள்.'' அதை இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், ''ஆமென் என்கின்றனர் - ஆசி). உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள். 200இப்பொழுது நான் போதகரை கேட்டுக்கொள்ளப் போகிறேன். இதைக் தொடர்ந்து ஞானஸ்நான ஆராதனை இருக்கும். எனவே, பாருங்கள், நமக்கு அதிக நேரம் இருக்காது. நான் சபையோருக்கு, இங்குள்ள வியாதியஸ்தர் ஒவ்வொருவருக்கும், ஜெபிக்கப் போகிறேன். நான் உங்களிடத்தில் வரும் போது.... நான் அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி.) அதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்களுக்குள் வரும். பாருங்கள்? நண்பனே, அது வந்தே ஆக வேண்டும். அதை நான் கூறவில்லை, நான் ஒன்றுமில்லை. நான்வெறும் நான் உங்கள் சகோதரன். 201நான் உங்கள் எல்லாரிலும் சிறியவன். நான் அப்படித்தான் இருக்க வேண்டும். உங்களில் சிறியவனாயிருக்கிறவன்... ''உங்களுக்கு வேலைக்காரனாயிருக்கக்கடவன், பாருங்கள். அப்படித்தான் நான் இருக்க விரும்புகிறேன். நான் உங்கள் வேலைக்காரன். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். நான் அவருடைய ஊழியக்காரன் மாத்திரமே. உங்களுக்கு பணிவிடை செய்ய முயல்கிறேன், பாருங்கள். நான் எல்லாரைப் பார்க்கிலும் சிறியவன். என்னில் ஒன்றுமில்லை. ஆனால், பாருங்கள், யாராகிலும் ஒருவர் உங்கள் மேல் கைகளை வைக்க வேண்டும். அவர் வார்த்தையை உங்களிடம் கொண்டுவர என்னை அனுமதிக்கிறார். வார்த்தை என்னிடம் வருகிறதென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். உங்களில் அநேகர் என்னை விசுவாசி என்றழைக்கிறீர்கள். வார்த்தை என்னிடம் வருகிறது. அது சரியா, இல்லையா என்று நீங்கள் சீர்தூக்கி பார்க்கிறீர்கள். தேவன் தம்முடைய வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாராக. அது அப்படியிருக்குமானால், அவருடைய ஒவ்வொரு வாக்குத்தத்தமும், உண்மையுள்ளதாய் இருக்க வேண்டும். அது அப்படித்தான் இருக்க வேண்டும். 202நோவா பேழையை உண்டாக்கிக் கொண்டேயிருந்தான். அவர்கள், ''அவன் ஒரு மூடமதாபிமானி. மேலே ஒன்றுமில்லை. உங்களுக்கு எப்படி மழை பெய்யும்?'' என்றார்கள். ''அதனால் ஒன்றுமில்லை. தேவன் தண்ணீரை அங்கு வைக்க முடியும்'' என்று சொல்லி, மரத்தை செதுக்கிக் கொண்டேயிருந்தான். வேறு யாரைக் குறித்து நான் பேசினேன்? மோசேயைக் குறித்து. அவன் எப்படி இராணுவத்தைக் கைப்பற்ற அங்கு சென்றான் என்று. அவனால் எப்படி எகிப்து முழுவதையும் கைப்பற்ற முடியும்? எண்பது வயது கிழவன், தன் மனைவி, பிள்ளை; அவன் எப்படி அதை செய்யப் போகிறான்? ''அது என் வேலையல்ல. அதைபோய் கைப்பற்று என்று தேவன் கூறினார். ஆகவே நான், அங்கு செல்கிறேன்.'' ''அவர்களை எப்படி பார்வோனின் கைகளிலிருந்து விடுவிக்கப் போகிறாய்?'' ''நான் நிச்சயமாக உன்னோடே இருப்பேன்.'' அதில் நிச்சயமின்மை எதுவுமில்லை. 203''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.'' அதில் நிச்சயமின்மை எதுவுமில்லை. நீங்கள் விசுவாசித்து, கைகள் உங்கள் மேல் வைக்கப்பட்டால், நீங்கள் நிச்சயம் சுகமடைய வேண்டும். அதை நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) ஜெபிக்கத் தெரிந்த ஒவ்வொவரும், உங்கள் தலைகளை வணங்கி மெளனமாக ஜெபிக்க விரும்புகிறேன், நான் இங்குள்ள துணிகளுக்காகவும், மற்றவைகளுக்காவும் ஜெபிக்கப் போகிறேன். ஏனெனில் நான், பரிசுத்த ஆவியன் சமூகத்தை உணருகிறேன். 204பரலோகப் பிதாவே, நாங்கள் ஒரு ஆராதனையை முடித்துக் கொண்டு மற்றொரு ஆராதனையில் பிரசங்கிக்கப் போகிறோம். கர்த்தாவே, அநேகர் இன்று காலை உம்மை ஏற்றுக்கொண்டனர். அநேகருடைய கரங்கள் உயர்த்தப்பட்டன. அவர்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்துள்ளனர். அந்த குறுகிய நேரத்தில் ஒரு சிறு வெளிச்சம் அவர்களை கடந்து சென்றது. அவர்களுடைய மனசாட்சியின் மேல் ஒரு மூச்சுத்திணறல் உண்டானது. அது என்ன? அவர்கள் மரித்துக் கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டனர். கோதுமை மணி நிலத்தில் விழுவது போல். முதலில் அது மூச்சுத் திணரி சாகின்றது. அதிலிருந்து ஜீவன் எழும்பி, மற்றொரு மணியைத் தோன்றச் செய்கின்றது. கர்த்தாவே, இன்று காலை, மரணத்தின் மூச்சுத் திணறல் அவர்களைக் கடந்து சென்றது. அப்பொழுது அவர்கள் விழித்தெழுந்து, சில நொடிகளில் கைதூக்கினார்கள். தேவனுடைய வார்த்தை அவர்களைத் திணறடித்தது. ஏதோ ஒன்று, ''நீ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டிருக்கிறாய். நீ ஒரு பாவி. நீ மரித்து நரகத்துக்குப் போவாய். நீ அழிந்து போவாய். நீ மறுபடியும் எழுந்திருக்கமாட்டாய்'' என்றது. மரணம் அவர்கள் மேல் வந்தது. ஆனால் ஒரு சத்தம், “நான் உன் இரட்சகர். வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்,'' என்றது. அவர்கள் கைகளை உயர்த்தி, ”அவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்,'' என்றனர். அப்பொழுது அவர்களுடைய ஆத்துமாவில் ஜீவன் எழுந்தது. அவர்கள் மறுபடியும் முளைத்து, வேறொரு கிறிஸ்தவனைத் தோன்றச் செய்கின்றனர். தேவனே, இப்பொழுது அவர்கள் இந்த கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீருக்குச் சென்று, அவர்களுடைய பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, அவர்கள் உலகத்தின் காரியங்களிலிருந்து தங்களை முழுவதுமாக விடுவித்து, இப்பொழுது முதல் கிறிஸ்துவைச் சேவிக்கப் போகிறார்கள் என்பதை ஜனங்கள் காணும்படி செய்வார்களாக. 205கர்த்தாவே, என் கைகளில் நான் அநேக உறுமால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அவை வியாதியஸ்தருக்கு அடையாளமாயுள்ளன. இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். வேதத்தில், ஒரு சமயம், இஸ்ரவேல் தங்கள் கடமையின் பாதையில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்று கொண்டிருந்த போது, சிவந்த சமுத்திரம் அவர்களுடைய பாதையில் குறுக்கிட்டது. தேவன் கோபக் கண்களுடன் மேகங்கள் வழியாக, அக்கினி ஸ்தம்பத்தின் வழியாக கீழே பார்த்த போது, சிவந்த சமுத்திரம் பயந்து போய் அவர்களுக்கு வழிவிட்டது. ஏனெனில் தேவன் அவர்களுக்கு வாக்கருளியிருந்தார். அது நிச்சயமற்ற சத்தம் அல்ல. தேவனுடைய வார்த்தை, நிச்சயமுள்ளது என்பதை சிவந்த சமுத்திரம் அறிந்து கொண்டது. இஸ்ரவேல் ஜனங்கள், அது நிச்சயமுள்ளது என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்றுக் கொண்டிருந்தனர். எதுவுமே அவர்கள் வழியில் குறுக்கிட முடியாது. ஏனெனில், தேவன் அதை வாக்கு பண்ணியிருந்தார். எனவே, சிவந்த சமுத்திரம் பயந்து போய், பின்னால் நகர்ந்தது. அதன் நடுவில் உலர்ந்த பாதையை அவர்களுக்கு அமைத்துக் கொடுத்தது. அவர்கள் உலர்ந்த தரையின் மேல் நடந்து சென்றனர். 206இப்பொழுது கர்த்தாவே, வியாதியாயுள்ள அநேக கிறிஸ்தவர் உள்ளனர். இதோ அவர்களுடைய உறுமால்கள். அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் எடுத்து வியாதியஸ்தர் மேல் போட்டதாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது. நாங்கள் பரி.பவுல் இல்லை. ஆனால் நீர் அதே தேவனாயிருந்து, அதே வார்த்தையையும், வாக்குத்தத்தத்தையும் கொண்டவராயிருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறோம். இந்த உறுமால்களை வியாதியஸ்தர்களுக்கும், அவதியுறுவோர்க்கும் நான் அனுப்பும் போது, அவர்களைக் கட்டிப்போட்டுள்ள பிசாசு பயந்துபோய், அவர்களை விட்டுச் செல்வானாக, தேவனுடைய பிள்ளைகள் நல்ல ஆரோக்கியம் என்னும் வாக்குத்தத்தத்துக்கு நடந்து செல்வார்களாக. இந்த கட்டிடத்தில் இப்பொழுது அநேகர் உள்ளனர். உம்முடைய போதகர், என் அருமை சகோ. நெவில், இன்று காலை இதோ இருக்கிறார். உம்முடைய டீகன்மார்களும், தர்மகர்த்தாக்களும் இதோ இங்கு நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் சபையின் நிர்வாகத்துக்கென அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். அவர்களை நீர் கிருபையாய் ஆசீர்வதித்து வருகிறீர். கர்த்தாவே, அதற்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் அல்ல. ஆனால் உம்முடைய ஆவி எங்கள் மத்தியில் அசைவாடுவதை நாங்கள் காண்கிறோம். அதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம். கடைசி முறையாக ஒரு எழுப்புதல் உண்டாவது போல் தோன்றுகிறது. ஓ தேவனே, நாங்கள் எங்களை எகிப்துக்கு விற்றுப் போட்டிருந்தோம், இப்போழுதோ வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு செல்லும் பாதையில் நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம். இன்னும் சில நாட்கள் பயணம் மாத்திரமே. அதன் பிறகு நாங்கள் யோர்தானை கடப்போம். இப்பொழுது, பிதாவாகிய தேவனே, எங்கள் வழியிலுள்ள ஒவ்வொரு தடங்கலையும் அகற்ற வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இங்குள்ள அநேகர் அணி வகுத்து செல்லும் நிலையில் இல்லை. அவர்கள் வியாதிப்பட்டு அவதியுற்றிருப்பதனால் இங்கு வந்துள்ளனர். இந்த வியாதி அவர்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு அணிவகுத்து சென்று கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஊனமுற்றவர்களாய் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நிலை அவர்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?அல்லேலூயா! தேவனே, எங்கள் கைகளை அவர்கள் சரீரங்களின் மேல் நாங்கள் வைக்கும்போது, பிசாசு பயந்து போய் பின்வாங்கிப் போவானாக. அவர்கள் அணிவகுத்து செல்லும் நிலையை அடைவார்களாக. 207இன்று காலை முழுவதும் நான் பேசின அந்த ஸ்திரீக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். அவளை என் மனதை விட்டு, அகற்ற முடியவில்லை. அந்த பெரிய கட்டி இருந்த காரணத்தால் அவளால் நிற்கக்கூட முடியவில்லை. மருத்துவர்கள் அவளை கேலி செய்தனர். ஆனால் அவள், ஒரு சத்தத்தைக் கேட்டாள். அது நிச்சயமற்ற சத்தம் அல்ல. அது நிச்சயமுள்ள சத்தம். அவள் அதை விசுவாசித்தாள். இப்பொழுது, பிதாவே, இங்குள்ள ஒவ்வொரு வியாதியஸ்தரும் அதைக்கண்டு, அதே சத்தத்தை இன்று காலை கேட்டு, அணி வகுத்து செல்லக் கூடிய நிலையை அடைந்து, பயணத்துக்கு புறப்படுவார்களாக. கர்த்தாவே, அதை அருளும். நாங்கள் மூட்டை கட்டி ஆயத்தமாயிருக்கிறோம். ஓ, கர்த்தாவே, நாங்கள் அணிவகுத்து செல்ல ஆயத்தமாயிருக்கிறோம். நாங்கள் வனாந்தரத்தில் பிரயாணம் செய்து, யோர்தானைக் கடக்க ஆயத்தமாயிருக்கிறோம். இன்னும் சில நாட்கள் பயணம் மாத்திரமே, பிறகு நாங்கள் அங்கிருப்போம். தேவனே, நாங்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையில் செல்ல அருள் புரியும். அந்த ஒளி பிரகாசித்து, எங்களை வழியில் நடத்தும் போது, அந்த பரிபூரணமான நாள் வரைக்கும் உயிர்த்தெழுந்த கிறிஸ்து பிரகாசிக்கும் போது, நாங்கள் எப்பொழுதும் அங்கிருப்போமாக. பிதாவே, இதை அருளும். 208இப்பொழுது எங்கள் கைகளை நாங்கள் அபிஷேகிக்கும் போது; எங்களை நீர் அபிஷேகித்து, எங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி பிரகாசிக்கும் படி அருள் புரியும். அந்த விண்வெளி வெளிச்சம்... தேவனுடைய வெளிச்சம், வியாதியஸ்தரின் பலவீன சரீரங்களில் பிரகாசித்து அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக. கர்த்தாவே, நாங்கள் பிசாசை சந்திக்க முன் வருகிறோம். நாங்கள் சிவந்த சமுத்திரத்தை சந்திக்க முன் வருகிறோம். சிவந்த சமுத்திரம் இஸ்ரவேல் ஜனங்களை வழி மறித்தது போல, இப்பொழுது வியாதி என்னும் சமுத்திரம் இவர்களை வழிமறித்து, அணிவகுத்து செல்லக் கூடாதபடிக்கு தடை செய்கிறது. நாங்கள் பிசாசை சந்திக்க, எங்களுக்கு முன்னால் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பரிசுத்த ஆவியுடன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் முன் வருகிறோம். வியாதி பயந்து பின்னால் நகர வேண்டும். ஏனெனில், உம்முடைய வார்த்தையின் வல்லமையின் வழியாய் நீர் கீழ் நோக்குகிறீர். அவர்கள் சுகமடைய வேண்டும். சத்துருவை சந்திக்க, நாங்கள் இயேசுவின் நாமத்தில் வருகிறோம். ஆமென்.